தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 17:24 

பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் தந்திருக்கிற ஊழியம் நம்மை விட்டு மாறாதபடி ஜாக்கிரதையோடு காத்துக்கொ்ளள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்மிலிருக்கிற பொல்லாத கிரியைகளை நம்மை விட்டு கிறிஸ்துவினால் அழிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 16: 10-14 

அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டுபோய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் சாயலையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான்.

ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.

ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, அதின்மேல் பலியிட்டு,

தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை வார்த்து, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.

கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தான்.

மேற்கூறிய வசனங்களில் யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டு போய் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான்.  ராஜாவாகிய ஆகாஸ் அந்த பலிபீடத்தின் சாயலையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய  அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான்.  ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருவதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தை கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான். அவன் தமஸ்குவிலிருந்து வந்து பார்த்தபோது, அந்த பலிபீடத்தை சேர்ந்து அதன் மேல் பலியிட்டு, தன் சர்வாங்க தகனபலியையும், தன் போஜன பலியையும் தகனித்து தன் பானபலியை வார்த்து, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்த பலிபீடத்தின் மேல் தெளித்தான். கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கல பலிபீடத்தை அவன் தன் பிலிபீடத்திற்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதை தன் பலிபீடத்திற்கு வடபுறமாக வைத்தான்.  ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி சொன்னது 2 இராஜாக்கள் 16:15 -ல் எழுதப்பட்டுள்ளவைகளின்படியெல்லாம், ராஜாவின் கட்டளைபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.  பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் செய்தவைகள் 

2 இராஜாக்கள் 16:17-20 

பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் சவுக்கைகளை அறுத்துவிட்டு, அவைகளின்மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல ரிஷபங்களின் மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து,

ஆலயத்தின் அருகே கட்டியிருந்த ஓய்வுநாளின் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியருடைய ராஜாவினிமித்தம் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.

ஆகாஸ் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறப்பட்டுள்ள வார்த்தைகளின் படி  அசீரியருடைய ராஜாவினிமித்தம் கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.  மேலும் ஆகாஸ் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.  ஆகாஸ் தன்  பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய பகுதியில் ஆகாஸ் ராஜா தமஸ்குவின் பலிபீடத்தை போல் கட்ட வேண்டும் என்று ஆசாரியனாகிய உரியாவிடம் சொல்லியபோது, அவன் அங்கிருந்து வருவதற்கு முன் ஆசாரியனாகிய உரியா சகல பலிகளுக்கும் ஏற்றபடி பலிபீடத்தைக் கட்டவும் செய்த பிறகு, தன் பலிகளை எல்லாம் வார்க்கிறான்; ஆனால் வெண்கல பலிபீடத்தை ஆலயத்தில் இருந்த இடத்திலிருந்து மாற்றுகிறான்.  அது மட்டுமல்ல ஆதாரங்களின் சவுக்குகளை அறுத்து, அவைகளின் மேலிருந்த கொப்பரைகளை எடுத்து,  கடல் தொட்டியை கீழே நிற்கிற வெண்கல ரிஷபங்களின் மேலிருந்து இறக்கி, அதை கற்களின் தளவரிசையிலே வைத்து, ஆலயத்தின் அருகே கட்டியிருந்த ஓய்வு நாள் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும் ஆசீரியனுடைய ராஜாவினிமித்தம் ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.  இதனை கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துகிறது என்னவென்றால், நாம் கர்த்தரின் ஆலயமாய் அவருடைய மகிமையால் நிறைந்து இருக்கும் போது, அசீரியன் எப்போதும்  நாம் தரித்திருக்கிற கர்த்தருடைய நீதி, நியாயமாகிய ஆதாரத்தை நம்மை விட்டு அகற்றும்படியாகவே குறிகோள்களாக இருப்பான். மேலும் நம்மில் வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுகிற பன்னிரண்டு வகை ஊழியத்தையும் நம்மில் நிறைவேற்றி எடுக்காதபடி நம்மை வஞ்சித்து விடுவான்.  மேலும் கர்த்தர் நமக்குள் பிரவேசிக்காதபடியும், நமக்கு இளைப்பாறுதல் இல்லாமலும் நம்முடைய சிந்தனைகளை சிதறப்பண்ணுவான்.  இவ்விதமாக நம்முடைய வாழ்வு சீரழிந்து சிற்றன்பமும், உலக அலங்காரங்களும், ஆடம்பரங்களும் நம் வாழ்வில் வராதபடியும், பாவம் பெருகாதபடியும், பயத்தோடும், பக்தியோடும், பரிசுத்தத்தோடும்,கர்த்தரின் வசனபிரகாரம் நாம் நம்மை காத்துக்கொண்டு, நம்மில் ஆலயத்தின் மகிமை கெட்டுபோகாதபடியும், நம்மில் கிறிஸ்துவின் ஊழியம் எடுபட்டு போகாதபடியும்,  நாம் அனுதினம் எந்த பொல்லாத சத்துருவால் வஞ்சிக்கப்பட்டு போகாதபடி ஜாக்கிரதையோடு கூட கர்த்தருக்குள் வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.