தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 6:4
திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் ஆலயமாக (மகிமையின் ஆலயமாக) எழும்புதல்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒருவர் செய்கிற தப்பிதத்திற்காக சபையாக தாழ்த்தி கர்த்தரிடத்தில் நம்மை ஒப்படைக்கவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 20:7-11
பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.
எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம்நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.
அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப் பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்.
அதற்கு எசேக்கியா: சாயை பத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான்.
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.
மேற்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகளை நாம் தியானிக்கையில் ஏசாயா எசேக்கியவைக் குறித்து கர்ததரின் வார்த்தைகள் சொல்லும் போது உன் கண்ணீரே கண்டேன்; உன்னை குணமாக்குவேன், மூன்றாம் நாளில் கர்த்தரின் ஆலயத்திற்கு போவாய், உன் வருஷங்களோடே பதினைந்து வருஷங்களை கூட்டுவேன் என்கிறார் என்றால் இது நமக்கு ஆத்மாவின் பலனுக்காக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் அத்திபழத்து அடையை கொண்டு வர சொல்லி, அதனை அவர்கள் கொண்டு வந்து அந்த பிளவையின் மேல் பற்று போட்ட போது அவன் பிழைத்தான் என்றால்; நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் கிருபையினால், அவருடைய மகிமையின் சாயலை தரித்து உயிர்தெழுகிறது என்பதனை கர்த்தர் நமக்கு விளக்கி காட்டுகிறார். பின்னும் எசேக்கியா கேட்டது கர்த்தர் என்னை குணமாக்குவதற்கும் மூன்றாம் நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போவதற்கும் அடையாளம் என்ன என்று கேட்டதற்கு ஏசாயா சொன்ன கர்த்தரின் அடையாளம் என்னவென்றால் சாயை பத்து பாகை முன்னிட்டு திரும்ப வேண்டுமோ, பத்து பாகை பின்னிட்டு திரும்ப வேண்டுமோ என்றுக் கேட்டான். அதற்கு எசேக்கியா சொன்னது: சாயை முன்னிட்டு போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டம்; சாயை பத்து பாகை பின்னிட்டு திரும்ப வேண்டும் என்றான். அப்பொழுது ஏசாயா கர்த்தரை நோக்கிக்கூப்பிட்டுகையில் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பத்து பாகைக்கு பாகை முன் போன சாயை பத்து பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.
பிரியமானவர்களே, மேற்கூறிய கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது எசேக்கியா கர்த்தரின் சந்நிதியில் தன்னை தாழ்த்தினபோது, அவன் கேட்டது போல் கர்த்தர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பத்து பாகை பின்னிட்டு திரும்பும்படி செய்து பதினைந்து வருஷம் ஆயுசு நாளைக் கூட்டுகிறார். அல்லாமலும் கர்த்தரின் நாளைக்குறித்து நாம் கணக்கு போடமுடியாது என்னவென்றால்
சங்கீதம் 90:4
உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.
மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தருக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள் போலவும் இராச்சாமம் போலவும் இருக்கிறது. ஆதலால் எசேக்கியாவின் ஆயுசில் கர்த்தர் பதினைந்து வருஷம் கூட்டினது கிறிஸ்துவின் சரீரம் தீர்க்காயுசுள்ளதாக நம் ஆத்துமாவின் இரட்சிப்பை குறித்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் அதனைக்குறித்து
ஏசாயா 38:15-21
நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப்பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.
ஆண்டவரே, இவைகளினால் மனுஷர் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும்பண்ணினீர்.
இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.
கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போடுங்கள்; அப்பொழுது பிழைப்பார் என்று ஏசாயா சொல்லியிருந்தான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்; ஆகையால் எங்கள் ஜீவ நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே நான் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதப்பட்டிருக்கிறதால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மில் உயிர்தெழும்போது, நம் ஆத்துமா உயிர்பிக்கப்பட்டு கிறிஸ்துவின் ஆலயமாக எழும்புகிறது. ஆதலால் நாமே அந்த கீத வாத்தியமாக கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணுவோம். இப்படியாக நம்மை ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.