தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1 தீமோத்தேயு 6:10
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கென்று வேலை செய்தால் நம்முடைய கையால் காணிக்கை வாங்கக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் பாவத்தில் வாழ்கிறவர்களுக்கு இரட்சிப்பை குறித்து இலவசமாக கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை பற்றி தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 5:20-27
தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,
நாகமானைப் பின்தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டு போக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.
அதற்கு அவன்: சுகசெய்திதான்; தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான்.
அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்று வஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்து போக, தன் வேலைக்காரரான இரண்டு பேர்மேல் வைத்தான்.
அவன் மேட்டண்டைக்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள்.
பின்பு அவன் உள்ளே போய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.
அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப் போனான்.
மேற்கூறிய வசனங்களில் தேவனுடைய மனுஷன் நாகமானிடம் சமாதானத்தோடே போ என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்ட பின்பு, அவன் புறப்பட்டு கொஞ்ச தூரம் போன பின்பு, தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்த சீரியனாகிய நாகமான் கொண்டு வந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டு விட்டார். ஆனால் கேயாசி அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன் மேல் ஆணையிட்டு சொல்கிறேன் என்று சொல்லி நாகமானை பின்தொடர்ந்தான். அவன் பிறகே ஓடி வருகிறதைக் நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டு போக இரதத்திலிருந்து குதித்து சுகசெய்தியா என்று கேட்டான்; அதற்கு தேவனுடய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி சொன்னது சுகசெய்திதான்' தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு பேர் இப்பொழுது தான் எப்பிராயீம் மலைதேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள். அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்று வஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, எஜமான் என்னை அனுப்பினார் என்றான். இதனை கேட்ட நாகமான் இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் கட்டி, இரண்டு மாற்று வஸ்திரங்களையும் அதனை சுமக்கதக்க, தன் வேலைக்காரரான இரண்டு பேர் மேல் வைத்தான். அவன் மேட்டண்டைக்கு வந்த போது, அதை அவன் அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பி; அவர்கள் போய் விட்டார்கள். பின்பு உள்ளே போய், தன் எஜமானுக்கு முன்பாக நின்றான். அப்போது எஜமான் கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனிடம் கேட்டதற்கு, அவர் உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான். அப்பொழுது அவன் கேயாசிடம்: அந்த மனுஷன் உனக்கு எதிர்க்கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் என்னுடன்கூட செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவ தோப்புகளையும் திராட்சதோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கு இது காலமா? ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான். உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமூகத்தை விட்டு புறப்பட்டு போனான்.
பிரியமானவர்களே, நாம் கர்த்தருக்காய் வேலை செய்து ஒரு ஆத்துமா கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, தங்கள் பாவங்கள் கழுவி சுத்திகரிக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டாலோ, அல்லது ஏதாவது நீங்காத வியாதி நீங்கி சுகம்பெற்றாலோ, நாம் அவர்களிடத்தில் எந்த ஒரு பொருட்களோ, பணமோ எதிர்பா்க்க கூடாது; அவர்கள் கட்டாயப்படுத்தி ஏதாகிலும் கொடுத்தால் அதனையும் நம்முடைய கரத்தால் வாங்கக்கூடாது. இந்த காரியத்தை குறித்து கர்த்தர் கேயாசியை நமக்கு திருஷ்டாந்தபடுத்தி காட்டுகிறார்; நாகமானிடம் இருந்து காணிக்கை வாங்கியதால், நாகமானின் குஷ்டரோகம் உன்னையும், உன் சந்ததியாரையும் பிடிக்கும் என்று கர்த்தர் சொல்கிறார். ஆதலால் நாம் காணிக்கையை குறித்து மிகுந்த ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். ஏனென்றால் நம்முடைய கையால் கர்த்தருக்கென்று காணிக்கை வாங்கினால், அவர்கள் செய்த பாவம் நம்மையும், நம்முடைய சந்ததியாரையும் பின் தொடரும். ஆதலால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் யாரும் மற்றவர்களுடைய பாவங்களுக்கு உடன்படாதபடி நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.