தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1கொரிந்தியர் 2:12

நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் உலகத்தின் ஆவிக்கு உள்ளத்தில் இடம் கொடுக்கக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் குற்றமற்ற இரத்தம் சிந்த காரணமாய் இருக்கக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 24: 7-9 

எகிப்தின் ராஜா அப்புறம் தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை; எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதிமட்டும் எகிப்தின் ராஜாவுக்கு இருந்த யாவையும் பாபிலோன் ராஜா பிடித்திருந்தான்.

யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள்.

அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யோயாக்கீம் நித்திரையடைந்த பின் அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  எகிப்தின் ராஜா அப்புறம் தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை.  எகிப்தின் நதி தொடங்கி ஐபிராத்தென்னும் நதிமட்டும் எகிப்தின் ராஜாவுக்கு இருந்த யாவையும் பாபிலோன் பிடித்திருந்தான்.  யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு  வயதாயிருந்து எருசலேமிலே மூன்று வருஷம் அரசாண்டான். எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின் பெயர் நெகுஸ்தான்.  அவன் தன் தகபபன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான்.  ஆதலால் 

2 இராஜாக்கள் 24:10-16 

அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது.

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான்.

அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக்கொண்டான்.

அங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம், கர்த்தர் சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,

எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்துக் கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.

அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனுஷராகிய ஏழாயிரம்பேரையும், தச்சரும் கொல்லருமாகிய ஆயிரம்பேரையும், யுத்தம்பண்ணத்தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

மேற்கூறப்பட்ட வசனங்களின் பிரகாரம் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்தியது என்னவென்றால் பாபிலோன் என்பது உலகத்தின் ஆவியை காட்டுகிறார்.  ஏனென்றால் இர்சிக்கப்பட்ட நாம் எகிப்தின் கிரியைகளாகிய பாவங்களுக்கு மீண்டும் அடிமைப்படுவோமானால் பாபலோனிய ராஜாவாகிய உலகத்தின் ஆவி நமக்குள் புகுந்து விடும். அப்படி உலகததின் ஆவி நம்மை வஞ்சித்து விட்டால் நாம் பெற்றிருந்த பரலோக ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும்.  மேலும் அந்த உலகம் ஒருவருக்குள் வருமானால் நம்மை சார்ந்த சபை முழுவதுக்குள்ளும் புகுந்து விடும்.  கர்த்தர் இவ்விதமாக சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, நாம் கர்த்தருக்கு விரோதமான பொல்லாப்பானதை செய்வோம். அல்லாமலும் இப்படி வாழுகிறவர்களை கர்த்தர் அவருடைய சமூகத்தை விட்டு அகற்றி தீருமளவும் கர்த்தருடைய கோபம் அவர்களோடிருக்கும்.  ஆதலால் பிரியமானவர்களே உலகத்தின் ஆவிக்கு நம் உள்ளத்தை கொடுக்காதபடி தேவனுடைய ஆவியினால் நிரப்பப்படவேண்டும்.  இப்படி தேவனுடைய ஆவியினால் நிரப்பப்படும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.