தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 16:13,14

மோவாபைக்குறித்து அக்காலத்திலே கர்த்தர் சொன்ன வார்த்தை இதுவே.

ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த மூன்று வருஷங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் மகா ஜனக்கூட்டமும் சீரழிந்துபோம்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று கர்த்தர் இப்பொழுது சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் உலக பெருமைகளை விட்டு மனந்திரும்பி கர்த்தருக்குள் இரட்சிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் உயிர்பெற்று வாழ வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 3:1-18 

யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருஷத்தில் ஆகாபின் குமாரனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல; தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்.

என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்.

மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக்கடாக்களையும் செலுத்திவந்தான்.

ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான்.

அக்காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் இலக்கம் பார்த்துப்போய்:

மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.

எந்த வழியாய்ப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்தரவழியாய் என்றான்.

அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.

அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்.

அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள்.

எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.

அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,

அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.

நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருஷத்தில் ஆகாபின் குமாரனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம் பண்ணி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான்; ஆனாலும் தன் தகப்பனை போலும், தாயைப் போலும் அல்ல தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றி விட்டான்.  யோராம் இஸ்ரவேலை பாவஞ்செய்யப் பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின பாவங்களை அவன் விட்டு விலகாமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்.  மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுகுட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக்குட்டிகளையும் செலுத்தி வந்தான்.  ஆகாப் இறந்துப் போனபின்பு மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாக கலகம் பண்ணினான். யோராம் என்னும் இஸ்ரவேலின் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு வந்து இஸ்ரவேலையெல்லாம் இலக்கம் பார்த்து மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய் கலகம்பண்ணினான்; மோவாபியர் மேல் யுத்தம்பண்ணும்படி யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை அழைத்தனுப்பினதற்கு அவன் சொன்னது; நான் வருகிறேன்; நான் தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள்; என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.  மேலும் அவர்கள் ஏதோம் வனாந்திர வழியாய் போனார்கள்.  அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவும், ஏதோமின் ராஜாவும் சேர்ந்துப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழு நாள் சுற்றி திரிந்த போது, அவர்களை பின் செல்லுகிற ராணுவத்திற்கும், மிருக ஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற் போயிற்று.  அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா சொன்னது : ஐயோ கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியர் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான். அப்பொழுது யோசபாத்  சொன்னது நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி தீர்க்கதரிசிகள் யாராவது உண்டா என்று கேட்டதற்கு; எலியாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாக்களின் ஊழியக்காரரில் ஒருவன் சொன்னான். 

2 இராஜாக்கள் 3:13 

எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.

மேற்கூறிய வார்த்தைகளை எலிசா சொன்னதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக் கொடுக்கிறதற்கு வரவழைத்தார்  என்றான்.  அதற்கு எலிசா சொன்னது 

2 இராஜாக்கள் 3:14-18 

அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி,

அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள்.

நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.

மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது நம் நாவில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவருடைய சத்திய வசனங்களை நம்முடைய உள்ளத்தில் உண்மையாக ஏற்றுகொள்ளும் போது, கர்த்தருடைய ஆவியானவர் நம்மில்  இறங்கி வருவார்.  அப்போது நமக்கு எதிராக வருகிற பொல்லாத சத்துருக்களாகிய மோவாபிய  கூட்டத்தாரை கர்த்தர் நம்முடைய கையில் ஒப்புக்கொடுப்பார் என்பதனை கர்த்தர் எலிசாவைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  மேலும் யோராமை போல யெரொபெயாம் செய்த பாவங்களை போல நாம் விக்கிரங்களை சேவிப்போமானால் கர்த்தர் நம்மேல் இரக்கம் காண்பிக்கமாட்டார்.  ஆனால் யூதாவின் ராஜாவை போல செம்மையானவைகளை செய்வோமானால் நம்மில் பரிசுத்த ஆவியானவர் நீர்கால்களாக வெளிப்படுவார்.  அப்போது நாம் புசிப்பதற்கும் குடிப்பதற்கும் உரிய ஆகாரம் பரலோகத்திலிருந்து நமக்கு அனுகூலமாக வரும்.  அப்படியாக நாம் கர்த்தரை பின்பற்றுபோமானால் நம் உள்ளத்தை மோவாபிய கிரியைகளாகிய  உலக பெருமை, உலகத்தின் மேன்மையான எண்ணங்கள் இவைகளை தேவன் நம்மை விட்டு மாற்றுகிறார்.  அப்போது நாம் கர்த்தருக்குள் மனம்திரும்பி இரட்சிக்கப்படுவோம். இவ்விதமாக நாம் கர்த்தருக்குள் மனந்திரும்பி இரட்சிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.