தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ரோமர் 1:18
சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கர்த்தரின் சத்தியத்திற்காக வைராக்கித்தோடு போராட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மில் தேவனுடைய ராஜ்யம் என்றும் நிலைத்திருக்கிறவர்களாகவும், பாகாலின் அத்தனை கிரியைகளையும் நாம் விட்டு விட வேண்டும் என்பதனை குறித்தும் திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
11இராஜாக்கள் 10:18-36
பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.
இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.
பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே கூறினார்கள்.
யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினபடியினால், பாகாலின் பணிவிடைக்காரர் எல்லாரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததினால் பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருந்தது.
அப்பொழுது அவன், வஸ்திரசாலை விசாரிப்புக்காரனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவந்தான்.
பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து, பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி: பாகாலின் ஊழியக்காரரே அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான்.
அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பதுபேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.
சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும்போய்,
பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
பாகாலின் சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல மலஜலாதி இடமாக்கினார்கள்.
இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்.
ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.
கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.
ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.
அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறியஅடித்து,
யோர்தான் துவக்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்குச் சமீபமான ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காதியர், ரூபேனியர், மனாசேயர் இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் முறிய அடித்தான்.
யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணின நாட்கள் இருபத்தெட்டு வருஷம்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்டவைகள் என்னவெனில் யெகூ ஆகாபின் ஆட்களை எல்லாம் சங்கரித்த பின்பு ஜனங்களையெல்லாம் கூடி வர செய்து அவர்களை நோக்கி; ஆகாப் பாகாலை சேவிப்பது கொஞ்சம், யெகூ அவனை சேவிப்பது மிகுதி என்று சொல்லி, இப்போதும் பாகாலின் சகல தீர்க்கத்தரிசிகளையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள் என்றும் ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்கு பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான். பாகாலின் பணிவிடைக்காரர்களை அழிக்கும்படி யெகூ இதை தந்திரமாக செய்தான். மேலும் பாகாலுக்கு பண்டிகை ஆசரிப்பைக் கூறுங்கள் என்று இஸ்ரவேலெங்கும் சொல்லியனுப்பினப்படியால் பாகாலின் பணிவிடைக்காரர் எல்லாரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததினால் பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருந்தது. அப்பொழுது யெகூ வஸ்திரசாலை விசாரிப்புகாரனிடம் சொன்னது; பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு வர சொன்னான், அப்படியாக வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு வந்தான். பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து; பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி; பாகாலின் ஊழியக்காரரே அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடுகூட இராதபடிக்குத் திட்டமாய் விசாரியுங்கள் என்றான். அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகன பலிகளையும் செலுத்த உட்பிரவேசித்த போது, யெகூ வெளியிலே எண்பது பேரை தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்ப விடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாகஅவனைத் தப்ப விட்டவனுடைய ஜீவன் ஈடாகும் என்றான். பின்பு யெகூ சொன்னது
11இராஜாக்கள் 10:25-29
சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும்போய்,
பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,
பாகாலின் சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல மலஜலாதி இடமாக்கினார்கள்.
இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்.
ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.
மேற்கூறப்ட்ட கர்த்தரின் வார்த்தைகளை செய்து முடித்த பின்பு கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்கு செம்மையானதை நீ நன்றாய் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்திற்கு செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின் மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார் ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்க கவலைப்படவில்லை; இஸ்ரவேலை பாவம் செய்ய பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவுமில்லை. அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலை குறைந்துபோக பண்ணினார். ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து யோர்தான் துவக்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்கு சமீபமான ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலும் காதியர். ரூபேனியர்,மனாசேயர் இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் முறிய அடித்தான். யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. யெகூ தன் பிதாக்களோடு நித்திரையடைந்த பின் அவனை சமாரியாவில் அடக்கம் பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவகாஸ் ராஜாவானான். யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின் மேல் ராஜ்யபாரம் பண்ணின நாட்கள் இருபத்தெட்டு வருஷம்.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது யெகூ மிகுந்த பக்தி வைராக்கியத்தை காண்பிக்கிறான். அது போல நாமும் கர்த்தருக்காய் மிகவும் வைராக்கியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். மற்றும் கர்த்தரின் இருதயத்தின் நினைவுகளின் படியெல்லாம் அவன் செம்மையாய் செய்தபடியாலும் அவனுடைய நாலு தலைமுறைகளுக்கு கர்த்தர் அவருடைய ராஜ்யத்துக்கு தகுதியாக்குகிறார். அல்லாமலும் நியாயபிரமாணத்தின் படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை. கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே; நம்மளில் எத்தனை பேர் அவ்விதமாக இருக்கிறோம் என்பதனை சிந்தித்து கொள்ள வேண்டும். மேலும் நம்மில் எத்தனை பேர் கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றபடி செம்மையாய் நடக்கிறோம் என்பதனை யோசித்து பார்க்க வேண்டும். சத்தியத்தை சொல்லுகிறதினால் அநேகர் ஏற்றுக்கொள்ளமுடியாமல் சபைக்கு சத்துருக்களாகிவிடுகிறார்கள். அப்படிபட்டவர்களிடம் தேவன் கோபமுள்ளவராக காணப்படுகிறார். ஆதலால் பிரியமானவர்களே, கர்த்தரின் இருதயத்திற்கேற்றபடி நாம் சத்தியத்தின்படி நடந்துக்கொள்வோமானால் கர்த்தர் நம் சபையாகிய தலைமுறைகளை ஆசீர்வதிக்கிறவர். ஆதலால் நாம் கர்த்தரின் இருதயத்தின் நினைவின் படியாக சத்தியத்திற்கு சாட்சியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.