தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யாக்கோபு 1:8

இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் பிதாக்கள் செய்த பாவம் நாம் செய்யாதபடி நம்மை ஜாக்கிரதையோடு காத்துக்கொள்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் எருசலேமின் சமாதானத்தை குறித்த எண்ணம் உள்ளவர்களாக காணப்படவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 17:30-41 

பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்,

ஆவியர் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் தகனித்து வந்தார்கள்.

அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள்.

அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள்.

இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுயதிட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை.

கர்த்தர் இவர்களோடே உடன்படிக்கைபண்ணி, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்களுக்குப் பலியிடாமலும்,

உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு,

அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.

நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும்,

உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார்.

ஆனாலும் அவர்கள் செவிகொடாமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.

அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்துவருகிறார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தரை குறித்து அறியாத ஜாதிகளுக்கு ஆசாரியனை கொண்டு கர்த்தருக்கு பயத்து நடக்க வேண்டிய வசனத்தை போதித்தும், அந்தந்த ஜாதி தங்கள் தங்கள் தேவர்களை தங்களுக்கு உண்டுபண்ணி, அந்தந்த ஜாதியார் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர் உண்டுபண்ணின மேடைகளில் கோவில்களை வைத்தார்கள். அல்லாமலும் பாபிலோன் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும், ஆவியர் நிபேகாசையும், தர்தாக்கையும் உண்டாக்கினார்கள். செப்பர்வியர் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் தகித்து வந்தார்கள்.  அவர்கள் கர்த்தருக்கு பயந்ததுமன்றி, மேடைகளில் உள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள்.  அப்படியே கர்த்தருக்கு பயந்தும், தங்கள் விட்டு வந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களை சேவித்தும் வந்தார்கள்.  இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முறைமையின்படியே செய்து வருகிறதுமன்றி, அவர்கள் கர்த்தருக்கு பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுயதிட்டங்களின் முறைமையின்படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும்  கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை. கர்த்தர் இவர்களோடே  உடன்படிக்கைப் பண்ணி, இவர்களுக்கு கற்ப்பித்து என்னவென்றால் நீங்கள் அந்நிய தேவர்களை சேவியாமலும், அவர்களுக்கு பயப்படாமலும் அவர்களை பணிந்துக்கொள்ளாமலும், அவர்களுக்கு பலியிடாமலும், மகா வல்லமையினாலும், ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருத்து வரபண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துக்கொண்டு அவருக்கே பலியிட்டு, உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின் படியும், நியாயப்பிரமாண கற்பனைகளின்படியும், .நீங்கள் சகல நாளும் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்கு பயப்படாதிருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மட்டும் பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது கர்த்தர் உங்களை உங்கள் எல்லா சத்துருவின் கைக்கும் உங்களை தப்புவிப்பார் என்று அவர்களுக்கு சொல்லியிருந்தார்.  ஆனாலும் அவர்கள் செவிக்கொடாமல் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள்.  அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்கு பயந்தும், தங்கள் விக்கிரகங்களை சேவித்தும் வந்தார்கள்.  அவர்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வாக்கியங்கள், நாம் இப்போது  தேவனுக்கு விரோதமாக ஆவிக்குரிய பாதைக்கு மாறாக நடக்கிறதை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னத்தினாலெனில்  நம்மில் அநேகர்,தேவனுக்கும் பயப்படுகிறோம்; ஆனால் விக்கிரக மேடைகளிலும் சேவிக்கிறார்கள்.  அல்லாமலும் கர்த்தர் கற்பித்த நியாயபிரமாணத்திற்கு மாறாக அந்நிய தேவர்களுக்கு பயப்படுகிறோம். அப்படியாக இருவழியில் நடந்து கர்த்தருக்கு சித்தமில்லாததை செய்து நிலைதவறி தடுமாறி தத்தளித்து போகிறோம்.  ஆனால் கர்த்தருக்கு பயந்து ஒரே வழியில் நடப்போமானால் மட்டுமே அவர் நம்மை எல்லா சத்துருக்களின் கைக்கும் நம்மை தப்புவிப்பார்.  ஆதலால் கர்த்தரின் சத்தியத்தை கேட்கிற நாம் சத்தியத்தை விட்டு விலகி பிதாக்கள் செய்த பாவத்தை நாம் செய்யாதபடி காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.