தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சகரியா 2:5
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை பொல்லாத எண்ணங்கள் தொடாதபடி நம்மை அக்கினி இரதங்களாலும், அக்கினி குதிரைகளாலும் கர்த்தர் நம்மை பாதுகாக்கிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் காத்திருந்து கிருபைகள் பெற்றுக் கொள்ள வேண்டும என்பதை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 6:8-17
அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான்.
ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச் சொன்னான்.
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.
இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.
தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
மேற்கூறிய வசனங்களில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம் பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைப் பண்ணினான். ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஆள் அனுப்பி; இன்ன இடத்திற்கு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; என்னவென்றால் சீரியர் அங்கு பாளயமிறங்குவார்கள் என்று சொல்ல சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் எச்சரித்து, தன்னைக்குறித்து சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப் பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னை காத்துக்கொண்டான். இந்த காரியத்தினிமித்தம் இஸ்ரவேலின் ராஜா குழம்பி, தன் ஊழியக்காரரை அழைத்தனுப்பி, நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உழவாயிருக்கிறவன் யார் என்று கேட்டறிந்தபோது, அவனுடைய ஊழியக்காரரில் ஒருவன்; அப்படியில்லை என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளியறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்ககதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான். அப்பொழுது அவன் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவனை பிடிக்கும்படி அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்ற போது; அவன் சொன்னது தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அவன் குதிரைகளையும், இரதங்களையும், பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே பட்டணத்தை வளைந்துக் கொண்டார்கள். அப்போது தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து புறப்படுகையில் சுற்றி நின்ற இரதங்களையும், குதிரைகளையும் கண்டான். அப்போது வேலைக்காரன் தேவனுடைய மனுஷனாகிய எலிசாவிடம் ஐயோ, என் ஆண்டவனே என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களை பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அநேகம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி
2 இராஜாக்கள் 6:18-20
அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.
அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோனான்.
அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
மேற்கூறப்பட்ட காரியங்கள் எல்லாம் நடந்த பின்பு சமாரியாவில் வந்திறங்கின சீரியரைக் கண்ட போது இஸ்ரவேலின் ராஜா, எலிசாவிடம் என் தகப்பனே நான் அவர்களை வெட்டி போடலாமா என்றதற்கு, தேவனுடைய மனுஷன்; நீர் வெட்டவேண்டாம்; உம்மடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக் கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்து குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்கு போகும்படி, அப்பமும், தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான். அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துப்பண்ணி, அவர்கள் புசித்து குடித்தபின்பு அவர்களை அனுப்பி விட்டான். அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்தில் போய் விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்தில் அப்புறம் வரவில்லை.
பிரியமானவர்களே, முந்தின காரியங்கள் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று விளக்கிக்காட்டினது என்னவென்றால், நாம் கிறிஸ்துவின் கிருபை பெற்றுவிட்டோம் என்று சீரிய கிரியைகள் (நம்மில் இருக்கிற பொல்லாத எண்ணங்கள்) நம் உள்ளத்தில் போராடுவதற்கு ஆயத்தமாகும்போது, கர்த்தர் அதனிடத்தினின்று நம்மை விடுதலையாக்கும்படியாக எச்சரித்து அந்த எண்ணங்கள் நம்மை தொடாதபடி பாதுக்காக்கிறார். அப்படியாக நாம் எச்சரிப்போடு வாழும் போது பலத்த இராணுவமாக (பல நெருக்கங்கள்) வந்து நம்மை நெருக்கும். இதனை முன்குறித்து நாம் கர்த்தரின் சத்திய வார்த்தைகளால் நாம் நீதியை தரிக்கும் போது, சீரிய கிரியைகளாகிய பொல்லாத சத்துருக்கள், நாம் நீதியை தரித்து முன் குறித்ததை கண்டு, எப்படி இதன் காரணம் என்ன என்று யோசித்து நம்மை முழுமையும் விழ தள்ள வேண்டும் என்று பலத்தோடே போராடும். ஆனால் நாம் எதற்கும் பயப்படாமல் கர்த்தர் நம்மை சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளையும், இரதங்களையும் நமக்குள் அனுப்புகிறார். ஆனால் நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டால் மட்டுமே கர்த்தரின் பாதுகாப்பை அறிந்துக் கொள்ள முடியும். அல்லாவிட்டால் அறிந்துக்கொள்ள முடியாது. மேலும் வந்தவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து அனுப்பி விடும்படி தேவனுடைய மனுஷன், இஸ்ரவேல் ராஜாவிடத்தில் சொன்னாரென்றால், அதன் திருஷ்டாந்தம் அந்த பொல்லாத சீரிய எண்ணங்கள் நம்மில் கிரியை செய்யாதபடி ஜீவ அப்பமாகிய வசனத்தால் அந்த இடத்தை நாம் ஜெயித்தால் மீண்டும் அப்பேற்பட்ட எண்ணங்கள் நம்மில் கிரியை செய்வதில்லை. இதற்காக நாம் நம்மில் உள்ள பொல்லாத எண்ணங்கள் மாற்றப்படும்படியாக கிறிஸ்துவின் சரீரமாகிய அப்பமும், ஜீவ வசனமாகிய தண்ணீராலும் நாம் திருப்தியாகி நம்முடைய ஆத்துமாவில் சமாதானத்தை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.