தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 10:10
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை பரிசுத்தபடுத்தி பரிசுத்த பந்தியில் பங்கடைய வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவட்டி சபையாகிய நம்முடைய இருதயமாகிய பலபீடம் கர்த்தரின் வசனத்தால் பரிசுத்தமாக்கப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 23:16-23
யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான்.
அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனுஷர்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாய்க் கூறி, அறிவித்த தேவனுடைய மனுஷனின் கல்லறை என்றார்கள்.
அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவன் எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள்.
கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து,
அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனுஷரின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான்.
பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.
இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை.
ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே கர்த்தருக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலே ஆசரிக்கப்பட்டது.
மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகள் என்னவென்றால் யோசியா ராஜாவின் கட்டளைப்பிரகாரம் விக்கிரக தோப்புகள், சிலைகள், மேடைகள் எல்லாவற்றையும் இடித்து, சுட்டெரித்து தூளாக்கினபின்பு, ராஜாவாகிய யோசியா திரும்பி பார்க்கிறபோது, மலையிலிருக்கிற கல்லறைகளை கண்டு, ஆட்களை அனுப்பி கல்லறையில் இருக்கிற எலும்புகளை எடுத்து வரசெய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின அவருடைய வார்த்தையின் படியே, அவைகளை அந்த பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து அதை தீட்டாக்கினான். அவன் நான் காண்கிற இந்த குறிப்படையாளம் என்ன என்பதற்கு: யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்த கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாக கூறி, அறிவித்த தேவனுடைய மனுஷனின் கல்லறை என்றார்கள். அதற்கு அவன் இருக்கட்டும் ஒருவனும் அந்த எலும்புகளை தொட வேண்டாம் என்றான். அப்போது அவர்கள் அந்த எலும்புகளை சமாரியாவிலிருந்து வந்த எலும்புகளோடு விட்டு விட்டார்கள். கர்த்தருக்கு கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்கு செய்து, அந்த இடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின் மேல் கொன்று போட்டு, அவைகளின் மேல் மனுஷரின் எலும்புகளை சுட்டெரித்து எருசலேமுக்கு திரும்பினான். பின்பு ராஜா சகல ஜனங்களுக்கும் சொன்னது இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் பஸ்காவை ஆசரியுங்கள் என்று கட்டளையிட்டான். இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேல், யூதா என்ற ராஜாக்களின் நாட்களிலும் இந்த பஸ்காவை போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை. ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே கர்த்தருக்கு இந்த பஸ்கா எருசலேமிலே ஆசரிக்கப்பட்டது.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கிறிஸ்து பஸ்கா ஆட்டுகுட்டியாக நமக்காக பலியிடபடுகிறார் என்பதன் திருஷ்டாந்தம். என்னவென்றால் மலை என்றால் நம்மையும் அதன்மேல் உள்ள கல்லறை என்றால் நம் ஆத்துமா மரித்துக்கிடக்கிறதையும் காண்பிக்கிறார். சமாரியா என்பது புறஜாதிகளின் தேசம். தேவனால் அனுப்பப்பட்ட தேவனுடைய மனுஷர்களை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களை கொலைசெய்கிறோம். இவ்விதமாக நம்முடைய முழு உள்ளத்திலும் எந்த கனவீனமான கிரியைகள் எழும்பாதபடி முற்றிலும் பொல்லாங்கானவைகளை கர்த்தரின் வார்த்தையாகிய அக்கினியால் சுட்டெரித்து, பின் கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரித்து பின்பு நாம் கிறிஸ்துவினோடு உடன்படிக்கை செய்து பஸ்காவாகிய பரிசுத்த பந்தியில் பங்குக்கொண்டால் நம் ஆத்துமா பரிசுத்தமாக்கப்படும். இப்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.