தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 119:128
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஒலிமுக வாசலில்( உள்ளான மனுஷன்)பாவமாகிய குஷ்டரோகம் காணப்படாமல் கர்த்தரிடத்திலிருந்து விடுதலைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் தந்த இரட்சிப்பை முற்றுமுடிய காத்துக்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 7:1-8
அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.
குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?
பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,
சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.
ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,
இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.
அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டு போய் ஒளித்து வைத்து,
மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேல் தேசத்து பஞ்சத்தின் காரணமாக, இஸ்ரவேலின் ராஜா, எலிசாவிடம் ஆள் அனுப்பி, நான் இனி கர்த்தருக்காக காத்திருக்க வேண்டியது என்ன என்று சொல்லியனுப்பினான். அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையை கேளுங்கள்; நாளை இந்நேரத்திலே சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது ராஜாவுக்கு கைலாகுக் கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்கு பிரதியுத்தரமாக; இதோ கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன் உன்னுடைய கண்களினால் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான். குஷ்டரோகிகளான நாலு பேர் ஒலிமுக வாசலில் இருந்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி; நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன என்றும், பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மை கொன்றால் சாகிறோம் என்று சொல்லி இருட்டோடே எழுந்து சீரியருடைய இராணுவத்திற்கு போக, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள். அங்கு வந்த போது அங்கு ஒருவரும் இல்லை. ஆண்டவர் சீரியரின் இராணுத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்க பண்ணினதினால், அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: இதோ நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா, ஏதோமின் ராஜாவையும், எகிப்தியரின் ராஜாவையும் கூலிப்பொருத்திக்கொண்டான் என்று சொல்லி இருட்டோடே எழுந்திருந்து, தங்கள் கூடாரங்களையும், தங்கள் குதிரைகளையும், தங்கள் கழுதைகளையும், தங்கள் பாளயத்தையும்,அவைகள் இருந்த பிரகாரம் விட்டு, தங்கள் பிராணன் மாத்திரம் தப்ப ஓடினார்கள்.
பிரியமானவர்களே, முன் குறிக்கப்பட்ட வார்த்தைகள் நமக்கு ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படாமலிருந்தால் நம்மில் தேவ வசனம் உட்கொள்ள முடியாத பஞ்சம் வருமென்று கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவெனில் சாமாரியாவிலே பஞ்சம் வருவதற்கு காரணம் என்னவென்றால் சீரியாவின் ராஜா தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டு வந்து முற்றுகைப் போட்டான் என்பதும், அதினால் இஸ்ரவேலின் ராஜா; இந்த காரியம் கர்த்தரால் வந்தது என்பதை உணர்ந்துக் கொண்டதால் கர்த்தர் பஞ்சத்தை மாற்றும்படியாக கட்டளையிடுகிறார் என்பதனை எலிசா தீர்க்கதரிசி மூலம் சமாரியாவைக்குறுத்து பேசும்போது; நாளை இந்நேரத்திலே சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று அறிவிக்கிறார். மேலும் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசியாதவனிடம் அவர் சொல்வது; உன்னுடைய கண்களினாலே காண்பாய் ஆனாலும் நீ அதில் சாப்பிடமாட்டாய் என்றுகூறுகிறார். இதனை பார்க்கும்போது நமக்கு ஆவிக்குரிய கண்கள் திறக்கபடாமலிருந்தால் கர்த்தர் நமக்கு தரும் கனிகளை புசிக்கமுடியாது என்பதனை விளக்குகிறார். மேலும் நாலு குஷ்டரோகிகள் ஒலிமுக வாசலில் இருந்தார்கள் என்பது எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் சொல்லுவது நாம் சாகவேண்டியது என்ன? பட்டணத்திற்குள் போவோமென்றாலும், பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்துக்கு போவோம் வாருங்கள்; அவர்கள் உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி, சீரியருடையை இராணுவத்தின் முன்னணியில் இருட்டோடே எழுந்து வரும் போது அங்கு ஒருவரும் இல்லை. எப்படியெனில் இதனை நாம் கருத்தாய் பார்ப்போமானால், பாவத்தினால் வாழ்ந்துக்கொண்டிருந்தால் ஆகார குறைவு உண்டாகி ஆத்துமா சாகும் என்பதும், நாம் எந்த இடத்தில் இருந்தாலும் பாவம் செய்வோமானால் ஆத்தும சாகும். ஆதலால் நம்மை சத்துரு பாவத்தினால் மூழ்கடிப்பான். அப்படியாக நாம் சத்துவிருவின் அடிமையில் வாழும் போது, கர்த்தர் அவருடைய தூத சேனையுமாக இறங்கி அவர்களை தங்கள் பொல்லாத வழிகளை விட்டு மனந்திரும்பும்படியாகவும், அவர்கள் தங்கள் பிராணன் தப்பும்படியாகவும் செய்கிறார். இவ்விதமாக கர்த்தர் பாவத்தில் சிக்குண்டு இருக்கிறவர்களின், பிராணனை அழிவிலிருந்து மீட்டு விடுதலையாக்குகிறார். இதனை வாசிக்கிற கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நாமும் பாவஞ்செய்தால் குஷ்டரோகிகளாவும், நாம் ஒவ்வொருவருடைய தாகத்தை ஆண்டவர் தீர்க்கிறவராகவும் வெளிப்படுவார். இவ்விதமாக நம்முடைய பிராணனை முதலில் அழிவினின்று காத்து நம் ஆத்துமாவை சத்துருவின் கையினின்று விடுதலையாக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.