தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 81:16
உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய பொல்லாப்புகள் எல்லாம் அகற்றப்பட்டு சுத்திகரிப்போமானால், கர்த்தர் அவருடைய நன்மைகளால் நம்மை திருப்தியாக்குகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவின் ஒலிமுக வாசலில் (உள்ளான மனுஷன்) பாவமாகிய குஷ்டரோகம் காணப்படாமல் கர்த்தரிடத்திலிருந்து விடுதலைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 7: 8-20
அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்து,
பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.
அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்தபிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.
அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள்.
அப்பொழுது இராஜா இராத்திரியில் எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: சீரியர் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான்.
அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.
அப்படியே இரண்டு இரதக் குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.
அவர்கள் யோர்தான்மட்டும் அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்து போட்ட வஸ்திரங்களாலும் தட்டு முட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்.
அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.
ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே, அவன் செத்துப்போனான்.
இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.
அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.
அந்தப் பிரகாரமாகத்தானே அவனுக்கு நடந்தது; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே அவன் செத்துப் போனான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் சீரிய இராணுவத்தின் முன்னணியிலிருந்து பிராணன் தப்ப ஓடிய நான்கு குஷ்டரோகிகள் முன்னணிமட்டும் வந்த போது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்துப் புசித்து குடித்து, அதிலிருந்து வெள்ளியையும், பொன்னையும் வஸ்திரங்களையும் கொண்டு போய் ஒளித்து வைத்து, திரும்பி வந்து வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக் கொண்டுப் போய் ஒளித்து வைத்து, பின்பு அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற் செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் வரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் என்றார்கள். அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கி சொன்னது நாங்கள் சீரியாவின் பாளயத்திற்கு போய் வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும், கட்டியிருக்கிற கழுதைகளும் கூடாரங்களும் இருந்த பிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது அவன் வாசல் காக்கிற மற்றவர்களுக்கு சொன்னான். அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள். அப்பொழுது ராஜா இராத்திரியில் எழுந்து ஊழியக்காரரை நோக்கி சீரியர் நமக்கு செய்கிற காரியத்தை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியும்; ஆகையால் நாம் புறப்பட்டு போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டு வெளியில் புறப்பட்டு வெளியில் ஒளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றான். அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளை கொண்டு போக உத்தரவுக் கொடும்; இதோ இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டு போன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும்; அவைகள் மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை அனுப்பிப் பார்ப்போம் என்றான். அப்படியே இரண்டு இரத குதிரைகளைக் கொண்டு வந்தார்கள்; ராஜா போய் அவர்களை வரசொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான். அவர்கள் யோர்தான் மட்டும் அவர்களை பின் தொடர்ந்து போனார்கள். சீரியர் தீவிரித்து ஒடுகையில் அவர்கள் எறிந்து போட்ட வஸ்திரங்களாலும் தட்டுமுட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்து இருந்தது. அனுப்பப்பட்டவர்கள் திரும்ப வந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டு சீரியரின் பாளயத்தை கொள்ளையிட்டார்கள். இவ்விதமாக கர்த்தரின் வார்த்தையின்படியே, ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுககும் விற்கப்பட்டது. மேலும் கர்த்தர் சொன்னபடியே ராஜாவுக்கு கைலாகுக்கொடுக்கிற பிரதானியை ஒலிமுக வாசலிலே ஜனங்கள் அவனை நெருக்கி மிதித்ததினாலே ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்த போது சொல்லியிருந்தபடியே செத்துப்போனான்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வார்த்தைகளின் கருத்துக்கள் என்னவென்றால் நம்முடைய உள்ளத்தில் எழும்புகிற புறஜாதிகளின் கிரியைகளினால் நம்மில் அதிகமான பாவம் பெருகுகிறது. அதனால் பாவ்தின் சம்பளம் மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது போல் நம் ஆத்துமா சாகும் என்பதால் , அதனிடத்தினின்று நாம் விடுதலையாகும்படியாக உள்ளத்தில் நல்ல ஒரு தீர்மானத்தோடு இஸ்ரவேல் சபையில் வந்து தங்களுடைய பாவத்தை அறிக்கையிட்டு, நம்மை கர்த்தராகிய கிறிஸ்துவுக்கு முன்பாக ஒப்புக்கொடுத்தால், அவர் நம்முடைய எல்லா பாவங்களையும் கழுவி சுத்திகரித்து, நம்முடைய பொல்லாத செயல்களையெல்லாம் நம்மை விட்டு துரத்தும் போது, அவர்களால் நம்முடைய தடைப்பட்ட நன்மைகள் கர்த்தரால் நாம் பெற்றுக்கொள்ளும்படியாக செய்கிறார். அவ்விதமாக கர்த்தர் நன்மைகளினால் நம்மை திருப்தியாக்குகிறார். அவ்விதமான இரட்சிப்பை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.