தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 14: 27

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் என்றென்றும் சமாதானம் தங்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தில் உள்ள பொல்லாத வழிகளை விட்டு கர்த்தரின் பாதையாகிய நல்ல பாதையில் நடக்க கர்த்தரிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 15:13- 18

யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.

காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

சல்லூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.

யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்துவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான்.

மேற்கூறிய வசனங்களில் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.  காதியின் குமாரனாகிய  மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லூமை சமாரியாவிலே வெட்டிக்கொன்றுப்போட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். சல்லூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும்  திர்சா தொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்;அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்பதற்காக அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.  யூதாவின் குமாரனாகிய அசரியாவின்  முப்பத்தொன்பதாம் வருஷம் காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல் மேல் ராஜாவாகி சமாரியாவிலே பத்து வருஷம் ராஜ்யபாரம்பண்ணி அவன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தது மட்டுமல்ல, இஸ்ரவேலை பாவஞ்செய்யபண்ணின யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகாதிருந்தான். 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும  மனுஷர்கள் ராஜாவாக இருக்கும் வரையில் சமாதானம் கிடைக்க வில்லை.  இதன் காரணம் 

ஆதியாகமம் 49:10,11 

சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக்கழுதையின் குட்டியை நற்குல திராட்சைச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப் பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் நம்மில் நிறைவறும் போது நமக்குள் சமாதானம் விளங்கும்.  இதனைக்குறித்த கருத்துக்கள், கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த நாளில் தேவ கிருபையில் தியானிக்கலாம்.  இவற்றிக்காக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.