தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 10: 8

வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பாவத்தில் வாழ்கிறவர்களுக்கு இரட்சிப்பை இலவசமாகக் கொடுக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய பாவங்களை ஏழு முறை கழுவி சுத்திகரித்து தூய்மையாகுதலை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

2 இராஜாக்கள் 5:15-19 

அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.

அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.

அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.

ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்.

அதற்கு அவன்: சமாதானத்தோடே போ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,

மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளில், கர்த்தர் சொன்னபிரகாரம் நாகமான் ஏழுமுறை யோர்தானில் இறங்கின பின்பு, சிறு குழந்தையின் மாம்சத்தை போல அவனுடைய தோல் மாறினது; அப்போது அவன் சுத்தமானான். அதன் பின்பு அவன் என்ன செய்தானென்றால் தன்கூட்டாத்தாரொடெல்லாம் கூடி தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து முன்பாக நின்று, இதோ இஸ்ரவேலிலிருக்கிற தேவனை தவிர பூமியில் எந்த தேவனும் இல்லை என்பதை அறிந்தேன்;  இப்போதும் உமது அடியான் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றான். தேவனுடைய மனுஷன் நான் காணிக்கை வாங்குவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன் என்றான்.  பின்னும் நாகமான் வருந்திக்கேட்டுக் கொண்டாலும் அவன் தட்டுதல் பண்ணிக்கொண்டான். அப்பொழுது நாகமான் கேட்டுக்கொண்டது என்னவென்றால் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் வேண்டும்.  உமது அடியேன் இனி கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்கு சர்வாங்க தகனபலி செலுத்துவதில்லை. ஆகையால் அவன் கேட்ட காரியமாவது; என் ஆண்டவன் பணிந்துக்கொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது; நான் அவருக்கு கைலாகுக்கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணிய வேண்டியதாகும்.  இப்படி ரிம்மோன் கோவிலிலே பணிய வேண்டிய காரியத்தை கர்த்தர் எனக்கு மன்னிப்பாராக என்றான்.  அதற்கு தேவனுடைய மனுஷன் சொன்னது சமாதானத்தோடே போ என்கிறான்.  அவ்விதம் கொஞ்சம் தூரம் போகிறான். 

பிரியமானவர்களே முன் குறிப்பிடப்பட்டிருக்கிற கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் நம்முடைய பாவங்கள் கழுவி சுத்திக்கரிக்கப்ட்டால், நாம் பூரண கிருபையைப்பெற்றுக்கொள்ள வேண்டும்.  அவ்விதம் பூரணமான ஒரு இரட்சிப்பு நமக்கு உண்டாக வேண்டுமானால் கர்த்தர் ஒருவரே தேவன்; அவரை தவிர தேவன் இல்லை என்ற ஒரே மனசு உண்டாக வேண்டும்.  மேலும் நம்முடைய இருதயம் அவர் ஒருவருக்கே சர்வாங்க தகனபலி செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். அல்லாமலும் நம் வாழ்க்கையில் ஆவிக்குரிய வளரச்சியில் வரும் சந்தேகங்களை காரணத்தோடு கர்த்தரிடத்தில் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.  அப்படி நாம் செய்வோமானால் கர்த்தர் நமக்கு ஆலோசனை தந்து சமாதானம் நல்குவாராக; மற்றும் கர்த்தரின் ஊழியக்காரர்கள் கர்த்தர் தந்திருக்கிற கிருபைகளை இலவசமாக மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டுமேயன்றி அது விலைக்கு விற்கவேண்டியதில்லை.  ஆனால் அநேகம் பேர் கர்த்தருக்கு காணிக்கைக்கொடுங்கள் என்று கேட்டு வாங்குகிறார்கள்; கர்த்தர் அதனை விரும்புவதில்லை.  ஆனால் கர்த்தருக்காய் காணிக்கைக்கொடுக்கிறவர்கள் மனபூர்வமாக கொடுத்தால் கர்த்தர் அதனை அங்கீகரிப்பார். நாகமான் மனபூர்வமாகத்தான் கொடுக்கிறான்; தேவனுடைய மனுஷன் அதனை பெற்றுக்கொள்ளவில்லை.  கர்த்தருக்கு காணிக்கை கொடுப்பது வெளியிலோ, மற்றும் வீடுகளில் வைத்தல்ல என்பதனை விளக்கிக்காட்டி, கர்த்தருக்குரியவை அவருடைய ஆலயத்தை சேர வேண்டியதாகும். ஆதலால் மேற்கூறப்பட்ட கருத்துகளை நன்றாக சோதித்து அதன்படி செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.