தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஆமோஸ் 8:11 

இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் தந்த இரட்சிப்பு முற்றுமுடிய காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை பொல்லாத எண்ணங்கள் தொடாதபடி நம்மை அக்கினி இரதங்களாலும், அக்கினி குதிரைகளாலும் கர்த்தர் நம்மை பாதுகாக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 6:24-33 

இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்.

அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள்.

இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின்மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.

அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,

ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.

அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவிட்டாள் என்றாள்.

அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள்.

அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.

எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.

அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.

மேற்கூறிய வசனங்களில் சீரியரை சமாரியாவிலிருந்து அனுப்பிவிட்ட பின்பு சீரியரின் தண்டுகள் அப்புறம்  இஸ்ரவேல் தேசத்திற்குள் வரவில்லை.  ஆனால் சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொணடு வந்து சமாரியாவை முற்றிக்கைப் போட்டான்.  அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதை தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்கும் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிகாசுக்கும் விற்கப்படும்மட்டும் அதை முற்றிக்கைப் போட்டார்கள். இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின் மேல் நடந்து போகையில், ஒரு ஸ்திரீ ராஜாவைக் கூப்பிட்டு; ராஜாவாகிய என் ஆண்டவனே என்னை இரட்சியும் என்றாள்.  அதற்கு அவன் கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி, பின்னையும் அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு அவள்; இந்த ஸ்திரீ என்னிடம் உன் மகனை இன்றைக்கு தா அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனை தின்போம் என்றாள். அப்படியே என் மகனை ஆக்கி தின்றோம்; மறு நாளில் நான் அவளிடம் மகனை தின்ன கேட்ட போது அவள் ஒளித்து விட்டாள் என்றாள்.  இந்த வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே அலங்கத்தின் மேல் நடந்து போன அவன் தன் வஸ்திரங்களை கிழித்துக் கொண்டான்.  அப்போது அவன் உள்ளே தன் சரீரத்தின் மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் சொன்னது சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன் மேல் இருந்தால், தேவன் அதற்கு சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்ய கடவர் என்று சொன்னான்.  எலிசா தன் வீட்டில்  மூப்பரோடுக்கூட உட்கார்ந்திருந்தான்.  அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனை தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்திற்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி, என் தலையை வாங்க அந்த கொலைப்பாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான் பார்த்தீர்களா? அந்த ஆள் வரும் போது நீங்கள் அவனை வரவொட்டாமல் கதவை பூட்டிப் போடுங்கள்: அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது என்று அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து; இதோ, இந்த பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனி கர்த்தருக்காக காத்திருக்கிறது என்ன என்றான். 

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை தியானிக்கும் போது சீரிய கிரியைகள் நம் உள்ளத்தில் மீண்டும் வருவதற்கு காரணம் என்னவென்றால் நம்மில் சமாரியாவாகிய புறஜாதிகளின் கிரியைகள் இருப்பதால் நம்மில் பொல்லாத எண்ணங்கள் அதிகமாக வந்து குடிக்கொள்கிறது.  அப்படி உள்ளம் அனைத்தும் பொல்லாத எண்ணங்களும், தீய சிந்தைகளும் நிறைந்து  இருக்கிறதால், தேசம் பஞ்சத்தால் வாடுகிறது.  தேசத்தில் கிடைக்க வேண்டிய ஆகாரம் கிடைக்கவில்லை. ஆனால் ராஜா அலங்கத்தின் மேல் நடந்து போகையில் ஒரு ஸ்திரீ ராஜாவைக் கூப்பிட்டு தன் மகனை பிடித்து மற்ற ஸ்திரீக்கும் தின்ன கொடுத்ததை கூறிவிட்டு; அடுத்த ஸ்திரீ தன் மகனை ஒளித்து வைத்து விட்டாள் என்று சொல்லும் போது; இதனை கேட்ட ராஜா தன் வஸ்திரத்தை கிழிக்கிறான்; அப்போது அவன் தன் சரீரத்தில் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் காண்கிறார்கள். இவை என்னவென்றால் திருஷ்டாந்தத்திற்கென்று எழுதபட்டிருக்கிறது; ஆனால் ராஜாவை கூப்பிட்டு ஆண்டவரே என்னை இரட்சியும் என்ற போது; ராஜா சொன்னது கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? ஆலையிலிருந்தா, களஞ்சியத்திலிருந்தா என்று சொல்கிறான் என்றால் நம்முடைய ஆத்துமாவின் இரட்சிப்புக்காக இவை கூறப்பட்டிருக்கிறது. எப்படியெனில் இஸ்ரவேலிலே பஞ்சம் என்றால் தேவ வசனம் கிடைக்காத பஞ்சத்தால் ஒருவர் பெற்றெடுத்த ஆத்துமாவை ஒருவர் பிரயோஜனப்படுத்தவும், அவ்விதம் தங்கள் பஞ்சத்தை தீர்க்கிறவர்களாகவும், ஆனால் எல்லாரும் அதற்கு ஒத்துழைக்காமல் இருக்கிறதால் பஞ்சம் கொடுமையாய் இருக்கிறதை அறிந்த தேவன் நாம் புற ஜாதிகளின் கிரியைகளில் இருக்கிறதால் நாம் பெற்றிருக்கிற இரட்சிப்பாகிய வஸ்திரம் கிழித்து நாம் இரட்டு உடுக்கிறோம் என்ற காரியம் வெளியாகிறது. இதனைக் குறித்து 

புலம்பல் 4:1-10 

ஐயோ! பொன் மங்கி, பசும்பொன் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே.

ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.

திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.

குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை.

ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்ளுகிறார்கள்.

கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப்பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.

அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப்பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.

இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.

பசியினால் கொலையுண்டவர்களைப்பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.

இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.

இதற்கு காரணம் கர்த்தர் அல்ல, நம்முடைய பொல்லாத கிரியைகளினால் தேவவசனம் கிடைக்காத பஞ்சம் உண்டாகும், நம்முடைய நிர்வாணம் வெளிப்படும்.  ஆதலால் நாம் கர்த்தருக்காக காத்திருந்து மீண்டும் இழந்த இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.