தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1 கொரிந்தியர் 6:20
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
இஸ்ரவேலர் பலுகி பெருகுதல்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாட்களில் நாம் தியானித்த வேத பகுதியில் தேவன் ஆபிரகாமிடத்தில், ஈசாக்கினிடத்தின் உன் சந்ததி விளங்கும் என்று சொல்கிறார். ஈசாக்கினிடத்தில் விளங்கின சந்ததி தான் யாக்கோபு. யாக்கோபு நம் முற்பிதாக்கள் ஆராதித்து வந்த சபைகள் அவை தான் பாரம்பரிய சபை. அதிலிருந்து யாக்கோபை ஒரு ஆவிக்குரிய இஸ்ரவேலனாக மாற்றும் படியாக தேவன் வைத்த நோக்கம் தான்,தன் ஒரேபேறான குமாரனாகிய கிறிஸ்து தோன்றுகிறார். யாக்கோபுடைய வாழ்க்கையில் செய்த குற்றங்களை நாம் பார்த்தோம். அதனால் எகிப்திற்கு கொண்டு சென்று தேவனை சேவிக்கிதற்கும், அவரை ஆராதிக்கிறதற்கும் தேவன் முகாந்தரங்களை ஒருக்கி கொண்டு செல்கிறதை பார்க்கிறோம்.
மேலும், ஆபிரகாம்,ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் படியாக,
ஆதியாகமம் 46:3
அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன் நீ எகிப்து தேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.
இவ்விதமாக தேவன் எகிப்தில் தேவ ஜனத்தை பெருக பண்ணுகிறார். அங்கு வைத்துதான் யாக்கோபு பலுகி பெருகுகிறான். இவர்கள் பெருகாதபடி தடுக்கவே எகிப்தின் ராஜா திட்டம் பண்ணுகிறதை நாம் வேத வசனத்தில் வாசிக்க முடிகிறது. மேலும் எகிப்து தேசமும், கானான் தேசம் எல்லாம் பஞ்சம் கொடியதாயிருந்தது. பஞ்சம் கொடிதாயிருந்ததினால் தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற் போயிற்று. எகிப்து தேசமும், கானான் தேசமும் பஞ்சத்தால் மெலிந்து போயிற்று.
யோசேப்பு எகிப்து தேசத்திலும், கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதை பார்வோன் அரமனையிலே கொண்டு போய்ச் சேர்த்தான்.
எகிப்தியர் பணம் செலவழிந்த பிறகு யோசேப்பிடத்தில் எங்களுக்கு ஆகாரம் தாரும் பணம் இல்லை, நாங்கள் எல்லோரும் சாக வேண்டுமோ என்றார்கள்.
அதற்கு யோசேப்பு உங்களிடத்தில் பணம் இல்லாமற் போனால்,உங்கள் ஆடு மாடுகளை கொடுங்கள். அவைகளுக்கு பதிலாக தானியம் கொடுக்கிறேன் என்றான்.
அவர்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டு வந்தார்கள். யோசேப்பு குதிரைகளையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும் வாங்கிக்கொண்டு அந்த வருஷம் அவை எல்லாவற்றிற்கும் பதிலாக ஆகாரம் கொடுத்து அவர்களை ஆதரித்தான்.
ஆதியாகமம் 47:18-19
அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்து போயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றுமில்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.
நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத் தானியத்தைத் தாரும் என்றார்கள்.
இதனை வாசிக்கிற தேவனுடையஜனமே இப்போது நாம் நமக்கு விளங்குகிறது என்னவென்றால் எகிப்தியனுடைய ஆடுமாடுகள், எல்லாம் ஜனங்களுக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்தி,அந்த ஜனங்களை யோசேப்பு மூலம் தேவன் தானியத்தை கொடுத்து விலைக்கிரயமாக்குகிறார்.ஆடு மாடுகள், குதிரைகள், கழுதைகள் எல்லாவற்றையும் யோசேப்பினிடத்தில் கொண்டு வந்தார்கள் யோசேப்பு எல்லாவற்றிற்கும் ஆகாரம் கொடுத்து ஆதரித்தான் என்று பார்க்கிறோம்.
ஆடுமாடு, கழுதைகள், குதிரைகள் என்று எல்லாம் எழுதப்பட்டிருப்பது எகிப்திலுள்ள பலதரப்பட்ட மக்களை தேவன் திருஷ்டாந்தமாக காட்டுகிறார்.
பின்பு எகிப்தியர் அவர்களுக்குரிய சகலமும் தீர்ந்தபின்பு சொல்லுகிறார்கள். எங்கள் சரீரமும் எங்கள் நிலமும் ஒழிய,எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றுமில்லை என்று சொல்லுகிறார்கள்.
இப்போது நமக்கு தெரியவருவது என்னவென்றால் ஒவ்வொருவருடைய சரீரமும் நிலமாகிய இருதயம். தேவனுக்கு மிக முக்கியமான காரியம் என்பதை தேவன் எகிப்தியனுக்கு காட்டுகிறார். உலகத்தோடு ஒத்து வாழ்கிறவர்கள், உலக
சுகபோகங்களுக்கு இணங்கி வாழ்கிறவர்கள் எகிப்தியர்கள். தேவன் எல்லாவற்றையும் அவர்களை விட்டு நீக்கி சரீரமும் நிலமும் தேவன் வசிக்கும் இடமாக எடுக்கும்படியாகவே இவ்விதமாக செயல்படுகிறார்.
பின்பு தேவன் யோசேப்பை வைத்து எகிப்தின் நிலங்களை வாங்கி பார்வோன் கையில் ஒப்படைக்கிறார். இவ்விதமாக பூமி பார்வோனுடையதாயிற்று.
ஆசாரியர்களுடைய நிலம் மாத்திரம் அவன் வாங்கவில்லை.ஏனென்றால் அந்த நிலம் பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாக கொடுக்கப்பட்டதினாலும், பார்வோன் அவர்களுக்கு கொடுத்த மானியத்தினாலே ஜீவனம் பண்ணி வந்ததினாலும் அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.
ஆதியாகமம் 47:23
பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத்தானியம்; இதை நிலத்தில் விதையுங்கள்.
இதன் பொருள் என்னவெனில் பாவம் செய்தால் நம் வாழ்க்கை ஆகாரமில்லாத தேவ வசனம் கிடைக்காத பஞ்சம் வந்து நாம் வெறுமையாக்கப்பட்டு, பாவஞ் செய்தவர்களுக்கு ராஜாவாக பார்வோன் கையில் கொடுக்கப் படுவார்கள். பின்பு தேவ வசனமாகிய விதை தானியம் விதைக்கும் போது,நாம் (பாவஞ்செய்கிறவர்கள்) பார்வோனுக்குஅடிமையாகயிருக்கிறதினால் அதின் அவகாசம் ஐந்தில் ஒரு பங்கு பார்வோனுக்கு சேரும். மீதி நான்கு பங்கு வயலுக்கு விதையாகவும், உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் ஆதாரமாகவும் சேரும். இவ்விதமாக அநேகம் பேர் பார்வோனுக்கு அடிமையாக வாழ்கிறார்கள்.
எகிப்தில் கோசேன் நாட்டில் இஸ்ரவேலர் குடியிருந்தார்கள். அந்த நிலங்களை கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.
இஸ்ரவேலர் எப்படி பலுகிப் பெருகினார்கள் என்றால் எகிப்தியரின் நிலங்களை கையாட்சி செய்ததினால் பலுகி பெருகி, மிகவும் பலத்துக் கொண்டு இருந்தார்கள்.
சரீரமும், நிலமும் என்று சொல்லப்பட்டிருப்பது ஒவ்வொரு ஆத்மாவையும் தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார். நிலத்தில் விதை தானியம் விதைக்கப்படுவது நம் உள்ளத்தில் தேவ வசனமாகிய வித்துக்கள் விதைக்கப்படும் போது தேவராஜ்யம் நம்மிடத்தில் விளங்குகிறது. இவ்விதமாக இஸ்ரவேலர் எகிப்தின் நிலங்களை (ஆத்துமாக்களை)கையாட்சி செய்து மிகவும் பலுகி பெருகிக் கொண்டிருக்கிறார்கள். சபைகள் பெருகிக் கொண்டிருந்தது.
தேவன் எகிப்தில் வல்லமையான காரியங்களை செய்யும் படியாகவும், இஸ்ரவேலை சீர்படுத்தும் படியாகவும் பார்வோனை அழிக்கும் படியாகவும் தேவன் முன் குறித்து யோசேப்பை அங்கு கொண்டு சென்று, எகிப்தில் வைத்து இஸ்ரவேல் மரிக்கிறான்.
இவை எதற்கு அடையாளம் என்ன என்றால் நம் பாவத்திற்காக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஞானார்த்தமாய் எகிப்து என்றும் சோதோம் என்றும் சொல்லப்பட்ட இடத்தில் சிலுவையிலே அறையப்பட்டார்.
வெளிப்படுத்துதல் 11:8 சொல்லுகிறது.
ஞானார்த்தம் என்று சொல்லப்படுவது நம் ஆவி, ஆத்துமா,சரீரம் இவை பாவத்தின் அடிமையில் இருந்தால் இதற்கு அதிகாரி பார்வோனும் தேசம் எகிப்தாகவும்,பட்டணம் சோதோமாகவும் விளங்குகிறது.
அதனால் பிரியமானவர்களே இன்று நம் உள்ளத்தில் தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டு, நம் உள்ளத்திலிருந்து ஜீவ தண்ணீருள்ள நதியாகிய கிறிஸ்து வெளிப்படும் பொருட்டாக நம்மை முழுமையும் ஒப்புக்கொடுத்து, பாவத்துக்கு மரித்து, நீதிக்கு பிழைப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாக ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை.