தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 42:1
இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய விளக்கு (கிறிஸ்து) அணையாமல் பாதுகாக்கவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு நம்முடைய கடைசி நேரத்தில் கர்த்தரிடத்திலிருந்து மன்னிப்பு பெற்றுக்கொள்வது அரிதான காரியம் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 8:16-29
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாயிருக்கையில், யோசபாத்தின் குமாரனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ராஜ்யபாரம்பண்ணத் துவக்கினான்.
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்.
அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை.
அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
அதினாலே யோராம் சகல இரதங்களோடுங்கூடச் சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தபோது, ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
அப்படியே யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணினார்கள்; அக்காலத்தில் தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.
யோராமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய பன்னிரண்டாம் வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா ராஜாவானான்.
அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அத்தாலியாள்.
அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தங்கலந்திருந்தான்.
அவன் ஆகாபின் குமாரனாகிய யோராமோடேகூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணப்போனான்; சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.
ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணுகையில், சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக் கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.
மேற்கூறிய வசனங்களில் சீரிய ராஜாவாகிய பெனாதாத்தின் முகத்தின் மேல் ஆசகேல் சமுக்காளத்தை தண்ணீரில் தோய்த்து விரித்ததினால் அவன் செத்து போகிறான். பின்பு ஆசகேல் சீரியாவுக்கு ராஜாவாகிறான். அந்நாட்களில் இஸ்ரவேலில் ஆகாபின் குமாரன் யோரம் ராஜ்யபாரம் பண்ணிக்கொண்டிருக்கும் போதும், யூதாவிலே யோசபாத் இன்னும் ராஜாவாயிருக்கையில், அவன் குமாரன் யோராம் யூதாவின் ராஜாவாக ராஜ்யபாரம் பண்ண துவக்கினான். அவன் ராஜாவாகிற போது முப்பத்திரண்டு வயதாயிருந்நு, எட்டு வருஷம் ராஜ்யபாரம் பணினான். அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து ஆகாபின் வீட்டார் செய்தது போல் செய்தான். ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்து கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான். ஆனால் கர்த்தர் உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்கு கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்கு சொன்னபடியே, அவனிமித்தம் யூதாவை முற்றிலும் கெடுக்காமல், அவன் நாட்களில் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதினாலே யோராம் சகல இரதங்களோடுகூட சாயீருக்குப் புறப்பட்டு போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து தன்னை வளைந்துககொண்ட ஏதோமியரையும், இரதங்களின் தலைவரையும் முறிய அடித்த போது, ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். யூதாவுடைய கையின் கீழிருக்கிற ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறது போல கலகம் பண்ணினார்க. அந்நாளில் தானே லிப்னா பட்டணத்தார் கலகம் பண்ணினார்கள். யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணபட்டான். அவனுக்கு பதிலாக அவனுடைய குமாரன் அகசியா ராஜாவானான். இவன் இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியிலே நடந்து கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான். அவன் ஆகாபின் குமரனாகிய யோராமோடே சம்மந்கலந்திருந்தான். அவன் ஆகாபின் குமாரனாகிய யோராமோடே, சீரியாவின் ராஜாவாகிய ஆசகலோடு யுத்தம் பண்ணப்போனான்; சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள். பின்பு யோராம் தன் காயங்களை ஆற்றிக்கொள்ள யெஸ்ரயேலுக்கு போயிருந்தான். ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதிப்பட்டிருக்கையில் , யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் அவனை பார்ப்பதற்கு போயிருந்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்கள் நம்மை சுத்திகரிக்கும் படியாகவும், நம்முடைய ஆத்துமா வியாதிபடுகிறது எவ்விதம் என்பதனையும் கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவெனில் நாம் கரத்தரால் பெற்ற கிருபையை நஷ்டப்படுத்தும்படியாக உள்ளத்தில் பிசாசனவன் வந்து நம்மை வஞ்சிக்கிறான். அவ்விதம் வஞ்சிக்க வரும் போது நாமும் அந்த வஞ்சகத்துக்குள்ளாகி சாத்தானின் பொல்லாத செயல்களை செய்கிறோம். அதன் பின்பு நாம் எதை செய்தாலும் நம்முடைய மன விருப்பத்தின் படி செய்ய சத்துருவானவன் நம்மை தூண்டிக்கொண்டிருப்பான். அப்படியாக நம் உள்ளம் பொல்லப்புகள் செய்ய துணியும் போது, நம்முடைய வாழ்வில் என்றைக்கும் ஒரு கலக்கம் உண்டாயிருக்கும். இந்த கலக்கம் ஏன் வருகிறதென்றால் நாம் ஆகாத காரியங்களை செய்கிறவர்களோடு ஒரு போதும் பங்குக்கொள்ளக்கூடாது. அப்படி கர்த்தருக்கு பொல்லாப்பு செய்கிறவர்களோடு தொடர்பு வைப்போமானால் நாமும் அவர்களை போல் பொல்லாதவர்களாகி விடுவோம் என்ன காரணத்தால் கர்த்தர் பொல்லாத மனுஷர்களோடு பொறாமைக் கொள்ளாதே; அவர்களோடு இருக்கவும் விரும்பாதே என்று நீதிமொழிகள் 24:1-ல் சொல்லப்படுகிறது. மேலும் அப்படிபட்டவர்களோடு இருந்து நாம் வஞ்சிக்கப்பட்டுவிட்டால், கர்த்தர் நம் உள்ளத்தில் வஞ்சகத்தை நமக்குள் அனுப்புகிறார் என்று 2 தெசலோனிக்கேயர் 2:12-ல் சொல்லப்பட்டிருக்கிறது. அல்லாமலும் நம்மில் இருக்கிற விளக்கை கெடுத்துப்போடாமல் கர்த்தர் நம்மை பாதுகாக்கிறார். இதன் காரணம் கர்த்தர் தந்த வாக்குதத்தத்தை நிறைவேற்றுவதற்காக, நம்மை பொறுமையோடு பார்க்கிறார், ஆனால் விளக்கு அணையாமல் அந்த விளக்கு மங்கியெரிந்துக்கொண்டிருக்கும்படி செய்கிறார். அப்படி மங்கியெரிவதற்கு காரணம்; நம்முடைய பொல்லப்பினிமித்தம். ஆனால் மங்கியெரிகிற திரியை கர்த்தர் அணைப்பதில்லை; ஏனென்றால் நாம் என்றைக்கு தேவசித்தம் செய்கிறோமோ அன்றையிலிருந்து அது பற்றியெரிய தொடங்கி பிரகாசமாயிருக்கும். ஆதலால் பிரியமானவர்களே நம் ஆத்துமாவில் கிறிஸ்துவின் ஜீவன் (விளக்கு) கெட்டுப்போகாமல் மங்கியெரிந்து கொண்டிருக்குமானால், நாம் ஜாக்கிரதையாய் இருந்து நம்முடைய விளக்கு ஜூவாலித்து பிரகாசிக்கும்படியாக எல்லா பொல்லாத வழிகளையும் விட்டுவிட்டு கர்த்தரிடத்தில் முழுமையாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.