தேவனுக்கே மகிமையுண்டாவதாக
அப்போஸ்தலர் 17:25
எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயமாகிய பலிபீடம் கர்த்தரின் வசனத்தால் பரிசுத்தபட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலயமாக மாற்றப்படவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 23:7-10
கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.
அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியரையும் வரச்சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாமட்டும் ஆசாரியர்கள் தூபங்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, ஒலிமுகவாசல்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான்.
மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தரம்பெற்றார்கள்.
ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,
மேற்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவாகிய யோசுவா கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்கு கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான். யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்ல ஆசாரியர்களையும் வர சொல்லி கேபா முதல்,பெயர்செபா மட்டும் ஆசாரியர்கள் தூபங்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, ஒலிமுக வாசல்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்கு போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டண தலைவவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடைகளையும் இடித்துப்போட்டான். ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின் மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களை புசிக்கிறதற்கு மாத்திரம் உத்தரம் பெற்றார்கள். ஒருவனும் தன் குமாரரையாகிலும், தன் குமாரத்தியையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளதாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தை அவன் தீட்டாக்கி
2 இராஜாக்கள் 23:11-15
கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுமட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.
யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்.
எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியரின் அருவருப்பாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி,
சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் ஸ்தலத்தை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான்.
இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி விக்கிரத் தோப்பையும் சுட்டெரித்தான்.
மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கர்த்தரின் ஆலயத்திற்கு போகிற இடம் துவக்கி பட்டணத்திற்கு புறம்பேயிருக்கிற எல்லாவற்றையும் அகற்றி, கர்த்தருக்கு சித்தமில்லாத அத்தனையும் அக்கினியால் சுட்டெரித்து யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல் வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்து கீதரோன் ஆற்றில் கொட்டினான். மேலும் எருசலேமுக்கு எதிராக இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கட்டியிருந்த அத்தனை அருவருப்புகளின் மேடைகளையும் ராஜா தீட்டாக்கி, சிலைகளை உடைத்து, விக்கிரக தோப்புகளை நிர்மூலமாக்கி அவைகளின் ஸ்தலத்தை மனுஷ எலும்புகளால் நிரப்பினான். மேலும் இஸ்ரவேலை பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருக்கிற பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையை சுட்டெரித்துத் தூளாக்கி விக்கிரக தோப்பையும் சுட்டெரித்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட பகுதிகள் எல்லாம் நாம் கர்த்தரின் ஆலயமாகவும், அதில் பலிபீடமாகிய நம் இருதயம் பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். மேலும் ராஜாவாகிய யோசியா கர்த்தருக்கு சித்தமில்லாத அத்தனையும் இடித்துப்போட்டதையும், சுட்டெரித்துப்போட்டதையும் வாசிக்க முடிகிறது என்றால், நம் உள்ளத்தில் விக்கிரகமாக இருந்து, கர்த்தரின் பலிபீடத்தை அசுசிபடுத்துகிற அத்தனையும் கர்த்தரின் வார்த்தையாகிய அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும். மற்றும் இருதயத்தின் எண்ணங்கள் நினைவுகள், தோற்றங்கள் எல்லாம் நன்மையானவைகளாக இருக்க வேண்டும். சாலொமோனை போலவும், நேபோத்தின் குமாரனாகிய யெரொபெயாமை போலவோ பொல்லாத துர்கிரியைகள் எழும்பாதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த காரியங்களை வாசிக்கிற கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே நம்மில் எந்த பாவசுபாவமும் வராதபடி நம்மை காத்துக்கொள்ளவேண்டும்; அதுவே தேவனுக்கு பிரியமான ஆராதனை. இப்படியாக கர்த்தரின் ஆலயமாகிய நம் சரீரம் பரிசுத்தப்படும்படியாகவும், பரிசுத்தத்தோடு தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்யும்படியாகவும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.