தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 122:6,7

எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எருசலேமின் சமாதானத்தை குறித்து எண்ணம் உள்ளவர்களாகயிருக்கவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் முகத்தின் வெளிச்சத்திலே நடக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 17:19-23 

யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்.

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

இஸ்ரவேலர் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான்.

அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,

கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி, அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் இஸ்ரவேலரிடத்தில் கர்த்தருடைய கோபம் காணப்பட்டு அவருடைய முகத்தை அவர்களுக்கு மறைத்தார்.ஆனால் யூத கோத்திரமாத்திரமே மீதியாயிற்று.  ஆனால் யூத கோத்திரத்து ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். ஆகையால் கர்த்தர் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தை விட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார்.  இஸ்ரவேலர் தாவீது வம்சத்தை விட்டு பிரிந்து  நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்.  அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலரைக் கர்த்தரை விட்டு பின் வாங்கவும், பெரிய பாவத்தை செய்யப்பண்ணினான்.  அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லா பாவங்களிலும் நடந்து, கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி, அவர்களை தமது சமூகத்தை விட்டு அகற்றுகிறவரைக்கும்; அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்.  இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று  அசீரியாவுக்கு கொண்டுப்போகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். மேலும் அசீரிய ராஜா 

2 இராஜாக்கள் 17:24 

அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.

மேற்கூறப்பட்ட இடங்களிலுள்ளவர்களை வரபண்ணி  அவர்களை சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்.  இவர்கள் சமாரியாவை சொந்தமாக கட்டி அந்த பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.  அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்கு பயப்படாததினால் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்.  அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுப்போட்டது.  அப்போது அவர்கள் அசீரிய ராஜாவை நோக்கி கேட்டது என்னவென்றால்;  நீர் இங்கே இருந்து அனுப்பி அந்த பட்டணத்தில் குடியேற்றுவித்த அந்த ஜனங்கள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாததினால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவர்கள் தேவனுடைய காரியத்தை அறியாததினால் அவைகள் அவர்களை கொன்றுப்போடுகிறது என்றார்கள்.அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டு போயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்கு பயந்து நடக்க வேண்டிய விதத்தை அவர்களுக்கு போதித்தான்.  ஆனாலும் அந்தந்த ஜாதி தங்களுக்கு உண்டுபண்ணி அந்தந்த ஜாதியார் குடியேறின தங்கள் பட்டணங்களில் சமாரியர் உண்டுபண்ணின மேடைகளின் கோவில்களை வைத்தார்கள். 

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில், நாம் ஒவ்வொருவரும் நம்மையும் கர்த்தரின் வசனமும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.  எப்படியெனில்  பிரியமானவர்களே நாமும் கிறிஸ்துவினால் மீட்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றோம் என்று நமக்குள்ளே அநேகர் இருந்தாலும், கர்த்தரின் கற்பனைகளை கைக்கொள்ளாத காரணத்தாலும், எவ்வளவோ சத்திய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்து, தேவன் நம்மிடத்தில் கோபமுள்ளவராக இருந்தாலும் நாம் கைக்கொண்டுவருகிற பொல்லாத நடத்தைகளைகளை விட்டு விலகாமல் இருக்கிறோம்.  அப்படிபட்டவர்களை அசீரியன் சிறைபிடித்துகொள்கிறான்.  இப்படியாக அசீரியன் சிறைப்பிடிக்கிறான் என்றால் கர்த்தரின் கற்பனைகளை கைக்கொள்ளாமலிருக்கிறதால் அவர்கள் தங்கள் பொல்லாத வழியில் துணிந்து நடக்க தொடங்குவார்கள்.  அவ்விதம் அவர்கள் நடக்கும் போது அவர்கள் நடக்கிற பாதை அவர்களுக்கு சரியாக தோன்றும்; மட்டுமல்ல கர்த்தர் கொடுக்கிற நெருக்கத்தை அறியவுமாட்டார்கள்; அது ஏதோ தற்செயலாய் நடக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள். அல்லாமலும் அந்நிய தேவர்களை சேவிக்கிறவர்களை சமாரியாவில் கொண்டு வந்ததினால் அவர்கள் சமாரியாவில் பட்டணங்களை கட்டி அங்கே குடியேறினார்கள். ஆதலால் கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்புகிறார், அது சிலரைக் கொன்றுப்போடுகிறது. இதன் விளக்கம் என்னவென்றால் கர்த்தரையல்லாமல் அந்நிய தேவர்களை ஆராதிக்கிறவர்களை, நாம் கர்த்தரின் சந்நிதியில், சத்திய உபதேசத்தின்  சபைக்குள் கொண்டு வந்து சத்திய உபதேசத்தை கொடுத்து, புறஜாதியின் கிரியைகள் அவர்களிடத்தில் இராதபடி தங்களை முழுமையும் கர்த்தருக்காய் கொடுக்க வேணடும்.  இல்லவிட்டால் துர் உபதேசம் எனபது அவர்களுக்குள் வரும் என்பதற்காக, கர்த்தர் சிங்கங்களை அவர்களுக்குள் அனுப்பினார் என்று எழுதப்பட்டிருக்கிறது.  அந்த சிங்கங்கள் என்பது தேவனுடைய வார்த்தைக்கு மாறான செயல் உள்ளவர்களை கர்த்தர் சிங்கம் என்று சொல்கிறார். அப்படியாக தேவ வார்த்தைக்கு மாறான துர் உபதேசம் நாம் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால், நம்முடைய ஆத்துமா சாகும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இதனைக்குறித்து 

2 தீமோத்தேயு 4:15-17  

நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன்.

நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக.

கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகள் நாம் தியானிக்கும் போது உண்மையான சத்தியத்தின் பிரகாரம் நாம் செவிக்கொடுக்கிறவர்களாக மாற வேண்டும்.  ஆனால் சத்தியம் தெரியாதவர்களுக்கு சத்தியத்தின் வார்த்தைகளை போதித்து, அவர்களை சத்தியபாதையில் நடத்த வேண்டும். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால் கர்த்தரின் கோபம் அவர்களை ஆளும்.  அவருடைய சத்தம் கேட்டு கீழ்படிவோமானால் கர்த்தரின் சமாதானம் நம்மை ஆளுகை செய்யும்.  கர்த்தரின் சமாதானத்திற்காக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.