தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 75:10

துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளான மனுஷன் அந்நிய போதனைகளால் பாவ கறைகள் படாதபடி பாதுகாக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்ட அபிஷேகத்தினால் அவருக்காக முழு பக்தி வைராக்கியம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தப்படியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

 2 இராஜாக்கள் 9: 22 - 28 

யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்.

அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.

யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படத்தக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.

அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறி வருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.

நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.

இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப் போனான்.

அவனுடைய ஊழியக்காரர் அவனை இரதத்தின்மேல் எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவன் பிதாக்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும்,யெகூவுக்கு எதிர்பட்டு வருகிறார்கள்.  அப்போது யோராம் யெகூவைக் கண்டவுடனை; யெகூவே சமாதானமா என்றான்.  அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும், அவளுடைய பில்லிசூனியங்களும் இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான். அபபொழுது யோராம் தன் இரதத்தை திருப்பிக்கொண்டு ஓடிப்போய்; அகசியாவை நோக்கி அகசியாவே இது சதி என்றான். யெகூ தன் கையால் நணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படதக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.  அப்பொழுது யெகூ தன் சேனாபதியாகிய பிக்தாரை நோக்கி அவனை எடுத்து யெஸ்ரேயேலியனாகிய நாபோத்தின் வயல் நிலத்திலே எறிந்து போடு என்றும்; நானும், நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறி வருகிற போது கர்த்தர் சுமத்தின ஆக்கினை இதுதான் என்றும்; நேற்று நாபோத்தின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியை சரிக்கட்டுவேன் என்று சொன்ன வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்து போடு என்றான்.  இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வழியாய் ஓடிப்போனான்; இதனை யெகூ கண்டு பின்தொடர்ந்து அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றுசொல்ல; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின் மேல் ஏறுகிற வழியிலே அப்படி செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்து போனான்.  அவனுடைய ஊழியக்காரர் அவனை இரதத்தின் மேல் எருசலேமுக்குக் கொண்டு போய், அவனை தாவீதின் நகரத்தில் அவன் பிதாக்களோடு அவன் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.  

பிரியமானவர்களே, கர்த்தரால் அபிஷேகம் பண்ணபட்ட யெகூ, கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிந்து மிகவும் வைராக்கியத்தோடு யோராமை பட்டயத்தால் நிர்மூலம்பண்ணுகிறதை பார்க்கிறோம். யோராம் யெகூவுக்கு எதிராக வந்து சமாதானம் கேட்ட பிறகும், அவன் மனுஷன் சத்தத்தை காட்டிலும் கர்த்தரின் சத்தத்திற்கு கீழ்படிகிறவனாயும், கர்த்தருக்காக மிகவும் வைராக்கியம் உள்ளவனாயும் காணப்படுகிறான்.  அல்லாமலும் அவனை குறித்து சொல்லப்படுவது தகப்பனுடைய குதிரையின் பின்னால் இருந்ததால் கர்த்தரால் இந்த ஆக்கினை அவன்மேல் சுமத்தப்பட்டது என்கிறான்.  ஆதலால்  பிரியமானவர்களை, ஒருபோதும் நம் முன்னோர்களில் துரோக செயல்கள் இருக்குமானால், அவர்களோடு ஒரு போதும் நிற்கக்கூடாது என்பதும்,மற்றும் அவர்களுக்குள்ள உலக மேன்மைகள் நமக்குள் வரக்கூடாது என்பதும், அவ்விதம் அவர்களோடுள்ள உறவில், அவர்களுக்கு கொடுக்கிற ஆக்கினையோடுகூட கர்த்தர் அந்த ஆக்கினையில் நம்மையும் தீர்ப்பார் என்பதில் மாற்றமில்லை.  அல்லாமலும் கர்த்தர் இதனை திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் நம்முடைய உள்ளமாகிய  நிலத்தில் இரத்தபழி வருவதற்கு காரணமாயிருக்கிற துர் உபதேசத்தின் சக்தியை கர்த்தர் முழுமையும் அழிக்க சித்தமுள்ளவராயிருக்கிறார்.  மேலும் யார் எல்லாம் துர் உபதேசத்திற்கு உறு துணையாக இருக்கிறார்களோ, அவர்கள் யாராகயிருந்தாலும், யூதராயிருந்தாலும் (அபிஷேகம் பெற்றவர்கள்) அவர்கள் ஆத்துமாவையும் கர்த்தர் கொல்லுகிறவராயிருக்கிறார். 

ஆதலால் பிரியமானவர்களே நம் ஆத்துமா துர் உபதேசத்தால் கறைப்படாதபடி மிகுவும் ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும். இப்படியாக யெகூவை போல கிறிஸ்துவின் அபிஷேகம் பெற்று, நமக்குள் அந்நிய கிரியைகள் எழும்பாதபடி, நம்மை கர்த்தருக்காக முழுமையும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.