தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 32:18
என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் சீயோனாக மாறுதல்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் பெற்ற அபிஷேகம், மீண்டும் புதுப்பிக்கிறதை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 11:13- 21
ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,
இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.
ஆசாரியனாகிய யோய்தா ராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.
அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்று போட்டார்கள்.
அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து,
பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்று போட்டார்கள்; ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.
நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப் பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.
மேற்கூறிய வசனங்களில் யோவாஸை ராஜாவே அபிஷேகம் பண்ணினதை கண்டதை ஜனங்கள் சந்தோஷத்தோடு ஆர்ப்பரிக்கிற சத்தத்தை அத்தாலியால் கேட்டபோது, தன் வஸ்திரத்தை கிழித்துக்கொண்டு இது துரோகம், துரோகம் என்று கூவினாள். இதனால் ஆசாரியனாகிய யோய்தா இராணுவ தலைவராகிய நூறுபேருக்கு அதிபதியானவர்களுக்கு கட்டளையிட்டு, அவளை வரிசைக்கு புறம்பே கொண்டு போகவும், இவளை பின்பற்றுகிறவனை பட்டயத்தால் வெட்டி போடவும் கட்டளையிட்டான். ஆனால் ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று சொல்லியிருந்ததால், அவளுக்கு இடம் உண்டான போது, அவளை ராஜ அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவளை கொன்றுப்போட்டார்கள். பின்பு யோய்தா அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும். ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கை பண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து, பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாக கொன்றுப்போட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான். பின்பு நூறுபேருக்கு அதிபதிகளையும், தலைவரையும், காவலாளரையும், தேசத்தின் ஜனங்களை கூட்டி,ராஜாவை கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, அவனை காவாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அங்கே அவன், ராஜாக்களுடைய சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தான். தேசத்து ஜனங்கள் எல்லாம் மகிழ்ந்து நகரம் அமைதலாயிருந்தது. அத்தாலியாளையோ ராஜாவின் அரண்மனையண்டையில் பட்டயத்தால் கொன்றுப்போட்டார்கள். யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற பகுதிகளை நாம் தியானிக்கும் போது, அது நம்முடைய திருஷ்டந்தத்திற்கென்று கர்த்தர் நமக்கு விளக்கி காட்டுகிறார். என்னவென்றால் நம்முடைய ஆத்துமா கர்த்தரால் அபிஷேகம் பண்ண பட்டால் அது நம்முடைய ஆசாரியராகிய கிறிஸ்துவினால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அதனை பரிசுத்தவான்களாகிய தூதர்கள் காவல் புரிவார்கள் என்றும், பொல்லாத பரஸ்திரீ பொறாமையோடு நாம் பெற்ற அபிஷேகத்தை அழிக்க முற்படுவாள்; இதனை நாம் கருத்தில் கொண்டு ஜாக்கிரதையோடுகூட காணப்பட வேண்டும். அல்லாமலும் நாம் பெற்ற அபிஷேகம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ராஜாவாக சிங்காசனத்தில் வீற்றிருப்பார் என்பதும், அந்த இடமாகிய நம் உள்ளம் சீயோன் நகரமாகவும், அந்த நகரம் அமைதியும், இதனை பெற்றவர்கள் மகிழ்ந்து களிகூருவார்கள் என்பதும் திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல ஜனங்களும் கிறிஸ்துவும் உடன்படிக்கை பண்ணவும் செய்வார்கள். அவ்விதம் உடன்படிக்கை பண்ணினவர்கள், பாகால் கோவில்களை உள்ளத்திலிருந்து அழித்து, பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் உடைத்து, பூஜாசாரியின் கிரியைகளை கர்த்தரின் வசனமாகிய பட்டயத்தால் அழித்து விடுவார்கள். அத்தாலியாளாகிய பொல்லாத ஸ்திரீயை நம்உள்ளமாகிய கிறிஸ்துவின் சிங்காசனமாகிய நீதியும், நியாயமும் நிறைந்த ராஜாவின் அரண்மனையண்டையிலே வசனமாகிய பட்டயத்தால் அழிப்போம். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே அவ்விதமாக பொல்லாத ஸ்திரீ நம்மிலிருந்து அழிக்கப்பட்டால் மாத்திரமே நம்மில் பரிசுத்தம் விளங்கும் போது சீயோன் நிலைத்திருக்கும். நாம் கிறிஸ்துவுக்குள் என்றென்றும் நிலைத்திருப்போம்,அவரும் நம்மில் நிலைத்திருந்தால் நாம் அவருக்கேற்ற நல்லகனிக்கடுக்கிறவர்களாயிருப்போம். இப்படியாக நம் உள்ளத்தில் எழும்புகிற பொல்லாத எண்ணங்களை அழிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.