தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 16:5, 6

கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்.

மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் பெருமைகள் அகற்றப்படுதல் - திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில் மணவாட்டி சபையாகிய நாம் உலக பெருமைகளை விட்டு, மனந்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 3:19 - 27

நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.

மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று.

தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல்தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக்கொண்டு வந்து எல்லையிலே நின்றார்கள்.


மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது.

அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.

அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறியஅடித்து,

பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலேமாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது, கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.

யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டு போனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று.

அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாக பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எலிசா இஸ்ரவேல் யூதா ராஜாவிடம் மோவாபை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றும், நீங்கள் சகல கோட்டைகளையும், சகல சிறந்த  பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கி கெடுப்பீர்கள் என்றான்.  மறுநாள் காலமே பலிசலுத்தப்படும் நேரத்தில், இதோ தண்ணீர் ஏதோம் தேச வழியாய் வந்ததினாலை தேசம் தண்ணீரால் நிரம்பிற்று.  தங்களோடு யுத்தம் பண்ணுகிற ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபொழுது, அவர்கள்,ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும்,அதற்கு மேல்தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக் கொண்டு வந்து எல்லையிலே நின்றார்கள். அவர்கள் அதிகாலையில் பார்த்தபோது சூரியன் தண்ணீர் மேல் பிரகாசித்ததினால், அந்த தண்ணீர் அவர்களுக்கு இரத்தம் போல் சிவப்பாய் காணப்பட்டது.  இதனை கண்ட மோவாபியர் நினைத்தது என்னவென்றால் அவர்கள் ஒருவரை வெட்டி மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.  அவர்கள் கொள்ளையாடும்படி இஸ்ரவேலரின் பாளயத்திற்கு வந்த போது;இஸ்ரவேலர்கள் அவர்களுக்கு முன்பாக எழும்பி, அவர்கள் ஓடிப்போகதக்கதாக முறிய அடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இடிக்கப்படாதிருக்கிற போது; கவண்காரர் அதை சுற்றிக்கொண்டு சேதப்படுத்தினார்கள்.  மோவாபிய ராஜா யுத்தம் மும்முரமாகிறது என்று கண்டு ஏதோமின் ராஜாவின் மேல் விழுகிறதற்கு பட்டயம் உருவிகிற எழுநூறுபேரைக்கூட்டிக்கொண்டு போனான்.  ஆனாலும் அவர்களால் கூடாமற் போயிற்று.  ஆதலால் அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்ட புத்திரனை பிடித்து , அலங்கத்தின் மேல் அவனை பலியிட்டான்.  ஆதலால்  இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால் அவனை விட்டு புறப்பட்டு தங்கள் தேசத்திற்கு திரும்பி விட்டர்கள். 

பிரியமானவர்களே, மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளை தியானிக்கும் போது; எவ்விதம் கிறிஸ்து நம்முடைய உள்ளத்தில் இருந்த உலக பெருமைகளை அழித்து, இரட்சிக்கிறார் என்பதனைதிருஷ்டாந்தபடுத்துகிறார்.  மோவாபியராகிய பெருமைக்காரர்கள் தாங்கள் எதனை முதன்மையாக நினைத்து தங்களுக்குள் பெருமைபட்டுக்கொண்டிருந்தார்களோ, அந்த காரியத்தை, அவர்கள் கர்த்தருடைய நாமத்திற்கென்று கொடுத்து விடும்போது அவர்களுடைய பெருமைகள் நீக்கபட்டு, கிறிஸ்து உள்ளத்தில் வந்து அவர்களை இரட்சிக்கிறார்.  இவர்கள் இரட்சிக்கப்பட்டது எப்படியென்றால், தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தையை கர்த்தர் நிறைவேற்றுகிறார்; அவருடைய ஜீவ தண்ணீராகிய அவருடைய  வசனத்தால்.  அந்த வசனம் அவர்களில் கடந்து செல்லும் போது அது கிறிஸ்துவின் இரத்தமாகிறது அந்த இரத்தம் அவர்களுடைய பாவங்களை கழுவி சுத்திகரிக்கும்.  அப்படியாக சுத்திகரிக்கும் போது அவர்களுடைய எல்லா பழைய வாழ்க்கையின், பாரம்பரிய பெருமைகள் அழிக்கப்பட்டு புதிய ஒரு உள்ளம் அவர்களில் வரும்படியாக கர்த்தர் பல நெருக்கங்களுக்குட்படுத்துகிறார்.  அந்த நெருக்கங்களினால் நிற்கமுடியாத சூழ்நிலமை வரும் போது, அவர்களில் பெருமையாக, மேன்மையாக வைக்கப்பட்ட காரியங்களை கர்த்தருக்கென்று  ஒப்புக்கொடுக்கிறார்கள். இவ்விதமாக அவர்களில் இருந்த பெருமைகள் மாற்றப்படுகிறது.  இவ்விதமாக நாமும் சகல பெருமையான நினைவுகளை விட்டு நம்மை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.