தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 116:9

நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்மிலிருக்கிற பொல்லாத கிரியைகளை நம்மை விட்டு கிறிஸ்துவினால் அழிக்க வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வில் நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 16:1-9 

ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.

ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்.

மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.

அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள்; ஆனாலும் ஜெயிக்கமாட்டாதே போனார்கள்.

அக்காலத்திலே சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு, யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள் வரைக்கும் அவ்விடத்திலே குடியாயிருக்கிறார்கள்.

ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச்சொல்லி;

கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான்.

அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.

மேற்கூறபட்ட வசனங்களில் ரெமலியாவின் குமாரன் பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.  ஆகாஸ் ராஜாவாகிற போது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்.  அவன் தன் தகப்பனாகிய தாவீதைப் போல், தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை  செய்யாமல் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து,கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு ,முன்பாக துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய் தீக்கடக்கப்பண்ணினான்.  மேடைகளிலும், மலைகளின் மேலும் பச்சையான சகல மரத்தி்ன் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான். அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின் மேல் யுத்தம் பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள்; ஆயினும் ஜெயிக்க மாட்டாதே போனார்கள். அப்போது சீரியாவி்ன் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாதைத் திரும்ப சீரியரோடே சேர்த்துக்கொண்டு, யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்.   சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள்வரைக்கும்  அங்கே குடியிருக்கிறார்கள். ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, நான்  உம்முடைய அடியானும், உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாக எழும்பின சீரிய ராஜாவின் கைக்கும், இஸ்ரவேலின் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கி விடும் என்று சொல்ல சொல்லி கர்த்தருடைய ஆலயத்திலும், ராஜாவின் ஆலய பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும், பொன்னையும் எடுத்து அசீரியாவின் ராஜாவுக்கு காணிக்கையாக அனுப்பினான். அசீரியா ராஜா அதற்கு செவிக்கொடுத்து தமஸ்குவுக்கு போய், அதை பிடித்து, அதின் குடிகளை கீர்பட்டணத்திற்கு சிறைபிடித்துப்கொண்டு போய், ரேத்சீனைக்கொன்றுப்போட்டான். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் தியானிக்கும் போது கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்யாமல் இருப்போமானால் கர்த்தர் நம்மில் பொறுமையோடு இருந்து  நாம் மனந்திரும்புவோம் என்று கர்த்தர் நமக்கு சில எச்சரிப்புகளையும் தந்து சத்துரு நம்மில் ஜெயம் எடுக்காதபடி காத்துக்கொள்கிறார்.  ஆனால் பொல்லாத எண்ணங்கள் நம் உள்ளத்தில் ஆத்துமாவை வஞ்சிக்க நாம் இடம் கொடுக்காதபடி கர்த்தர் சீரிய ராஜாவை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  சீரிய ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின்  குமாரன் பெக்காவும், எருசலேமின் மேலும் யுத்தம் பண்ண வந்து ஆகாசை முற்றிகை போட்டார்கள்; ஆனாலும் ஜெயிக்கமாட்டாதே போனார்கள்.  ஆதலால் நம்மில் ஒருபோதும் சீரியரின் கிரியைகளாகிய பொல்லாத துர் கிரியைகள் ஜெயம் எடுக்காதபடி சகலத்தையும் கர்த்தருடைய வசனத்தால் அழிக்கும்படியாக  நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.