தேவனுக்கே மகிமையுண்டாவதாக

தீத்து 2:13

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம் ஆத்துமாவில் என்றென்றும் சமாதானம் தங்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 15:19-24

அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தை தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.

இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான்.

மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.

அசீரியாவின் ராஜாவாகிய பூல் தேசத்திற்கு விரோதமாக வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தை தன் கையில் பலப்படுத்தும்படிக்கு அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளிக்கொடுத்தான். அசீரியாவின் ராஜாவுக்கு மெனாகேம் இந்த பணத்தைக்கொடுப்பதற்கு பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளி சேக்கல் தண்டினான்.  அசீரியாவின் ராஜா தேசத்தில் நிற்காமல் திரும்பிப் போனான்.   மெனாகேமின் மற்ற வர்த்தமானங்கள் யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.  மெனாகாம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்த பின், அவன் குமாரனாகிய பெக்காகிய இஸ்ரவேலின் மேல் ராஜாவானான்.  யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்திலே, மெனாகாமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான்; அவன் இஸ்ரவேலை பாவஞ்செய்யப்பண்ணின நேபோத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை. ஆனாலும் ரெமலியாவின் குமாரன் பெக்கா 

2 இராஜாக்கள் 15:25 

ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும்; ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறியப்பிரகாரம் பெக்கா ராஜாவாகிறான்.  பெக்காகியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியுள்ளது.  யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்திலே  ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபது வருஷம் ராஜ்யபாரம்பண்ணி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான்.  இவனும் யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.  இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களிலை அசீரியாவின் ராஜாவாகிய திக்லாத் பிலேசர் வந்து, ஈயோனைக் கட்டி, 

2 இராஜாக்கள் 15:29 

இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.

மேற்கூறபட்டவைகளை சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுப் போனான். ஏலாவின் குமாரனாகிய ஒசெயா பெக்காவை, யூதாவின் குமாரனாகிய யோதாமின் இருபதாம் வருஷத்தில் வெட்டிக்கொன்றுப்போட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  மேலும் பெக்காவின் வர்த்தமானங்களும்  நடந்தவைகளும் 

2 இராஜாக்கள் 15:31-38

பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.

அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.

மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.

யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.

யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யோதாம் உயர்ந்த வாசலைக் கட்டினான்.  யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.  அந்நாட்களிலே கர்த்தர் சீரியரின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும், யூதாவுக்கு விரோதமாக அனுப்பத் தொடங்கினார்.  யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட ராஜாக்களை குறித்து நாம் தியானிக்கும் போது;  கடைசியாக கர்த்தர் இஸரவேலுக்கு ராஜாவாக யெகூவை அபிஷேகித்ததும்,அவனிடத்தில் நான்கு தலைமுறைகள் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்று சொன்னது நிறைவேறின பின்பு, கர்த்தர் இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகித்து யாரும் ராஜாவாக வரவில்லை என்பதும், பதவி ஆசைகளோடு மாம்சத்தால் ஜெயித்தவர்கள் ராஜாக்கள் ஆனார்கள் என்பதும் புரிய வருகிறது.   இப்படிபட்டவர்கள் கர்த்தருக்காக எதையும் செய்யாமல் தங்கள் உலக மேன்மைக்காகவும், சுகபோக வாழ்க்கைக்காகவும், நிர்பந்தமாகப்பெற்றுக்கொண்டு, தங்கள் இஷ்டம் போல் வாழ்ந்து  தங்களுக்கே கேடுண்டாக்கிக்கொள்கிறார்கள்.  இதனை போல்  நம்மிலும் அநேகர் வாழ்ந்து கடைசியில் பரம சிலாக்கியத்தைப்பெற்றுக்கொள்ளாமல் மறைந்து போகிறார்கள்; இப்படிப்பட்ட வாழ்வினால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துக்கொள்ள வேண்டும்.  மேலும் கர்த்தருக்காக முழுமையான இருதயத்தையும்,ஆத்துமாவையும், மனதையும் கொடுத்து வாழாவிட்டால், நாம் அவருடைய சேவை செய்தாலும், கடைசி நாட்களில் நம்முடைய சுதந்தரத்தை இழந்து விடுவோம் என்பதனை நிச்சயமாக புரிந்துக்கொள்ள வேண்டும்.  அல்லாமலும் கழிந்த நாளில் மனுஷன் ராஜாவாக இருக்கும் வரையில் தேசத்தில் சமாதானம் கடந்து வராது என்பதை பற்றி வாசித்தோம். மற்றும் நம் வாழ்வில் எந்த மனுஷனாலும் ஆத்துமாவில் சமாதானம் தரமுடியாது,  என்னவென்றால் எந்த மனுஷர்களும் மனுஷனுக்கு மனுஷன் ஆளுகை செய்வது தேவனுக்கு பிரியமில்லாத காரியம். கர்த்தரே நம்மை ஆளுகை செய்கிறவராக இருக்க வேண்டும்.  அவ்விதம் கர்த்தருடைய ஆளுகைக்குள் நாம் இருந்து கர்த்தருக்கு செய்ய வேண்டிய காரியத்தை கவனமாக தாழ்மையாக பணிவோடு செய்ய வேண்டும்.  அப்படி செய்யாமல் இருப்போமானால் பரம ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது என்பதனை அறிந்துக்கொள்ள வேண்டும்.  மேலும் நம்முடைய சமாதானம் இந்த உலகத்தில் வாழுகிறவரையிலும் மட்டுமல்ல, மேலோக நாட்டிற்கு நாம் சென்றடைந்து அங்கும் நித்திய சமாதானம்; நித்திய சந்தோஷம் காணவேண்டுமானால் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, அவருடைய இரத்தத்தில் நம்முடைய அங்கியை தோய்த்து வெளுத்தவர்களாக இருக்க வேண்டும்.  இந்த வாழ்க்கை நமக்கு கிடைக்கவேண்டுமானால் கர்த்தரின் சத்தம் மட்டும் நம் காதில் கேட்டு அதற்கு கீழ்படிவோமானால் நாம் கிறிஸ்துவினால் பேரின்ப பாக்கியம்  அடைய முடியும்.  இதற்காக நாம் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.