தேவனுக்கே மகிமையுண்டாவதாக
2 கொரிந்தியர் 9:7
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாமே முதலில் நம்மை கர்த்தருக்கென்று காணிக்கையாக ஒப்படைக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சீயோனாக மாறுதல் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 12: 1-3
யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.
ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
மேடைகளைமாத்திரம் அகற்றவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; பெயர்செபா ஊராளாகிய அவனுடைய தாயன் பெயர் சிபியாள். ஆசாரியனாகிய யோய்தா யோவாசை போதகம் பண்ணின நாளெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான். மேடைகளை மாத்திரம் அகற்றவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டு தூபங்காட்டி வந்தார்கள். யோவாஸ் ஆசாரியரை நோக்கி சொன்னதாவது
2 இராஜாக்கள் 12:4-5
யோவாஸ் ஆசாரியரை நோக்கி: பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும், இலக்கத்திற்குட்படுகிறவர்களின் பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும்படி, அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும்,
ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.
மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை கேட்ட ஆசாரியர்கள் ஆலயத்தை பழுது பாராமல் போனபடியால் ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியர்களையும் அழைப்பித்து; நீங்கள் ஆலயத்தை பழுது பாராதே போனதென்ன? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக விட்டு விடுங்கள் என்றான். அப்பொழுது ஆசாரியர்கள் ஜனத்தின் கையிலே பணத்தை வாங்கிக் கொள்ளாமலும், ஆலயத்தை பழுது பாராமலும் இருக்கிறதற்கு சம்மதித்தார்கள். அப்பொழுது ஆசாரியனாகிய யோய்தா கர்த்தருக்கென்று காணிக்கைக்காக ஒரு பெட்டியை உண்டாக்கி, அதனை பலிபீடத்தண்டையில் கர்த்தருடைய ஆலயத்தில் உட்பிரவேசிக்கும் வலது பக்கத்தில் வைத்தான்; வாசற்படியை காக்கும் ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டு வரபட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள். பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று கண்டபோது, ராஜாவின் சம்பிரதியும், பிரதான ஆசாரியனும் வந்து; கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எடுத்து எண்ணி முடிப்புக்கட்டி, அந்த பணத்தை கர்த்தரின் ஆலயத்தின் விசாரிப்புக்காரர்கள் கையிலேக்கொடுக்கும் போது, அவர்கள் ஆலயத்தை பழுது பார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், கல் தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்க தேவையான மரங்களையும், வெட்டின கற்களைக்கொள்ளுகிறதற்கும், ஆலயத்தை பழுதுப்பார்க்கிறதற்குச் செல்லும் எல்லா செலவுக்கும் கொடுப்பார்கள். கர்த்தருடைய ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், கீத வாத்தியங்களும், கலங்களும்,எக்காளங்களும், பொற்பாத்திரங்ளும்,வெள்ளிப்பாத்திரங்களும் பண்ணபடாமல், கர்த்தருடைய ஆலயத்தை பழுதுப்பார்க்கும்படி வேலைக்காரர்களுக்கே அதனைக் கொடுத்தார்கள். அதனை பற்றிக்கொண்ட மனுஷர் கையிலே கணக்கு கேளாதிருந்தார்கள்; அவர்கள் அதனை உண்மையாய் நடப்பித்தார்கள்.
மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை நாம் கவனிக்கும் போது, அது நம்முடைய வாழ்வின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு திருஷ்டாந்தப்படுத்தப்பட்டிருக்கிறது. எப்படியென்றால் நம்மில் அபிஷேகம் கிடைப்பது, நம்மை ஆவிக்குரிய பாதையில் நடத்தி வருகிற கர்த்தரின் உண்மையான ஊழியகாரர்களின் செயல்பாடுகளை பற்றியிருக்கிறது. ஏனென்றால் யோய்தா ஆசாரியனாக இருக்கும் போது, யோவாஸ் ஏழு வயதில் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான். ஆதலால் நம்மிலும் கிறிஸ்துவின் உபதேசத்தில் நாம் உண்மையோடு வாழ்வோமானால், சிறு வயதிலும் கர்த்தர் நம்மை அபிஷேகிப்பார். அதுமட்டுமல்ல நாம் கர்த்தரின் போதகத்தில் உண்மையாகயிருப்போமாகில், செம்மையும் நேர்மையுமாய் நடக்க கற்றுக்கொள்வோம். மேலும் நம்முடைய ஆவி,ஆத்தும, சரீரம் கர்த்தருக்கென்று பரிசுத்த காணிக்கையாக செலுத்த வேண்டும். அதுமட்டுமல்ல, நம் சரீரமாகிய கிறிஸ்துவின் ஆலயம் எப்போதும் பழுதடையாமல் கர்த்தருடைய வசனத்தால் நம் ஆவிக்குரிய வாழ்வில் வருகிற பழுதை தீர்க்கிறவர்களாகயிருக்க வேண்டும். அல்லாமலும் கர்த்தருடைய ஊழியக்காரர்கள், கர்ததருடைய ஆலயத்திற்காக கொடுக்கிற காணிக்கையை கரத்தால் வாங்கக்கூடாது. மற்றும் ஆலய பணிக்காக தருகிற காணிக்கையை ஆலயப்பணி மட்டும் தான் செய்ய வேண்டுமேயன்றி, வேறொருக்காரியத்தை ஆலயத்திற்காகிலும் செய்யக்கூடாது. அதன் பின்பு நாம் அறிய வேண்டிய காரியம் என்னவென்றால் அதற்காக உள்ள காணிக்கையை வேலைக்காகக்கொடுத்தபிறகு, வாங்கியவர்களிடம் கணக்கு கேட்கவும் கூடாது. அல்லாமலும் வேலை செய்கிறவர்கள் கர்த்தருக்காய் உண்மையுள்ளவர்களாய் காணப்பட வேண்டும். ஆதலால் கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, இதனை வாசிக்கிறவர்கள், கருத்தில் கொண்டு நம்முடைய வாழ்வில் வந்த தவறுகள் ஏதாகிலும் உண்டானால், கர்த்தரின் பாதத்தில் நம் பாவங்களை அறிக்கைப்பண்ணி, மீண்டும் இப்படிபட்ட தவறுகள் வராமல் நம்மை பாதுகாக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.