தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 115:1

எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலயமாக மாற்றப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்மை தாழ்மையோடு ஒப்புக்கொடுக்கும்போது, சமாதானத்தோடு கர்த்தர் இளைப்பாறப்பண்ணுவார் என்பதனை குறித்த தேவ வசனம் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 23:1-6  

அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பரையெல்லாம் அழைப்பித்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது,

ராஜாவும், அவனோடு யூதாவின் மனுஷர் யாவரும் எருசலேமின் குடிகள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர்துவக்கிப் பெரியோர்மட்டுமுள்ள சகலரும் கர்த்தரின் ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.

அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்.

பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்.

யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.

தோப்பு விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்குப் புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்று ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளை ஜனபுத்திரருடைய பிரேதக் குழிகளின்மேல் போடுவித்தான்.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் உல்தாள் என்னும் தீர்க்கதரிசியின் வார்த்தைளை ராஜாவாகிய யோசியா கேட்டப்பின்பு, ராஜாவும், அவனோடு யூதாவின் மனுஷர் யாவரும், எருசலேமின் குடிகள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர், துவக்கி பெரியோர் மட்டுமுள்ள  சகலரும் கர்த்தரின் ஆலயத்திற்கு போனார்கள்; கர்த்தரின் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கையின் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் எல்லாருடைய காதுகள் கேட்க வாசித்தான்.  அப்பொழுது ராஜா தூண் அருகே நின்று, கர்த்தரை பின்பற்றி நடக்கவும், அவருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும் முழு இருதயத்தோடு ஜனங்கள் பின்பற்றி நடக்கவும், அந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் நிறைவேற்றவும் கர்த்தரின் சந்நிதியில் உணன்படிக்கைப்பண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள்.  பின்பு ராஜா பாகாலுக்கும், விக்கிரக தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும், வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்கு புறம்பாய் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து,  அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுப்போகப்பண்ணினான்.  யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமை சுற்றிலும் மேடைகளின் மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சர்வ சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களை அகற்றி விட்டான்.  தோப்பு விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்கு புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டு போய், அதை கீதரோன் ஆற்று ஓரத்திலே சுட்டெரித்து, அதை தூளாக்கி, அந்த தூளை ஜனப்புத்திரருடைய பிரேத குழிகளின் மேல் போடுவித்தான்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் தியானிக்கையில் கர்த்தருடைய வேத வசனங்களை நம்முடைய முழு உள்ளத்தோடும், முழு ஆத்துமாவோடும் கிறிஸ்துவோடுகூட இணைந்து நடக்க கற்றுக்கொள்ளவேண்டும்.  அல்லாமலும் நம்மில் இருக்கிற அந்நிய சேவையை கர்த்தரின் வசனமாகிய அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும். அல்லாமலும் அந்நிய ஆராதனை செய்கிறவர்களை நம்மை விட்டு அகற்ற வேண்டும்.  மேலும் நாம் எந்த விக்கிரக எண்ணம் உடையவர்களாக இருக்கக்கூடாது.  ஆதலால் பிரியமானவர்களே, நம்மளில் இருக்கிற எல்லா விக்கிரக எண்ணங்களையும் நம்மை விட்டு தூரமாக்க வேண்டும்.  இவ்விதமாக மாம்ச சிந்தைகள் அகற்றும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.