தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 84:5
உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் அணிந்துக் கொள்கிற கன்றுக்குட்டிகளாகிய பொன்னும் வெள்ளியும் மாற்றிக்கொண்டு கர்த்தருக்காக பக்தி வைராக்கியம் உள்ளவர்களாக இருப்போமாகில் நமக்கேற்ற பிரதிபலனை கர்த்தர் தருகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொரும் சத்தியத்திற்காக போராடுகிறவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.
அதோடுகூட நாம் அறிந்து கொள்ள வேண்டிய காரியம் என்ன வென்றால் யெகூவை வைத்து கர்த்தர் ஆகாபின் குடும்பம் முழுவதையும் ஆக்கினைக்குட்படுத்துகிறார். எதற்காகவென்றால் 2 இராஜாக்கள் 9:7-9 ல் கர்த்தர் யெகூவிடம் சொன்ன வார்த்தையாவது;
நான் என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், கர்த்தருடைய சகல ஊழியக்காரரின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படிக்கு நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடக்கடவாய்.
ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படிக்கு, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர் விடும் ஒரு நாய் முதலாய் இராதபடிக்கு, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் கருவறுத்து,
ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சரியாக்குவேன்.
மேற்கூறிய வசனங்களில் எழுதியிருக்கிற காரியங்களினால், உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்து விடக்கடவாய் என்றார். மேலும் ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் குமாராகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சரியாக்குவேன் என்றார். அவ்விதமாக செய்யும்படியாக கர்த்தர்,யெகூவை மிகுந்த வல்லமையோடு அபிஷேகித்திருந்தார். ஆனால் அவன் ஆகாபின் குடும்பத்தை முழுமையும் அழிக்கிறான், பாகால் கோவில்களின் விக்கிரகங்களை வெளியே எடுத்து தீக்கொளுத்துகிறான். மேலும் பாகாலின் சிலையை தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள் வரைக்கும் இருக்கிறது போல, அவனும், அவனோடு சேர்ந்த எண்பது பேராக அந்த இடத்தை மலஜலாதி இடமாக்கினார்கள். இவ்விதமாக அவனுக்கு அதிக வல்லமை கர்த்தர் கொடுத்தும், அவனுடைய தலைமுறைகளை கர்த்தர் ஆசீர்வதித்தும், அவன் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின் படி, முழு இருதயத்தோடும் நடக்க கவலைப்படவில்லை என்றும், யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை என்றும் கர்த்தர் கூறுகிறார். இப்படியாக தான் நம்மிலும் அநேகர் கர்த்தரால் அபிஷேகம் பெற்று வல்லமையடைந்திருந்தும், கர்த்தரின் சத்திய வசனங்களுக்கு முழுமையாக தங்கள் இருதயத்தைக்கொடுக்காமல் இருக்கிறோம். என்னவென்றால் கிறிஸ்தவர்களென்று சொல்கிற அநேகர் மரத்தாலும், மண்ணாலும் விக்கிரகத்தை செய்து தொழுகிறதை விட்டு விட்டாலும் தாங்கள் சரீரத்தில் அணிந்துக் கொள்கிற தட்டானால் செய்ப்பட்ட பொன்னும், வெள்ளியும் மாற்றாமல் இருந்துக்கொண்டு தான் சரியாக தான் இருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு, தங்களுக்கு கர்த்தர் கொடுத்திருக்கிற வல்லமையே போதும் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அ்ப்படிப்பட்டவர்களிடம் நித்திய ஜீவன் நிலைத்திராது என்பதனை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். இதனை குறித்து தான் கர்த்தர் சொல்வது
லூக்கா 9:23-26
பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களை நாம் கடைப்பிடித்து, நாம் புறம்பே தள்ள வேண்டிய காரியங்களை புறம்பே மாற்றி, கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றிக்கொண்டு, நம் வாழ்வை சீர்படுத்திக்கொண்டு, கர்த்தருக்காக பக்தி வைராக்கியம் காண்பிப்போமாகில் கர்த்தர் நமக்கு பிரதிபலன் தருகிறவராயிருக்கிறார். இதனை நாம் கருத்தில் கொண்டு, நாம் ஒவ்வொருவரும் கிறிஸதுவுக்குள் நம்மை திடப்படுத்தி, பலப்படுத்தி கொண்டு ஆவிக்குரிய வளர்ச்சியில் வளரும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.