தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 6:27
அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தேவ பெலனடைந்து கர்த்தரின் வேலையை செய்வோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் மட்டுமல்ல, நம்முடைய அயல் வீட்டுக்காரர்களும் ஜீவன் பெற்றுக்கொள்ள உதவியாயிருக்க வேண்டும்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 4:8-25
பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.
அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
ஒருநாள் அவன் அங்கே வந்து, அந்த அறைவீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.
அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.
அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.
அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.
அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.
அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.
அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள்.
அந்தப் பிள்ளை வளர்ந்தான், ஒருநாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனண்டைக்குப் போயிருக்கும்போது,
தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய்விடு என்றான்.
அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.
அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக்கொண்டுபோய்,
தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு, வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.
அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போக வேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,
கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,
கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனுஷன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் எலிசா சூனேமுக்கு போயிருக்கும் போது, கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம் பண்ணும்படி வருந்தி கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வரும்போதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான். அவள் தன் புருஷனிடம், இதோ; எப்போதும் நம்மிடத்தில் வந்து போகிற தேவனுடைய மனுஷர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். ஆதலால் நாம் மெத்தையின் மேல் ஒரு சிறிய அறை வீட்டைக்கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும் போது அங்கே தங்கலாம் என்றாள். அப்படியாக ஒரு நாள் அங்கே வந்து அறைவீட்டிலே தங்கி அங்கே படுத்துக்கொண்டிருந்தான். அவன் தன் வேலைகாரனாகிய கேயாசியிடம் சூனேமியாளை அழைத்துக்கொண்டு வா என்றான்; அவன் அப்படியே அழைத்துக் கொண்டு வந்தான்; அவள் வந்து அவனுக்கு முன்பாக நின்றாள். அவன் கேயாசியைப் பார்த்து; இதோ இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? ராஜாவினிடத்திலாவது, சேனாபதியினிடத்திலாவது பேச வேண்டிய காரியம் என்ன உண்டு என்று அவளிடம் கேள் என்று சொன்னதற்கு; அவள் என் ஜனத்தின் நடுவிலே சுகமாய் குடியிருக்கிறேன் என்றாள். பின்பு அவளுக்கு செய்ய வேண்டியது என்ன என்று கேயாசியைக் கேட்டதற்கு, அவளுக்கு பிள்ளை இல்லை; அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான். அப்போது எலிசா அவளை கூப்பிடு என்று கேயாசிடம் சொன்னான். கேயாசி அவளைக் கூப்பிட்ட போது அவள் வந்து வாசற்படியிலே நின்றாள். அப்போது தேவனுடைய மனுஷனாகிய எலிசா அவளிடம் ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்று சொல்லும் போது அவள் சொல்கிறாள் தேவனுடைய மனுஷனே உமது உடியாளுக்கு அபத்தம் ஒன்றும் சொல்ல வேண்டாம் என்றாள். ஆனால் தேவனுடைய மனுஷன் சொன்ன தேவ வார்த்தையின் படியே; அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, உற்பத்திகால திட்டத்தில் ஒரு குமாரனை பெற்றாள். அந்த பிள்ளை வளர்ந்தான், ஒரு நாள் அவன் அனுப்பறுகிறவர்களிடத்தில் போயிருந்த போது அவன் தன் தகப்பனிடம் தன் தலை நோகிறது, என் தலை நோகிறது என்று சொன்னான் அப்போது அவன் தன் வேலைக்காரனிடத்தில் சொல்லி குழந்தையின் தாயினிடத்தில் அனுப்பி விட்டான். அவனை எடுத்து தன் தாயினிடத்தில் கொண்டு போன போது; அவன் மத்தியானமட்டும் தாயின் மடியிலிருந்து செத்துப் போனான். அப்பொழுது அவள் வீட்டின் மேல் ஏறிப்போய் அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின் மேல் வைத்து விட்டு கதவை பூட்டிக்கொண்டு போய்; தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி; அவள் சொன்னது நான் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய் வரும்படிக்கு வேலைக்காரரில் ஒருவனையும், ஒரு கழுதையையும் எனக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்ல சொன்னாள். அப்பொழுது அவன்: இது அமவாசியும் அல்ல, ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்திற்கு போக வேண்டியது என்ன என்று கேட்க சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போக வேண்டியதிருக்கிறது என்று சொல்லியனுப்பி, கழுதையின் மேல் சேணம் வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டு போ; நான் உனக்குச் சொன்னாலொழிய வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லி புறப்பட்டு கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்கு போனாள்; தேவனுடைய மனுஷன் தூரத்திலே அவளைக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியை பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை தியானிக்கும் போது முந்தின வார்த்தைகள் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறது எதற்கென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் வந்து போஜனம் பண்ணுகிறார் என்பதும்,
லூக்கா 7:34
மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
மேற்கூறிய வசனங்களில் உள்ள பிரகாரம், நம்முடைய உள்ளமாகிய வீட்டில் வந்து போஜனம் பண்ணுகிறார் என்பதனை விளக்குகிறது. இதனை குறித்து
வெளி 3:20,21
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
மேலும் நம்முடைய உள்ளத்தில் அவர் வந்து போஜனம்பண்ணி நமக்கு இளைப்பாறுதலையும், கிருபையையும், ஆத்தும போஜனத்தையும் தந்து நம்மை ஆசீர்வதிக்கும் போது நமக்குள் ஒரு புதிய சிருஷ்டியையும் உருவாக்கி ஆசீர்வதிக்கிறார். அவ்விதம் நம்முடைய ஆத்துமாவில் கிறிஸ்துவின் சாயல் தோன்றினால் அதன் வளர்ச்சிக்காக காத்திருந்து கிருபை பெற்றுக்கொண்டு; அதற்கு பின் கிருபையில் வளருகிறவர்களாக இருந்து தேவ பெலனடைய வேண்டும். அதன் பின்பு தான் நாம் ஆத்துமா அறுவடையாகிய கர்த்தரின் வேலையை செய்ய தொடங்க வேண்டும். ஏனென்றால் தேவ பெலன் பெற்றுக்கொள்ளும் முன்பாக நாம் கர்த்தரின் வேலையை செய்வோமானால் அந்த மகன் சொன்னது போல் தலை நோகிறது, தலை நோகிறது என்கிறோம்; அது நமக்கு ஒரு பொல்லாத தலை பாரமாக வந்து தாங்க முடியாமல் ஆத்துமா இளைப்படைந்து செத்து போகிறது. அப்படியாக இருக்குமானால் கொடுக்கப்பட்ட காரியங்களை உணர்ந்துக்கொண்டு நாம் மீண்டும் நம்முடைய விசுவாச ஓட்டத்தை துவக்கி கர்த்தரிடத்தில் வந்து சேர்ந்து; மீண்டும் நம்முடைய வாழ்வை புதுபித்துக் கொண்டு ஜீவன் பெறும்படியாக ஓடுவோம். இவ்விதமாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.