தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 15:2
ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய பின் சந்ததி கர்த்தரின் வேலைக்காரராக மட்டும் இருக்க வேணடும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் ஆலயமாக (மகிமையின் ஆலயமாக) எழும்புதல் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
2 இராஜாக்கள் 20:12-21
அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை.
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான்.
அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.
அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்.
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் எசேக்கியாவுக்கு ஆயுசு நாளை கூட்டி, ஆகாசுடைய சூரிய கடியாரம் பத்துப்பாகைக்கு பாகை முன் போன சாயை பத்துப்பாகை பின்னிட்டு திரும்ப பண்ணின நாட்களில் பாலதானின் குமாரன் பெரோதாக் பாலதான் என்னும் பாபிலோன் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதை கேட்டு அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். எசேக்கியா அவர்களை அங்கிகரித்து பின்பு அவர்களுக்கு தன் பொக்கிஷ சாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுத சாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான். தன் அரமனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா காண்பியாத பொருள் ஒன்றுமில்லை. அப்பொழுது ஏசாயா எசேக்கியாவினிடத்தில் வந்து; அங்கு வந்தவர்களை குறித்து விசாரித்தான். அதற்கு எசேக்கியா அவர்கள் பாபிலோன் என்னும் தூர தேசத்திலிருந்து வந்தார்கள் என்றான். அப்பொழுது அவன் உம்மிடத்தில் என்னத்தை பார்த்தார்கள் என்று கேட்டதற்கு; எசேக்கியா சொன்னது என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவனுக்கு காண்பியாத பொருள் ஒன்றுமில்லை என்றான். அதற்கு ஏசாயா கர்த்தருடைய வார்த்தையை கேளும் என்று சொல்லி இதோ, நாட்கள் வரும், அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கபடாமல் எல்லாம் பாபிலோனுக்கு கொண்டுப்போகபடும். நீர் பெறபோகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களில் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்கிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா, ஏசாயாவிடம் நீர் சொன்ன கர்த்தருடையவார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான். எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்துக்குள்ளே வரபண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
2 நாளாகமம் 32:30-31
இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.
ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார்.
இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைக்கட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராக திருப்பினான். அல்லாமலும் பாபிலோன் பிரபுக்களின் சேனாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதங்களை கேட்க அவனிடத்திற்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனை சோதிக்கிறதற்காக தேவன் அவனை கைவிட்டார். எசேக்கியா தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின்பு, அவனை தாவீதின் வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனை கனம் பண்ணினார்கள். அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்டிருக்கிற வசனங்கள் நாம் தேவனுடைய ஆலயமாகிய, மகிமையின் ஆலயமாகவும், தேவனுடைய அரண்மனையாகிய தேவனுடைய வீடாகவும் மாற்றப்படுகிறதை அறிகிற பாபிலோன் ராஜாவாகிய உலகத்தின்ஆவியாகிய வலுசர்ப்பம் நம் உள்ளத்தில் இருக்கிற ஆவிக்குரிய நன்மைகளை சூறையாடும்படியாக வருகிறான் என்பதும், அவ்விதம் வரும்போது நாம் மிகவும் கவனத்தோடு காணப்பட வேண்டும். எப்படியெனில் கர்த்தர் நமக்கு தருகிற நன்மைகளை யாரிடத்திலும் வெளிப்படுத்துவது அவருக்கு சித்தமான காரியமல்ல என்பதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் கர்த்தரின் வசனம் சொல்கிறது மூடன் தன் உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் வெளிப்படுத்துகிறான். ஞானியோ அதனை பின்னுக்கு அடக்கி வைக்கிறான்.இங்கு நாம் பார்க்கும் போது எசேக்கியா எல்லா காரியங்களையும் பாபிலோன் ராஜாவினிடத்தில் வெளிபடுத்துகிறான். ஆதலால் அவன் குமாரருடைய காலத்தில் எல்லாம் பாபிலோனுக்கு சிறைபடுத்தப்பட்டுக் கொண்டுப்போகப்படுமென்று கர்த்தர் சொல்கிறார். இந்த காரியம் கர்த்தர் அவனுடைய இருதயத்தில் உள்ள எல்லாவற்றையும் சோதிக்கும்படி செய்கிறார். அதுபோல் நம் இருதயத்தையும் கர்த்தர் சோதித்துப்பார்க்கிறவர். ஆதலால் ஒருபோதும் கர்த்தரின் ஆலயமாகிய நம்மில் விளங்கும் ஆசீர்வாதங்களினால் நம்மை குறித்துப் பெருமைப்பாராட்டாதபடியும், நம் ஆத்துமாவில் விளங்கும் நன்மைகளினால் சபையாம் தலைமுறைகள் பாபிலோனால் வஞ்சிக்கப்படாமலும், பாபிலோனுடைய அரண்மனையில் வேலைக்காரராயிராதபடி, கர்த்தருக்கு வேலை செய்கிறவர்களாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.