தேவனுக்கே மகிமையுண்டாவதாக
வெளி 12:12
ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மில் தேவனுடைய ராஜ்யம் என்றும் நிலைத்திருக்கிறவர்களாகவும், பாகாலின் அத்தனை கிரியைகளையும் நாம் விட்டுவிட வேண்டும் என்பதன் திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய ஆத்துமாவில் அசுத்த ஆவிகள் தொடர்ந்து கிரியை செய்து வஞ்சிக்கபடாதபடி முழுமையும் வேரற்று போக பண்ண வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 10: 12 - 17
பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது,
யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்.
அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டு பேர்களாகிய அவர்களை ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே வெட்டிப் போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.
அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,
நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.
அவன் சமாரியாவுக்கு வந்தபோது, கர்த்தர் எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீருமளவும் சங்காரஞ்செய்தான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் யெகூ ஆகாபை சேர்ந்த சகல பேரையும் கொன்றுபோட்ட பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்கு போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்திற்கு வந்த போது யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு; நீங்கள் யார் என்று கேட்கும்போது; அவர்கள் நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும், ராஜ ஸ்திரீகளின் பிள்ளைகளையும் வினவுகிறதற்கு போகிறோம் என்றார்கள். அப்பொழுது யெகூ அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டு பேர்களாகிய அவர்களை ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் மீதியாக விடவில்லை. அவன் அவ்விடம் விட்டு புறப்பட்ட போது தனக்கு எதிரிட்டு வந்த ரேகாபின் குமாரனாகிய யோனதாபை சந்தித்து; அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடு செம்மையாய் இருக்கிறதா என்று கேட்டான்; அதற்கு அவன் அப்படியே இருக்கிறது என்றபோது; அப்படியானானல் உன் கையை தா என்று சொல்லி; அவன் கையை கொடுத்தபோது, அவனை தன்னிடத்தில் இரதத்தின் மேல் ஏறிவரசொன்னான். அப்படியாக அவனிடம் அவன் சொன்னது என்னவென்றால்; நீ என்னோடேக்கூட வந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கித்தை பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின் மேல் ஏற்றினான். அவன் சமாரியாவுக்கு வந்த போது, கர்த்தர் எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்து தீருமளவும் சங்காரஞ்செய்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, யெகூ கர்த்தருக்காய் வெகுபக்திவைராக்கியம் உள்ளவனாக காணப்படுகிறான். மேலும் கர்த்தர் எலியா மூலம் சொன்ன காரியங்களில் ஒன்றையும் அவன் தரையிலே விழவிடாமல், எல்லாவற்றையும் வைராக்கியத்தோடு செய்கிறதை பார்க்கிறோம். அல்லாமலும் பாகாலை சேவிக்கிறவர்களில் ஆகாபை சார்ந்த எல்லாவரையும் சங்கரிக்கிறான். மற்றும் ஆட்டுமயிர் கத்தரிக்கும் மேய்ப்பர்கள் இருக்கும் இடத்தில் வைத்து அகசியாவின் சகோதரர்களில் நாற்பத்திரண்டு பேரை ஆட்டுமயிர் கத்தரிக்கும் துரவண்டையில் வைத்து வெட்டிப்போடுகிறதை பார்க்கிறோம். இதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் கர்த்தரின் வேலை செய்யும் போது, ஜனங்களின் சுத்திகரிப்பில்; அவர்கள் கர்த்தருக்கு மாறான உபதேசம்கொடுக்கிறவர்களை காட்டுகிறது; அவர்கள் ஆகாபை சேர்ந்தவர்களும், பாகாலாகிய அந்நிய தெய்வங்களை ஆராதிக்கிறவர்களுமாயிருக்கிறார்கள். ஆதலால் அவர்களை அடியோடு அழித்து சங்காரம்பண்ணப்படுகிறதென்றால் நம் உள்ளத்தில் எந்த அந்நிய உபதேசங்கள் இடம் கொள்ளாதபடி எல்லாவித மாம்ச சிந்தைகளை கர்த்தரின் ஆவியினால் அழித்து நிர்மூலம் பண்ணி நம்மை முழுமையும் சுத்திகரிக்க வேண்டும். அப்படியானால் தேவனுடைய ராஜ்யம் நம்மில் என்றும் நிலைத்திருக்கும். இவ்விதமாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.