தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 38:21 

கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா மரித்தால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் நம்மை உயிர்பிக்கிறவர்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவில் தேவ பெலனடைந்து கர்த்தரின் வேலையை செய்ய வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 4:24-37 

கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,

கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனுஷன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள்.

நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகந்தான் என்று சொல்லி,

பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான்.

அப்பொழுது அவள், நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.

அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவன் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும் போய், என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றான்.

பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.

கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டுவந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.

எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான்.

. உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து,

கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது.

அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.

அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது ; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டு போ என்றான்.

அப்பொழுது அவள் உள்ளே போய், அவன் பாதத்திலே விழுந்து, தரைமட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் உள்ளபடியே சூனேமியாள் தன்னுடைய செத்துப்போன குமாரனை மேல் வீட்டில் வைத்து கதவை பூட்டிக்கொண்டு, கர்மேல் பர்வதத்திலிருக்கிற  தேவனுடைய மனுஷனிடத்தில் ஏறிப்போனாள்; அவள் ஏறி வருகிறதை தூரத்திலே தேவனுடைய மனுஷன் கண்டு தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள். நீ அவளுக்கு எதிர்ககொண்டு எல்லாருடைய சுகசெய்தியை விசாரி என்று சொல்லி அனுப்புகிறான்.  அப்படியாக விசாரிக்க சொன்னது போல் எல்லாரும் சுகந்தானா என்று விசாரிக்கிறான்; அதற்கு அவள் சுகந்தான் என்று சொல்லி, பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து அவன் காலைப்பிடித்துக்கொள்ளும் போது கேயாசி அவளை விலக்கி விட வரும்போது; தேவனுடைய மனுஷன் கேயாசியிடம்; அவளை தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அதை அறிவியாமல் மறைத்து வைத்தார் என்றான்.  அவள் தேவனுடைய மனுஷனிடத்தில் கேட்டது என்னவென்றால்; நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை கேட்டதுண்டோ? எனக்கு அபத்தம் சொலல வேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.  அதற்கு தேவனுடைய மனுஷன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனை சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவனும் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும் போய், என் தடியை அவன் முகத்தின் மேல் வை என்றான்.  ஆனால் அவளோ நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும், உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்கிறேன் என்றாள்.  அப்பொழுது அவன் எழுந்து அவள் பின்னே போனான்.  ஆனால் கேயாசி எழுந்து அவர்களுக்கு முன்னே போய், அந்த தடியை அவன் முகத்தின் மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை.  ஆகையால் அவன் திரும்பி தேவனுடைய மனுஷனுக்கு எதிர்கொண்டுவந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தபோது, எலிசா வீட்டுக்குள் வந்தான்.  அப்போது பிள்ளை கட்டிலின் மேல் செத்துகிடந்தான்.  பின்பு உள்ளே போய் தங்கள் இருவருக்கும் பின்னாக கதவைபூட்டிக்கொண்டு கர்த்தரை நோக்கி  வேண்டுதல் செய்து, கிட்டே போய், தன் வாய் பிள்ளையின் வாயின் மேலும், , தன் கண்கள் அவன் கண்களின் மேலும் தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின் மேலும் படும்படியாக அவன் மேல் குப்புற படுத்துக்கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது.  அவன் எழுந்து அறை வீட்டிற்குள் இங்கும், அங்கும் உலாவி திரும்ப போய் குப்புற படுத்துக்கொண்டான்.  அப்பொழுது அந்த பிள்ளை ஏழுதரம் தும்மி கண்களை திறந்தான்.  பின்பு அவன் கேயாசியை கூப்பிட்டு; அந்த சூனேமியாளை இங்கே அழைத்து வா என்று சொல்லி; அவன் அழைத்து வந்த போது, அவன் உன் குமாரனை எடுத்துக்கொண்டு போ என்றான்.  அப்பொழுது அவள் உள்ளே போய், அவன் பாதத்திலே விழுந்து, தரை மட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற கர்த்தருடைய வார்த்தைகளின் கருத்துக்கள் என்னவென்றால் நம்முடைய ஆத்துமா செத்துகிடந்தால் நாம் அப்படியே இருந்து விடாதபடி மீண்டும் உயிர்பிக்கபட வேண்டும் என்ற உணர்வு நம்மெல்லாருக்கும் இருக்க வேண்டும்.  அப்படியாக ஆத்துமாவில் ஜீவனில்லாமல் செத்தவர்கள் உயர்ந்த பர்வதத்தில் ஏறுகிறவர்களாக (பரிசுத்தபடுதல்) பரிசுத்தருடைய பாதத்தில் விழுந்து மன்றாடுகிறவர்களாக இருப்போமானால், கர்த்தர் தம்முடைய ஊழியகாரர்களை மூலம் அவருடைய வசனங்களை நமக்கு தந்து, பின்பு அதனை ஏற்றுக்கொள்ளும்போது, கர்த்தரே நம் ஆத்துமாவில் வந்திறங்கி அவருடைய வாய் நம்முடைய வாயாகவும், அவருடைய கண்கள் நம்முடைய கண்களாகவும், அவருடைய உள்ளங்கை நம்முடைய உள்ளங்கையாகவும் இருந்து நம்மில் அவருடைய அனல் வீசுகிறது; அந்த அனலினால் ஏழு வித ஜாதிகளை நம்மை விட்டு துரத்திவிடுகிறார் என்பதனை அந்த பிள்ளை ஏழுதரம் தும்மி கண்களை திறந்தான் என்று திருஷ்டாந்தப்படுத்துகிறார்.இவ்விதமாக ஏழுவித பிசாசுகள் நம்முடைய ஆத்துமாவில் இருந்து துரத்தப்படும் போது, ஆத்துமாவின் கண்கள் திறக்கப்பட்டு உயிரடைகிறது. இவ்விதமாக கர்த்தர் நம்முடைய ஆத்துமாவை உயிர்பித்து எழுப்புகிறார்.  இதனை வாசிக்கிற கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வை சோதித்தறிந்து ஆத்துமா மரித்திருக்குமானால் கர்த்தரிடத்தில் நம்மை மீண்டும் ஒப்புக்கொடுத்து உயிர்ப்பிக்கப்படுவோம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.