தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மத்தேயு 18:3
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய பாவங்களை நீக்கும்படி ஏழு தடவை சுத்திகரிப்பில் நாம் தூய்மையாகுதல்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அப்பத்தின் பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 5:1-14
சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.
சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.
அப்பொழுது அவன் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தான்.
அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது போகலாம், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிருபம் தருகிறேன் என்றான்; அப்படியே அவன் தன் கையிலே பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்னையும், பத்து மாற்றுவஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய்,
இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது.
இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கிவிடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்கச் சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.
இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான்.
அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.
அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச் சொன்னான்.
அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப் போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.
நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான்.
அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.
அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.
மேற்கூறிய வசனங்களில் சீரிய ராஜாவின் படைதலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக்கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பை கட்டளையிட்டார். மகா பராக்கிரமசாலியாகிய அவன் குஷ்டரோகியாயிருந்தான். சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு வந்து இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுப்பெண்ணை சிறைப்பிடித்து வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்கு பணவிடை செய்துக் கொண்டிருந்தாள். அவள் ஒரு நாள் தன் நாச்சியாரை பார்த்து சொன்னது என்னவென்றால் என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்ரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள். அப்பொழுது அவன் போய், இஸ்ரவேல் தேசத்துப்பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தான். அப்பொழுது சீரியாவின் ராஜா, நல்லது போகலாம், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிருபம் தருகிறேன் என்றான். ஆனால் அவனுடைய கையில் பத்து தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறை பொன்னையும், பத்து மாற்று வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு போய் இஸ்ரவேல் ராஜாவினிடத்தில் அந்த நிருபத்தை கொடுத்தான். இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டு வருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது. இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்த போது தன் வஸ்திரத்தை கிழித்துக்கொண்டு சொன்னது என்னவென்றால் ஒரு மனுஷனுடைய குஷ்டரோகத்தை நீக்கிவிட வேண்டும் என்று, அவன் என்னிடத்திற்கு நிருபம அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? என்று சொல்லி என்னை விரோதிக்கச் சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களை கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனுஷன் கேட்ட போது, அவன் சொன்னது இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டு என்பதை அறிந்துக்கொள்ளட்டும் எனறு ராஜாவுக்கு சொல்லியனுப்பினான். அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதங்ளோடும் வந்து எலியாவின் வாசற்படியில் நின்றான். அப்பொழுது எலிசா; அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லியனுப்பினான். அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுபோய்;அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தை தடவி, இவ்விதமாய்க் குஷடரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன். நான் ஸநானம்பண்ணி சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றை பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும், பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி உக்கிரகத்தோடே போனான். அவன் ஊழியக்காரர் அவனிடத்நில் வந்து; தகப்பனே, அந்த தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தை செய்ய சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீரல்லவா? ஸ்நானம் பண்ணும் அப்போது சுத்தமாவீர் என்று உம்மோடே சொல்லும் போது, அதை செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷனுடைய வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகின போது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப் போல் அவன் மாறி சுத்தமானான்.
பிரியமானவர்களே, மேற்கூறிய கர்த்தருடைய வார்த்தைகள், நாம் நம்முடைய பாவங்களை கழுவி சுத்தம் செய்தலை திருஷ்டாந்தபடுத்துகிறது. மேலும் நாம் அறிந்துக்கொள்ளவேண்டிய காரியங்கள் என்னவென்றால் சீரிய தேசமாகிய புறஜாதிகளின் தேசமாவது, நம்முடைய உள்ளம் அந்நிய ஜாதிகளின் கிரியைகளால் ஆகாமிய காரியங்கள் செய்யும்போது பலவித தவறான நடக்கைகளால் நம் ஆத்துமா பாவம், அக்கிரமம் என்ற அழுக்குகளால் கறைப்பட்டிருக்கும் என்பதனை நாகமான் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனை இஸ்ரவேலராகிய சபை கண்டால், பாவத்தினின்று விடுதலையாக்கும்படி முயற்சி செய்யும் போது, கறைபட்டிருக்கிற உள்ளமும் அதனை வாஞ்சிக்க வேண்டும். அப்படி வாஞ்சிக்கிற உள்ளங்களை கர்த்தர் அறிந்து செயல்படுகிறார். அவ்விதம் அறிந்து கொண்டவர்களை கர்த்தர் முதலில் பாரம்பரிய வாழ்க்கையை உடைத்து, பின்பு அவர்களுக்குள் இருக்கிற ஏழு வித ஜாதிகளாகிய பிசாசை முதலில் துரத்திவிடுவதாக திருஷ்டாந்தப்படுத்தி யோர்தானில் ஏழு தரம் ஸ்நானம் செய்யும்படி சொல்கிறார். இதனை பார்க்கும் போது சில பேர் பொறுமையிழந்து பாரம்பரியத்தை வாழ்க்கையை நினைத்து அதனை மெச்சிக்கொள்கிறார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டு நாம் தன்னைத்தான் தாழ்த்தி சத்தியத்தின்படி நடந்து பூரண கிருபையை பெற்று கொண்டால் சிறு குழந்தையிள் உள்ளம் போல் மாற்றப்படுவோம்; இப்படியாக நம்மையும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.