தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எரேமியா 31: 29, 30
பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.
அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நமக்கு நம்முடைய கடைசி நேரத்தில் கர்த்தரிடத்திலிருந்து மன்னிப்பு பெற்றுக்கொள்வது அரிதான காரியம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா உயிர்ப்பிக்கபட்டிருந்தால், நம்முடைய பின்மாற்றத்தில் மீண்டும், நாம் மனந்திரும்பினால் கர்த்தர் நாம் இழந்த நன்மைகளை (நித்திய ஜீவனை) திருப்பி தருகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 8:7-15
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது,
ராஜா ஆசகேலை நோக்கி: நீ உன் கையிலே ஒரு காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனுஷனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான்.
ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டு போய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய குமாரன் என்னை உம்மிடத்தில் அனுப்பி, இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.
எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லும்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.
பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக்கொண்டே அழுதான்.
அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.
அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.
இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன் நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,
மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவன் முகத்தின்மேல் விரித்தான்; அதினால் அவன் செத்துப்போனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாய் ராஜாவானான்.
மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேலரால் துரத்தியடிக்கப்பட்ட சீரிய ராஜாவாகிய பெனதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான். தேவனுடைய மனுஷன் வந்ததை அறிந்த ராஜா ஆசகேலை நோக்கி நீ கையிலே காணிக்கையை எடுத்துக்கொண்டு போய், நான் இந்த வியாதி நீங்கி பிழைப்பேனோ என்று விசாரிக்க சொன்னான். அப்போது ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு அவனுக்கு எதிர் கொண்டு போய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய உம்முடைய குமாரன், என்னை உம்மிடத்தில் அனுப்பி, இந்த வியாதி நீங்கி பிழைப்பேனோ என்று கேட்க சொன்னார் என்றான். அப்பொழுது எலிசா சொன்னது வியாதி நீங்கி பிழைப்பீர் என்று சொல்லும்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதை கர்த்தர் எனக்கு காண்பித்தார் என்றான். பின்பு தேவனுடைய மனுஷன் தன் முகத்தை திருப்பாமல் அவன் சலித்து போகுமட்டும் அவனை நோக்கிக்கொண்டே அழுதான். அப்பொழுது ஆசகேல்; என் ஆண்டவன் அழுகிறது என்ன என்றான். அதற்கு அவன் சொன்னது நீ இஸ்ரவேல் புத்திரருக்கு செய்கிற தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரை பட்டயத்தால் கொன்று;அவர்கள் குழந்தைகளை தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான். அதற்கு ஆசகேல் சொன்னது இத்தனை பெரிய காரியத்தை செய்ய உமது நாயாகிய அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா; நீ சீரியாவின் மேல் ராஜாவாவாய் என்பதை கர்த்தர் எனக்கு தெரிவித்தார் என்றான். இவன் எலிசாவை விட்டுப்புறப்பட்டு தன் ஆண்டவனிடத்தில் வந்த போது, அவன் ஆசகேலிடம் எலிசா சொன்னது என்ன என்று கேட்டதற்கு, நீர் வியாதி நீங்கி பிழைப்பீர் என்று சொன்னான். மறு நாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து தண்ணீரில் தோய்த்து, அவன் முகத்தின் மேல் விரித்தான்; அதினால் அவன் செத்து போனான்; ஆசகேல் அவனுக்கு பதிலாக ராஜாவானான்.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களை தியானிக்கும் போது சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதிப்பட்டவனாயிருக்கும் போது, எலிசா தமஸ்குவுக்கு வந்ததை அவன் அறிந்து ஆசகேலிடம் காணிக்கையோடே போய் வியாதி நீங்கி பிழைப்பேனோ என்று விசாரிக்க சொன்னதால், அவன் நாற்பது ஒட்டகங்களில் மேல் உச்சிதமான காணிக்கையோடே போய் எலிசாவிடத்தில் விசாரிக்கிறான். இதன் பொருள் என்னவெனில் உள்ளத்தில் சீரிய கிரியைகளாகிய பொல்லாத எண்ணங்கள் நம்மை நெருக்குகையில் நம் ஆத்துமா வியாதிப்படுகிறது. ஆனால் அவ்வித வியாதியில் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தினால் வியாதியினின்று விடுதலை பெற முடியாது என்பதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சீரிய ராஜா, நாற்பது ஒட்டகங்களில் கர்த்தருக்கென்று உச்சிதமான காணிக்கை அனுப்புகிறான். ஆனாலும் எலிசா அவனிடம் சொல்ல சொன்னது நீ வியாதி நீங்கி பிழைப்பீர். ஆனாலும் நீ சாகவே சாவாய் என்று கர்த்தர் எனக்கு காண்பித்தார் என்று சொல்கிறதை வாசிக்கமுடிகிறது.
மேலும் பிரியமானவர்களே நாம் பார்க்கும் போது பெனாதாத் கர்த்தருக்கு காணிக்கை அனுப்பி விசாரிக்கும் போதும் கர்த்தர் அவனை தப்ப விடவில்லை. ஏனென்றால் இஸ்ரவேல் சபைக்கு செய்த பொல்லாப்பினிமித்தம் கர்த்தர் அவனை வியாதியினால் வாதித்தார். அல்லாமலும் கடைசி நேரத்தில் யாரை வைத்து கர்த்தருக்கு காணிக்கை அனுப்பினானோ அவனை வைத்தே சாகடிக்கிறார். இதை போல் நம்மிலும் அநேகர் எல்லா பொல்லாப்புகளையும் செய்து விட்டு கடைசி தருணத்தில் கர்த்தரிடத்தில் உயிர் பெற்றுக்கொள்ளும்படி வருகிறார்கள். ஆனால் ஒரு காரியம் நாம் சிந்திக்க வேண்டும், என்னவென்றால் கடைசி தருணத்தில் சில காரியங்களில் கர்த்தரிடத்தில் மன்னிப்புப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆதலால் நாம் எல்லா பொல்லாப்புகளை விட்டு இப்பொழுதே மனந்திரும்பி இரட்சிக்கப்படுவோம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.