தேவனுக்கே மகிமையுண்டாவதாக

உபாகமம் 29:18 

ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம்,  நம்முடைய ஆத்துமாவில் அசுத்த ஆவிகள் தொடர்ந்து கிரியை செய்து வஞ்சிக்கபடாதபடி முழுமையும் வேரற்று போக பண்ண வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் மகிமையில் எப்போதும் விளங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 10: 1-11

ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.

அதில்: உங்கள் ஆண்டவனுடைய குமாரர்கள் உங்களோடிருக்கிறார்களே; இரதங்களும், குதிரைகளும், அரணான பட்டணமும் ஆயுதங்களும் உங்களுக்கு உண்டே.

இப்போதும் இந்த நிருபம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய குமாரரில் உத்தமமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் ஆண்டவனுடைய குடும்பத்துக்காக யுத்தம்பண்ணுங்கள் என்று எழுதியிருந்தது.

அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.

ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.

அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரரின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.

இந்த நிருபம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.

அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுகவாசலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்.

மறுநாள் காலமே அவன் வெளியே வந்து நின்று, சகல ஜனங்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் ஆண்டவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்?

ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்.

யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச்சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு யெகூ கொன்றுபோட்டான்.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் ஆகாபுக்கு சமாரியாவிலே எழுபது குமாரர்கள் இருந்தபடியினாலே யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்திற்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்திற்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.  அதில் எழுதியிருந்ததாவது; உங்கள் ஆண்டவனுடைய குமாரர்கள் உங்களோடிருக்கிறார்களே; இரதங்களும், குதிரைகளும், அரணான பட்டணமும் யுத்தங்களும் உங்களிடத்தில் உண்டே.  இப்போதும் இந்த நிருபம் உங்களிடத்தில் வரும் போது நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய குமாரரில் உத்தமும், செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின் மேல் வைத்து, உங்கள் ஆண்டவனுடைய குடும்பத்துக்காக யுத்தம் பண்ணுங்கள் என்று எழுதியிருந்தது.  இதனை கண்டவுடன் அவர்கள் மிகவும் பயந்து: இதோ இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்பதில்லை என்று சொல்லி, அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும்,பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும் நாங்கள் உமது அடியார்கள்.  நீர் எங்களுக்கு சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குதில்லை; உமது பார்வைக்கு சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்கு சொல்லியனுப்பினார்கள்.  அப்பொழுது அவன் அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில் எழுதியிருந்ததாவது  நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லை கேட்பீர்களாகில், உங்கள் ஆண்டவனுடைய  குமாரரின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலில் என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது.  ராஜாவின் குமாரராகிய எழுபது பேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.  இந்த நிரூபம் அவர்களிடத்தில் வந்த போது, அவர்கள் ராஜாவின் எழுபதுபேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளை கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.  அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜ குமாரரின் தலைகளைக் கொண்டு வந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்த போது, அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுக வாசலில் இரண்டு குவியலாக குவித்துவையுங்கள் என்றான்.  மறு நாள் காலமே அவன் வெளியே வந்து நின்று, சகல ஜனங்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ நான் ஆண்டவனுக்கு விரோதமாக கட்டுப்பாடு பண்ணி அவனை கொன்று போட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்? என்று சொல்லி கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக் கொண்டு சொன்னதை செய்தார் என்றான்.  மேலும் யெகூ கர்த்தரின் சித்தத்தின்படி ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனை சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும் அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடி கொன்றுப்போட்டான்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகள் என்னவென்றால் கர்த்தர் எலியாவைக்கொண்டு ஆகாபின் குடும்பத்தாருக்கு சொன்ன அத்தனை காரியங்களையும் யெகூவை வைத்து கர்த்தர் செய்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  எப்படியென்றால் நம்முடைய உள்ளத்தில் பாகாலின் பலிபீடமாகிய விக்கிரக எண்ணங்கள் முழுமையும் வேரோடே அற்றுப் போகும்படி கர்த்தர் செய்கிறார் என்பது நமக்கு நன்றாக கர்த்தர் விளக்குகிறார். நம்முடைய உள்ளான மனுஷனின் மகிமை குறைந்து போகாமல் பாதுகாக்கும்படியாக  கர்த்தர் நம்முடைய வாழ்வில் சத்தியத்திற்கு மாறாக துர் உபதேசத்திற்கு இடம் கொடாமல் இருக்கும்படியாகவே ஆகாபின் வம்சமாகிய எழுபது பேரையும் மொத்தமாக வேரற்றுபோக பண்ணுகிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது.  அப்படியாக பிரியமானவர்களே,  நாமும் நம்முடைய வாழ்வில் எந்த துர் இச்சைகளுக்கும் உள்ளத்தில் இடம் கொடாதபடி ஜாக்கிரதையாகயிருந்தால் நம் வாழ்வில் உள்ளமானது அந்நிய ஆவிகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு விழுந்து போகாதபடி  பாதுகாத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.