தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 116: 17

நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் முன்னோர்களுடைய அக்கிரமத்தினால் தண்டிக்கப்படாமல் கிறிஸ்துவினால் இரட்சிக்கப்படுவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சித்தம் செய்து அவர் மகிமை நம்மில் விளங்க செய்ய வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

2 இராஜாக்கள் 23:29-37 

அவன் நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்றுபோட்டான்.

மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.

யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்.

அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி,

யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான்.

அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன் நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான்.

யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரானாகிய பெதாயாமின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் செபுதாள்.

அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

மேற்கூறப்பட்ட  வசனங்களில் யோசியா ராஜாவாக இருந்த நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பா்வோன்நேகோ அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போகிற போது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்: பார்வன்நேகோ அவனை மெகிதோவிலே கண்ட போது, அவனைக் கொன்றுப் போட்டான்.  மரணமடைந்த  அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின் மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்கு கொண்டு வந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்.  அப்போது தேசத்து ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவகாசை அழைத்து, அவனை அபிஷேகம் பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்திலே அவனை அபிஷேகம் பண்ணினார்கள்.  யோவகாஸ் ராஜாவாகிற போது இருபத்து மூன்று வயதாயிருந்து மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்.  லிப்னா ஊரானாகிய  எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின் பெயர் அமுத்தாள்.  அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான்.  அவன் எருசலேமில் அரசாளாதபடி பார்வோன் நேகோ அவனை ஆமாத்தேசமான ரிப்லாவிலே பிடித்து கட்டுவித்து, தேசத்தின் மேல் நூறு தாலந்து வெள்ளியையும். ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாக செலுத்தி , யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக வைத்து, அவன் பெயரை யோயாக்கீம் என்று மற்றி, யோவகாசை கொணடு போய் விட்டான்; இவன் எகிப்திலே அங்கே மரணமடைந்தான்.  அந்த வெள்ளியையும், பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்த பணத்தைக்கொடுக்கும்படி அந்த தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன்நேகோவுக்குக் கொடுக்கத் தக்கதாக தேசத்து ஜனங்களின் கையில் தண்டம் பண்ணினான். யோயாக்கீம் ராஜாவாகிற போது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின் பெயர் செபுதாள்.  அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்தான். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது, ராஜாவாகிய யோசியா கர்த்தருக்கு பயந்து நடந்ததை வாசிக்க முடிகிறது.  ஆனாலும் மனாசே  கர்த்தருக்கு விரோதமாக செய்த பொல்லாப்பினிமித்தம், அவருடைய கோபம் மாறாமல் இஸ்ரவேலை என் முகத்தை விட்டு தள்ளி விட்டது போல, யூதாவையும்  என் முகத்தை விட்டு தள்ளி, நான் தெரிந்துக் கொண்ட எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்றது போல கர்த்தர் யோசியாவை எகிப்தின் ராஜாவுடைய  கையில் ஒப்படைத்து, அவன் கொன்றுபோடப்படுகிறான்.  பின்பு அவன் குமாரனாகிய யோவகாசுடைய ராஜ்யபாரம் நிலைநிற்கவில்லை.  அவனும் எகிப்திற்கு விடபட்டு மரணமடைகிறான்.  பின்பு  யோயாக்கீமும்  அபராதமாக போட்ட வெள்ளியையும், பொன்னையும் பார்வோன்நேகோவுக்கு கொடுக்க தேசத்து ஜனங்கள் கையில் தண்டம் பண்ணுகிறான்.  அல்லாமலும் அவனும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்கிறான்.  இப்படியாக நம் முன்னோர்களால்  கரத்தருக்கு கோபம் உண்டாகியிருக்குமானால் நாமும் தண்டிக்கப்படுகிறோம்.  அதிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டுமாகில், கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாகி அவருடைய  இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டு, பரிசுத்தமாகி அவருக்காய் முழுமையும் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்தால் தண்டனையிலிருந்து தப்புவிக்கப்பட்டு, அவர் மகிமையில் விளங்க முடியும்.  இப்படியாக நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.