தேவனுக்கே மகிமையுண்டாவதாக
11கொரிந்தியர் 3:18
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் மகிமையில் எப்போதும் விளங்கிக்கொண்டிருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளான மனுஷன் அந்நிய போதனைகளால் பாவ கறைகள் படாதபடி பாதுகாக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11இராஜாக்கள் 9:30-37
யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்து,
யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி க்ஷேமம் அடைந்தானா என்றாள்.
அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,
உள்ளேபோய், புசித்துக் குடித்தபின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.
அவர்கள் அவளை அடக்கம்பண்ணப் போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையுமே அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.
ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
இன்னது யேசபேலென்று சொல்லக் கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் யெகூ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமையும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவையும் பட்டயத்தால் கொன்று போட்டபின்பு யெஸ்ரயேலுக்கு வந்தான். அவன் யெஸ்ரயேலுக்கு வந்தான் என்று யேசபேல் கேட்ட போது தன் கண்களுக்கு மையிட்டு,தன் தலையை சிங்காரித்துக் கொண்டு, ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து: யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள் தன் ஆண்டவனைக்கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள். அப்பொழுது அவன் தன் முகத்தை ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்பகு இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள் அப்பொழுது அவன் அவளை கீழே தள்ளுங்கள் என்றான்; அவர்கள் அவளை கீழே தள்ளினதினால் அவளுடைய இரத்தம் சுவரிலும், குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு, உள்ளேப் போய், புசித்துக் குடித்த பின்பு நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரயைப்பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான். பின்பு அவளை அடக்கப்பண்ண போகிறபோது அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையும் அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. ஆகையால் அவர்கள் திரும்பி வந்து யெகூவுக்கு அறிவித்தார்கள். அப்போது அவன் சொன்னது என்னவென்றால் திஸ்பியனாகிய எலியா என்னும் ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தை:யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தை தின்னும் என்றும் அவள் என்று சொல்லக்கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல் வெளியின் மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்று சொன்னாரே என்றான்.
பிரியமானவர்களே, யேசபேல் ஆகாபுடைய மனைவியாயிருக்கிறாள். இவர்கள் இருவரும் தந்திரகாரர்கள்; எப்படியென்றால் கர்த்தரின் மகிமை விளங்குகிற நம்முடைய நல்ல திராட்ச தோட்டத்தை எப்படியாகிலும் கீரைகொல்லையாக்கும்படி, நம்முடைய உள்ளத்தில் பல விதத்தில் கர்த்தரின் சத்திய உபதேசத்திற்கு மாறாக துர்கிரியைகள் எழுப்பி, உள்ளத்தை வஞ்சித்து வைத்து, நம்முடைய ஆத்துமாவை கொலை செய்து விடுகிறாள். ஆதலால் கர்த்தர் அவளை அழிக்க சித்தமுள்ளவராய் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்படுகிறார். பின்பு கிறிஸ்து அவளை நியாயந்தீர்க்கிறார். அவளை கர்த்தர் நம்மிடத்திலிருந்து கீழே தள்ளுகிறார்; அப்போது அவள் கர்த்தரால் மிதிக்கப்படுகிறாள் அவளுடைய ஒவ்வொரு அவயமும் துண்டு துண்டானது. அவளுடைய இரத்தம் குதிரைகளில் தெறித்தது என்றால் நம் ஆத்துமாவில் ; ஏனென்றால் அவள் நம்முடைய ஆத்துமாவில் இருந்துக்கொண்டு தான் கர்த்தருக்கு விரோதமான செயல்களை செய்துக்கொண்டிருக்கிறாள். எப்படியென்றால் பல உலக சிற்றின்பத்திற்கான அலங்காரங்களாகிய வேசித்தன கிரியைகளை செய்ய வைக்கிறாள். ஆனால் நாம் மனந்திரும்பி கர்த்தரிடத்தில் சேர்வோமானால் கர்த்தர் அந்த பொல்லாத ஆவியோடு போராடி, அதனை மேற்க்கொண்டு அவள் செய்த கிரியைகளையெல்லாம் நம்மை விட்டு மாற்றி, நம்மை தூய்மைப்படுத்தி, இவ்வுலக சிற்றின்பங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கி இரட்சித்து, நம்மை அந்த பொல்லாத ஆவி மேற்கொள்ளாதபடி நம்மை முற்றிலும் பாதுகாத்து இரட்சிக்க வல்லமையுள்ளவரராக விளங்கிக்கொண்டிருக்கிறார். அப்படியாக நம் உள்ளத்தில் கர்த்தரின் திராட்ச தோட்டமாகிய கிறிஸ்துவின் மகிமை குறைவில்லாமல் விளங்கிக் கொண்டிருக்கும். மேலும் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது இன்னதென்று அறிந்துக்கொண்டு வாழ கர்த்தரிடத்தில் கற்றுக்கொள்ளவேண்டும். உள்ளத்தில் பாகாலுடைய பலிபீடமாகிய விக்கிரக கிரியைகள் இருக்குமானால், ஆகாப் ராஜாவாகவும், மனைவியாகிய மணவாட்டியாக யேசபேலும் செயல்படுவார்கள். அப்படி இடம் கொடுப்போமானால் கர்த்தரின் மகிமை விளங்குவதற்கு மாறாக பிசாசின் கிரியைகள் உள்ளத்தில் பெருகிக்கொண்டிருக்கும். ஆதலால் நாம் உபதேசத்தில் ஜாக்கிரதையாகயிருந்து கர்த்தர் மகிமையின் மேல் மகிமையடைந்து என்றென்றும் நம்மில் விளங்கும்படியாக நம்மை சத்திய வசனத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.