தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119:133

உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் இழந்த அபிஷேகம் மீண்டும் கிறிஸ்துவினால் புதுபிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அணிந்துக் கொள்கிற கன்றுக்குட்டிகளாகிய பொன்னும் வெள்ளியும் மாற்றிக்கொண்டு கர்த்தருக்காக பக்தி வைராக்கியம் உள்ளவர்களாக இருப்போமாகில் நமக்கேற்ற பிரதிபலனை கர்த்தர் தருகிறார் ன்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 11:1-5

அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம்பண்ணினாள்.

யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளிஅறையில் ஒளித்துவைத்தார்கள்.

இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.

ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக்கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,

அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும்.

மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும்போது, யூதாவின் ராஜாவாகிய அகசியாவை யெகூவின் கூட்டத்தார் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர் மலையின் மேல் ஏறுகிற வழியிலே வெட்டி போட்டார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் செத்து போகிறான்.  அகசியாவின் தாயாகிய அத்தாலியாள், தன் குமாரன் இறந்துப் போனதை கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார் யாவரையும் சங்காரம் பண்ணினாள். யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும், அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள் கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசை களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்கு தெரியாமல் பள்ளியறையில்  ஒளித்து வைத்தார்கள்.  ஆனால் ஆறு வருஷம் அவன் தாதியோடே கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான். அந்நாளிலே அத்தாலியாள் தேசத்தின் மேல் ராஜ்யபாரம் பண்ணினாள்.  ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறு பேருக்கு அதிபதிகளையும், தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களை தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடே  உடன்படிக்கைப்பண்ணி, அவர்களை கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக்கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரரை காண்பித்து அவர்களுக்கு சொன்னது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 11:5 -7 

அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும்.

மூன்றில் ஒருபங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒருபங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும்.

இப்படியே ஓய்வுநாளில் முறைப்படியே உங்களில் இரண்டுபங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் எழுதப்பட்டிருக்கிறபடி ஆலயத்தை காக்க வேண்டும். நீங்கள் அவரவர் ஆயுதங்களை கையிலே பிடித்தவர்களாய், ராஜாவை சுற்றிலும் வரிசையாய் நின்று கொண்டிருக்க வேண்டும்.  வரிசைகளுக்குள் புகுந்து வருபவன் கொலைச்செய்யப்பட கடவன்.  ராஜா வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் நீங்கள் அவரோடே கூட இருங்கள் என்றான். ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி  வருகிறவர்களும், போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.  ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும்  கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.  அவரவர் தங்கள் ஆயுதங்களை பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலது பக்கம் தொடங்கி அதின் இடது பக்கம் மட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவை சுற்றிலும் நின்றார்கள்.   அப்பொழுது அவன்; ராஜகுமாரனை வெளியே கொண்டு வந்து கிரீடத்தை அவன் மேல் வைத்து; சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை அபிஷேகம் பண்ணி; ராஜா வாழ்க என்று சொல்லி கைக்கொட்டினார்கள்.  

பிரியமானவர்களே, நாம் கர்த்தரால் அபிஷேகம் பண்ணபட்ட பின்பு நம்முடைய வாழ்வில் ஆகாதவர்களோடு தொடர்பு கொள்ளும்போது, நம்முடைய ஆத்துமா கொல்லப்படுகிறது; அதென்னவென்றால் எந்த ஒரு காரியத்திலும் கர்த்தரின் ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் சம்மந்தமில்லை என்பதனை கர்த்தர் நமக்கு திடமாக அறிவித்தும், விக்கிரகராதனை செய்கிறவர்களோடு பல காரியங்களில் ஈடுபாடுள்ளவர்களாக இருக்கிறதால் நம் ஆத்துமா கொல்லப்படும் என்பதனை முந்தின தேவனுடைய வசனங்கள் மூலம் திருஷ்டாந்த படுத்துகிறார்.  அப்படியாக நம் ஆத்துமா கொல்லப்பட்டாலும் நமக்கு புதுப்பிக்கிற ஒரு அனுபவம் உண்டு.  எப்படியென்றால் நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் மறைந்து வசிக்கிறவர்களாகவும், எந்த பாவமோக இச்சைகளிலும் விழுந்து விடாதபடி நம்முடைய வாழ்வை கண்ணியமாக பாதுகாத்து கிறிஸ்துக்குள் மறைந்து வாழ்வோமானால், ஏற்ற நாளில் கர்த்தர் நமக்கு புது அபிஷேகம் தந்து ஆசீர்வதிக்கிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. மேலும் நம்மை அவர் தம்முடைய தூதர்களை வைத்து, அவருடைய பட்டயமாக வசனத்தால் நம்மை சூழ மதில் போட்டு, சத்துரு நம் ஆத்துமாவை தொடாதபடி காத்துக்கொள்கிறார்.  ஆதலால் இந்நாளில் நம் வாழ்வில் நாம் அந்நிய ஆராதனையில் சிக்குண்டு நிலையற்றுயிருப்போமாகில்  இப்பொழுதே  கர்த்தரின் கையில் ஒப்புக்கொடுப்போம்.  கர்த்தர்  நம்மை ஏற்ற நாளில் உயர்த்துவார்.  இப்படியாக நம்மை கர்த்தரின் பாதத்தில் தாழ்மையோடு ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.