தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 80: 17, 18
உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருப்பதாக.
அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா உயிர்ப்பிக்கபட்டிருந்தால், நம்முடைய பின்மாற்றத்தில் மீண்டும், நாம் மனந்திரும்பினால் கர்த்தர் நாம் இழந்த நன்மைகளை (நித்திய ஜீவனை) திருப்பி தருகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய பொல்லாப்புகள் எல்லாம் அகற்றப்பட்டு சுத்திகரிப்போமானால், கர்த்தர் அவருடைய நன்மைகளால் நம்மை திருப்தியாக்குகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 8:1-6
எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப் போய் எங்கேயாகிலும் சஞ்சரி; கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழுவருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில் போய், ஏழுவருஷம் சஞ்சரித்தாள்.
ஏழுவருஷம் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தை விட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடும்படி போனாள்.
அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனுஷனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாய்ச் சொல் என்றான்.
செத்துப்போனவனை உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது, இதோ, அவன் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த ஸ்திரீ; எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன்தான் என்றான்.
ராஜா அந்த ஸ்திரீயைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரித்துச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்கு ஒரு பிரதானியை நியமித்து, அவளுக்கு உண்டானது எல்லாவற்றையும், அவள் தேசத்தை விட்டுப்போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கும்படி செய் என்றான்.
மேற்கூறிய வசனங்களில் எலிசா உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டு போய் எங்கேயாகிலும் சஞ்சரி; கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழு வருஷம் தேசத்தில் இருக்கும் என்றான். அந்தபடியே அந்த ஸ்திரீ, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படியே, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு பெலிஸ்தியரின் தேசத்தில் போய் சஞ்சரித்தாள். அந்த வருஷங்கள் கழிந்த பின்பு, தன் வீட்டுக்காகவும், தன் வயலுக்காகவும் ராஜவினிடத்தில் முறையிடும்படி போனாள். அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனுஷனாகிய வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி, எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாய் சொல் என்ற போது; கேயாசி செத்துப்போன பிள்ளையை உயிர்ப்பித்தார் என்பதனை ராஜாவுக்கு அறிவிக்கிறப் போது, அந்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து, ராஜாவினிடத்தில் தன் வீட்டுக்காகவும், வயலுக்காகவும் முறையிட்டாள். அப்போது கேயாசி, ராஜாவினிடம் அந்த ஸ்திரீயை குறித்து, இவள்தான், இவளுடைய பிள்ளையைத்தான் எலிசா உயிர்ப்பித்தது என்று கேயாசி சொன்னபோது; ராஜா அந்த ஸ்திரீயை கேட்டதற்கு அவள் நடந்த எல்லா காரியங்களையும் விவரித்து சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்கு ஒரு பிரதானியை நியமித்து, அவளுக்கு உண்டானது எல்லாவற்றையும், அவள் தேசத்தை விட்டு போன நாள் முதல் இந்நாள் வரைக்கும் உள்ள வருமானம் அனைத்தையும் அவளுக்கு கிடைக்கும்படி செய் என்றான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை தியானிக்கும் போது இஸ்ரவேல் தேசத்திலே கர்த்தர் பஞ்சத்தை வருவிக்கபண்ணுவார் என்பதினால் தேவனுடைய மனுஷனாகிய எலிசா, தான் உயிர்ப்பித்த பிள்ளையினுடைய தாயாகிய ஸ்திரீயிடம்; நீ எங்கேயாவது போய் சஞ்சரி, ஏழு வருஷம் பஞ்சம் இருக்கும் என்று சொன்னதால் அவள் பெலிஸ்தியரின் தேசத்தில் போய் சஞ்சரித்தாள். இதனை கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துகிறாரென்றால் உயிர்ப்பிக்கப்பட்ட நம்முடைய ஆத்துமாவுக்கு தேவையான ஆகாரம் கிடைக்காதென்பதால் அவர்கள் பெலிஸ்தியரின் கிரியைகள் செய்கிறாள் என்பதும், மேலும் இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சமாறியது என்கிறதால் அவர்கள் மீண்டும் மனந்திரும்பி கர்த்தரிடத்தில் வந்து முறையிட்டால்; ஏற்கனவே அவள் ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறதால் அவர்கள்; முறையிடுதல் ராஜாவின் சமூகத்தில் வந்து எட்டுகிறது என்பதும் அவ்விதம் ராஜ சமூகத்தில் எட்டினதால் ராஜா அவர்கள் முறையிட்டு கேட்ட அத்தனையும் தேவனுடைய வீடாகிய ஆத்துமாவின் நன்மைகளையும், மணவாட்டி சபையாகிய நிலத்தின் கனிகளாலும் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து, மேலும் நாம் இழந்து விட்ட நன்மைகளை கர்த்தர் நமக்கு தந்தருள்வாராக. இவ்விதமாக நமக்கு கிடைக்க வேண்டிய ஆசீர்வாதங்களை கர்த்தர் தரும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.