தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1 கொரிந்தியர் 10:21
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அப்பத்தின் பாத்திரமாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா மரித்தால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் நம்மை உயிர்பிக்கிறவர் என்பதனை குறித்து திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 4:38-44
எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான்.
ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடி நிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது.
சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக்கூடாமல்: தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று.
பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான்.
அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.
மேற்கூறப்பட்ட வசனங்களில் எலிசா கில்காலுக்கு இறங்கி போயிருக்கையில் தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைகாரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்து தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கு கூழ்காய்ச்சு என்றான். அப்போது ஒருவன் கீரைகள் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதின் காய்களை மடி நிறைய அறுத்து வந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்கு தெரியாதிருந்தது. அதனை அவர்களுக்கு வார்த்தார்கள். அவர்கள் சாப்பிடும் போது, அதை சாப்பிடக்கூடாமல் தேவனுடைய மனுஷனே பானையிலே சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள். அப்பொழுது அவன் மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதை பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி வார் என்றான்; பின்பு பானையிலே தோஷம் இல்லாமற் போயிற்று. பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற் கோதுமையின் இருபது அப்பங்களையும், தாள் கதிர்களையும் கொண்டு வந்தான்; அப்பொழுது அவன் ஜனங்களுக்கு சாப்பிடக் கொடு என்றான். அதற்கு பணிவிடைக்காரன்; இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்ற போது; அவன் சொன்னது சாப்பிடக்கொடு; சாப்பிட்ட பிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்கிறார் என்றான். அப்பொழுது இவர்கள் முன்பாக வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.
பிரியமானவர்களே முந்தின வசனங்களில் எழுதபட்டிருக்கிறது என்னவென்றால் தேவனுடைய மனுஷனாகிய எலிசா கில்காலுக்கு இறங்கி வந்திருக்கும் போது அந்த தேசத்திலே பஞ்சம் உண்டானதால், தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனிடத்தில் வந்தார்கள். அவர்கள் அவனிடத்தில் வந்தது, நமக்கு திருஷ்டாந்தபடுத்தி தருகிறாரென்றால் கர்த்தர் நம்மை எகிப்திலிருந்து அழைத்து வந்த பின்பு, நம்மிடம் தேவ வசனத்தின் மிகுதியில்லாமல் இருப்பது நம்முடைய ஆத்துமா பசியாயிருக்கிறது என்றும், அதனால் கர்த்தர் நியாயதீர்ப்பாக கூழ்காய்க்க சொல்கிறார். இதன் காரணம் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் தேவனுக்குரிய கனிகள் கொடாத காரணத்தால் அங்கு பஞ்சம் உண்டாகிறது. கூழ் என்பது மாம்சத்தின் செயலைக் காட்டுகிறது, இது தேவனுடைய நியாயதீர்ப்பு. கூழ்காய்க்கும்படியாக கீரைகளை பறிக்க போனவன் பேய்கொம்மட்டிக்கொடிகளில் உள்ள காய்களை மடி நிறைய அறுத்துக்கொண்டு வருகிறான் என்றால், அது ஆத்துமாவில் உள்ள மாம்சத்தின் சிந்தையை காட்டுகிறது. இப்படிதான் அநேக கர்த்தரின் ஊழியக்காரர்கள் வஞ்சிக்கப்பட்டு, தான் புசிப்பது என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள். அவ்விதம் புசித்து ஆத்துமா சாகிறது என்பதனை அறியும் வண்ணமாக கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் கர்த்தரின் இந்த நியாயதீர்ப்பிலிருந்து நாம் தப்பித்து கொள்ள வேண்டும். அப்படியாக நாம் தப்புவிக்கபடும் படி தேவன் நமக்கு வழிகாட்டுகிற திருஷ்டாந்தம்; எலிசா மாவை கொண்டுவர சொல்லி அதனை காய்ச்சி வார் என்ற போது; அவர்களுடைய தோஷம் இல்லாமற் போயிற்று. மாவானது சத்திய வசனம் என்றும்; நாம் ஏற்றுக்கொண்டால், சாவு நீங்கி பிழைத்திருப்போம் என்பதும் குறிப்பிடபட்டுள்ளது. பின்பு நாம் பார்க்கும்போது முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும், தாள் கதிர்களையும் என்று கூறப்பட்டதின் கருத்து என்னவென்றால்; கிறிஸ்துவின் சுவிசேஷ வசனங்களாகிய இருபது அப்பங்களை, அவரால் மீட்கப்பட்டவர்களாகிய பூரண கிருபை உள்ளவர்களால் நூறு பேருக்கு அதிகமாக பகிர்ந்துக்கொடுக்கவும், பின்னும் அவர்களிடம் மீதியானவைகளும் உண்டாயிருந்தது என்று பார்க்கிறோம். இவற்றிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவென்றால் கர்த்தர் ஆசீர்வதிக்கிற அப்பமாகிய ஜீவ வசனம் மிகவும் அதிகமாக வர்த்திக்கும். ஆதலால் நாம் கர்த்தரின் ஆசீர்வாதமாகிய அப்பத்தின் பாத்திரமாக பூரண கிருபையுள்ளவர்களாக மாறும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.