தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 18:32
என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு கோபம் வருகிற காரியங்கள் நாம் செய்யக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய பின் சந்ததி கர்த்தரின் வேலைக்காரராக மட்டும் இருக்க வேணடும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 21:1-6
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள்.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து,
தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்.
எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,
கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி,
தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களின்படி எசேக்கியாவின் குமாரனாகிய மனாசே ராஜாவாகிற போது பன்னிரண்டு வயதாயிருந்து ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவன் தாயின் பெயர் எப்சிபாள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக துரத்தின ஜாதிகளின் அருவருப்புகளின் படியே அவன் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான். தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்து போட்ட மேடைகளை திரும்பவும் கட்டி, பாகாலின் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்தது போல விக்கிரக தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துக்கொண்டு அவைகளை சேவித்தான். எருசலேமிலே என் நாமத்தை விளங்க பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே பலிபீடங்களை கட்டி கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடத்தை கட்டி, தன் குமாரனை தீ மிதிக்கப்பண்ணி, நாள் பார்க்கிறவனும், நிமித்தம் பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்கு கோபம் உண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாக செய்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகளை நாம் தியானிக்கும் போது கர்த்தருக்கு கோபம் உண்டாகதக்கதாக அவருடைய ஆலயமாகிய நம்முடைய சரீரம் பலவிதத்தில் தீட்டாக்கிறோம். ஆதலால் அவருடைய ஆலயமாகிய சரீரம் கர்த்தருடைய நாமம் மட்டும் மகிமையாக விளங்க பண்ணும் படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.