தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 59:17
அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்ட அபிஷேகத்தினால் அவருக்காக முழு பக்தி வைராக்கியத்தோடு காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், கர்த்தரின் வேலையை செய்வதற்காக பரிசுத்த அபிஷேகம் பெற்றுக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 9:11-21
யெகூ தன் ஆண்டவனுடைய ஊழியக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்தில் வந்தது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனுஷனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.
அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.
அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தைப் படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.
அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் குமாரன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினான்; யோராமோ இஸ்ரவேலர் எல்லாரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்து வைத்தான்.
ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே, சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்: இது உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப்போகும்படி விடாதிருங்கள் என்றான்.
அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாய்க் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.
அந்தக் குதிரைவீரன்: அவனுக்கு எதிர்கொண்டுபோய், சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றான்.
ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான்.
அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.
அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன் தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் யெகூவை கர்த்தர் அபிஷேகம் பண்ணின பின்பு அவன் தன் ஆண்டவனுடைய ஊழியக்காரனிடத்திற்கு திரும்பி வந்தபோது அவர்கள் அவனிடம் சுகசெய்தியா? என்று கேட்டு, அந்த பயித்தியக்காரன் உன்னிடத்தில் வந்தது என்ன என்று கேட்டதற்கு அவன் அந்த மனுஷனையும் அவன் சொன்ன காரியத்தையும் அறிவீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்கு சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்கள் சொன்ன பிரகாரம் சொன்னான். அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களை படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, எக்காளம் ஊதி யெகூ ராஜாவானான் என்றார்கள். அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் குமாரன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாய் கட்டுப்பாடு பண்ணினான். ஆனால் யோராமோ இஸ்ரவேலர் எல்லாரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்து வைத்தான். ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே; சீரியர் தனனை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு போயிருந்தான். யெகூ என்பவன் சொன்னது உங்களுக்கு சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதனை அறிவிக்கிறதற்கு ஒருவரும் தப்பி போகும்படி விடாதிருங்கள் என்றான். அப்பொழுது யெகூ இரதத்தின் மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான். அங்கே யோராம் வியாதிப்பட்டிருக்கும் யோது அவனை பார்க்கும்படி யூதாவின் ராஜாவாகிய அகசியா அங்கு வந்திருந்தான். அப்போது யெஸ்ரயேலில் கோபுரத்தின் மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு, ஒரு கூட்டம் வருகிறது என்று யோராமிடம் சொல்ல; யோராம்; நீ ஒரு குதிரை வீரனை அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்க சொல் என்றான். அப்படியே குதிரை வீரன் எதிராக வந்து சமாதானமா என்று ராஜா கேட்க சொன்னார் என்ற போது யெகூ; சமாதானத்தைபற்றி உனக்கென்ன? என் பிறகே திரும்பி வா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இடமட்டும் போனபோதிலும் திரும்பி வரவில்லை என்றான். பின்பு அவன் வேறொரு குதிரை வீரனிடமும் அவ்விதம் சொல்லியனுப்பினான். அவன் அப்படியே போய் கேட்கும் போது, அதற்கும் யெகூ முந்தினது போலவே பதில் கொடுத்தான். இதனை பார்த்துக்கொண்டிருந்த ஜாமக்காரன் அவன் திரும்பி வராததைக்கண்டு யோராமிடத்தில் அவன் திரும்பி வரவில்லை என்றும்; ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறது போல் இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான். அப்போது யோராம்; இரதத்தை ஆயத்தப்படுத்து என்று சொல்லி இரதம் ஆயத்தப்படுத்தின போது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன் தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் நிலத்தில் அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.
பிரியமானவர்களே, முந்தின நாட்களில் நாம் கர்த்தருடைய வசனங்களை தியானிக்கையில் நாபோத்தை, ஆகாபின் மனைவியாகிய யேசபேலின் தூண்டுதல் பிரகாரம் கல்லெறிந்து கொலைசெய்த போது அவன் இரத்தத்தை நாய்கள் நக்கினதும்; அதனால் கர்த்தர் ஆகாபின் குடுப்பத்திற்கும் இட்ட சாபத்தை குறித்து தியானித்தோம். கர்த்தர் சொன்ன காரியமும், அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக பல காரியங்கள் நடந்து; பின் அவர் சொன்ன பிரகாரம் ஆகாபின் குமாரனாகிய யோராம் நாபோத்தின் நிலத்திலே யெகூவுக்கு எதிர்ப்பட்டு வருகிறான். இதற்காகவே கர்த்தர் எலிசாவைக்கொண்டு, தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அனுப்பி அவனை அபிஷேகிக்கிறார். ஆதலால் பிரியமானவர்களே நம்முடைய வாழ்வில் கர்த்தர் எதனை குறித்து திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் கிறஸ்துவின் திராட்சத்தோட்டமாகிய நம்முடைய ஆத்துமாவில் பலன் பெற்றுக்கொள்ளவிடாதபடி இருக்கிற பரஸ்திரீயின் கிரியைகள் நம்மில் தொடரந்து வராதபடியும் முழுமையும் அந்த வேர் இல்லாதபடி மீண்டும் முளைத்து எழும்பாதபடி முற்றிலும் அற்றுப்போகப்பண்ணினால் தான் நாம் நித்திய இரட்சிப்பைப்பெற்றுக்கொண்டு, கிருபையில் வளர்ந்து நல்ல கனிகளைக் கொடுத்து, கர்த்தரின் சித்தம் செய்து, ஆவியில் வளர்ந்து முடிவுபரியந்தம் காத்துக்கொள்ள முடியும். இதற்காகவே கர்த்தர் ஆகாபின் குடும்பம், அவன் பின் சந்ததிகளை கர்த்தர் நிர்மூலம் பண்ணுகிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. இவ்விதமாக நாம் பெற்ற அபிஷேகம் பத்திரமாக பாதுகாத்து, கர்த்தருக்காக முழு பக்தி வைராக்கியத்தோடு காணப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.