தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 3:33
துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒருவர் செய்கிற தப்பிதத்திற்காக சபையாக தாழ்த்தி கர்த்தரிடத்தில் நம்மை ஒப்படைக்கவேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்தும இரட்சிப்புக்கு பின் கிறிஸ்துவின் கிருபையால் நம் ஆத்துமா வஞ்சிக்கப் படாமல் காக்கப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 20:1-2
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திரும்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
மேற்கூறப்பட்ட வசனங்களில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப்பின் குமாரனாகிய எசரத்தோன் பட்டத்திற்கு வந்தான். அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும்தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து சொன்னது; நீர் உமது வீட்டு காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்கிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா தன் முகத்தை சுவர்புறமாக திருப்பிக் கொண்டு கர்த்தரை நோக்கி
2 இராஜக்கள் 20:3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.
மேற்கூறியபடி கர்த்தரிடத்தில் சொல்லி அழுதான். ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்கு முன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி அவர் சொன்னது
2 இராஜாக்கள் 20:5,6
நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.
உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார்.
இந்த வார்த்தைகளை கர்த்தர் எசேக்கியாவினிடத்தில் சொன்னபின்பு ஏசாயா: அத்திபழத்து அடையைக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டு வந்த பிளவையின் மேல் பற்றுப்போட்ட போது அவன் பிழைத்தான்.
இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் எசேகிகியா பிளவை வியாதியால் நெருக்கப்பட்டுக்கொண்டு இருந்தான் என்று தெரிகிறது. அல்லாமலும்
2 நாளாகமம் 30:17-20
சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லாத எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள்.
அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள்.
எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான்.
கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் எசேக்கியாவின் நாட்களில் பஸ்காவை எழுதியிருக்கிற பிரகாரம் ஜனங்கள் ஆசரிக்கவில்லை. ஆதலால் எசேக்கியா கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்; அந்த விண்ணப்பத்தை கேட்டு கர்த்தர் ஜனங்களுக்கு அனுகூலமாயிருந்தார். அல்லாமலும்
2 நாளாகமம் 32:22-26
இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார்.
அநேகம்பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான்.
அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.
எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபமூண்டது.
எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை.
மேற்கூறப்பட்ட வசனங்களில் அவன் சகல ஜாதிகளிலும் மேன்மைபட்டவனாயிருக்கிறான். ஆதலால் அவன், கர்த்தர் செய்த உபகாரத்திற்கு தக்க நடவாமல் மன மேட்டிமைக்கொள்கிறான். ஆதலால் கர்த்தர் யூதாவின் மேலும், எருசலேமின் மேலும் கடும் கோபம் கொள்கிறார். பின்பு எசேக்கியாவின் மன மேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களை தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள் மேல் வரவில்லை.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகள் என்னவெனில் அசீரிய ராஜாவாகிய சனகெரிப்பின் குமாரன் எசரத்தோன் பட்டத்திற்கு வந்த அந்நாட்களில் எசேக்கியா வியாதிபபடுகிறான் என்றால்; நம் வாழ்வில் கிறிஸ்து ராஜாவாக நம் உள்ளத்தில் உயிர்தெழாவிட்டல் நம்முடைய ஆத்துமா மரணத்திற்கேதுவாக வியாதிப்படும் என்பதனை உணர்ந்துக்கொள்ளவேண்டும். அல்லாமலும் நம் மனதில் பல போராட்டங்கள் வந்தாலும் நம் ஆத்துமா மரணத்திற்கேதுவாக துக்கம் உண்டாகும். இந்த காரியங்கள் நமக்கு எசேக்கியாவை வைத்து கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் நாம் எருசலேமாக மாற்றப்படும் போது அசீரிய கிரயைகளாகிய பாரம்பரிய செயல்கள் நம்மை வாட்டும். ஆனால் நாம் கர்த்தருக்கு செம்மையானவைகளை செய்து கர்த்தரிடத்தில் விண்ணப்பம் செய்வோமானால் அவர் நம்மை அசீரியன் கையில் ஒப்புக்கொடாமல், அவரே நமக்கு தஞ்சமாக இருந்து நம்முடைய ஆத்துமாவை மரணத்தினின்று விடுவிக்கிறவர். அல்லாமலும் நாம் பரிசுத்தத்தில் நிலைத்திருந்து கர்த்தருக்கான காரியங்களை நடப்பிக்க வேண்டும். அல்லாமலும் நாம் ஒருபோதும் மனமேட்டிமைபடக்கூடாது. மனம்மேட்டிமையடைந்தால் கர்த்தர் நம்மிடத்தில் கடும் கோபம் உள்ளவராகிறார். அவ்விதம் கடும் கோபத்திற்கு நாம் காரணமாகாதபடி ஒருவர் தப்பிதங்களுக்காக எல்லாரும் தேவ சபை கூடி கர்த்தரிடத்தில் தாழ்மைபடுவோமானால் கர்த்தர் நமக்காக இரங்கி நம்மை மரணத்தினின்று விடுவித்து நம்மை இரட்சிக்கிறவர் என்பதனை அறிந்துக்கொள்ள முடியும். இவ்விதமாக நாம் யாவரும் கர்த்தரின் கையில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.