தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119:8

உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சித்தம் செய்து அவர் மகிமை நம்மில் விளங்க செய்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்மை பரிசுத்தப்படுத்தி பரிசுத்த பந்தியில் பங்கடைய வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 23:24 

ஆசாரியனாகிய இல்க்கியா கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவேற்றும்படிக்கு, யோசியா அஞ்சனக்காரரையும், குறிசொல்லுகிறவர்களையும், சுரூபங்களையும் நரகலான விக்கிரகங்களையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஆசாரியனாகிய இல்க்கியா கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளை நிறைவேற்றும்படிக்கு ராஜாவாகிய யோசியா அஞ்சனகாரரையும், குறிச்சொல்லுகிறவர்களையும், சுரூபங்களையும், நரகலான விக்கிரகங்களையும், யூத தேசத்திலும், எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான்.  மேலும் 

2 இராஜாக்கள் 23:25-28  

கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை.

ஆகிலும், மனாசே கர்த்தருக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்:

நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்.

யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

மேற்கூறிய வசனங்களில்  கர்த்தரிடத்திற்கு தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் நடக்க மனதை சாய்த்தான்.  அவனைப் போலொத்த ராஜா அவனுக்கு முன் எழும்பினதுமில்லை, அவனுக்குப் பின் எழும்பினதுமில்லை. ஆகிலும் மனாசே கர்த்தருக்கு கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும், அவர் யூதாவின் மேல் கொண்ட மகா உக்கிரகத்தை விட்டு திரும்பாமல், நான் இஸ்ரவேலை தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தை விட்டு தள்ளி, நான் தெரிந்துக்கொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று சொன்ன என் ஆலயத்தையும் வெறுத்து விடுவேன் என்கிறார். யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால்,  நாம் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின் படி யெல்லாம் நடக்க முழு மனதையும் கர்த்தரிடமாக சாய்க்க வேண்டும்.  அல்லாமலும் நம்மிடத்தில் இருக்கிற  பொல்லாத அருவருப்புகளையெல்லாம் மாற்ற வேண்டும்.  ஆனால் அவருடைய ஆலயமாகிய நம் சரீரத்தில் தேவ மகிமை விளங்க செய்வேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தாலும் நாம் கர்த்தருக்கு கோபம் உண்டாக வேண்டிய காரியங்கள் நம்மளிலிருந்தால் நம்மை அவர் முகத்தினின்று தள்ளி, நம்மையும் வெறுத்து விடுவேன் என்கிறார்.  ஆதலால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,  நாம் ஒவ்வொருவரும் அவர் முகத்தினின்று விலகாமல் , நம்மை அவர் வெறுத்து விடாமல் அவர் சித்தம் செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.