தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஓசியா 12:2

யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் குற்றமற்ற இரத்தம் சிந்த காரணமாய் இருக்கக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய முன்னோர்களின் அக்கிரமத்தினால் தண்டிக்கப்படாதபடி, கிறிஸ்துவினால் இரட்சிக்கப்படவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

 அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 24:1- 6

அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன்மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.

மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தை விட்டு அகற்றும்படி கர்த்தருடைய கட்டளையினால் அப்படி நடந்தது.

அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.

யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில், யூதாவை யோயாக்கீம் அரசாண்டுக்கொண்டிருக்கும் போது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அங்கு வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனை சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாக கலகம் பண்ணினான்.  அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளைகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும் அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.  மனாசே தன் செய்கைகளினால் செய்த பாவங்களினிமித்தம் யூதாவை தமது சமூகத்தை விட்டு அகற்றும்படி கர்ததருடைய கட்டளையினால் அப்படி நடந்தது. அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும், எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்க  சித்தமில்லாதிருந்தார்.  யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின் அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 

பிரியமானவர்களே, மேற்கூறப்படுகிற வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் யூதாவிடம் உள்ள கோபம் கர்த்தருக்கு தணியாமல் இருக்கிறதால் இவ்வளவு சத்துருக்களை அவர்கள் நடுவில் அனுப்பி யூதாவை அழிக்கிறார்.  அல்லாமலும் மனாசே யூதாவை வழிதப்பி போகபணணின பாவம்  காரணமாகையால் அவர்களை மன்னிக்க சித்தமில்லாதவராயிருக்கிறார்.  அது போல் குற்றமற்ற இரத்தபழிக்கு காரணமாக இருந்தால் நம்மில் அந்நிய ஆவியை அனுப்பி நம்முடைய ஆத்துமாவை தேவ சமூகத்தை விட்டுஅகற்றுகிறார்.  ஆதலால் பிரியமானவர்களே, இரட்சிக்கப்பட்டு, கர்த்தரை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுக்கொள்ளுகிறவர்களாகிய நாம் மற்றவர்களின் குற்றமற்ற இரத்தம் சிந்துதலுக்கு காரணமாக நாம் ஒருபோதும் கர்த்தருக்கு கோபம் உண்டாக நம் செய்கைகளினால் செயல்படக்கூடாது.  மேலும் இரட்சிக்கப்பட்ட நாம் கர்த்தருக்கு சித்தமில்லாத காரியங்களை செய்தால் கர்த்தர் நம்மை மன்னியார்.  ஆதலால் எப்போதும் ஜாக்கிரதையோடு கர்த்தருக்குள் நடந்துக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.