தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 84:12

சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை மட்டும் பின்பற்றுகிறவர்களாக  இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உலகத்தின் ஆவிக்கு உள்ளத்தில் இடம் கொடுக்கக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 25:1-2 

அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் சிதேக்கியா என்பது மத்தனியாவின் மறுபெயராகிறது.  அவன் யூதாவை ராஜ்யபாரம் பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாம் தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும், அதற்கு எதிராக கொத்தளங்களைக் கட்டினார்கள்.  அப்படி சிதேக்கியாவின் பதினோராம் வருஷம் மட்டும் நகரம் முற்றிக்கைப்போடப்பட்டிருந்தது. 

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்டவைகள் என்னவென்றால் கிறிஸ்துவினால் மீண்டெடுக்கப்பட்ட நாம் உலகத்தின் ஆவிக்கு அடிமைப்படுவோமானால் நம் ஆத்துமா உலகத்தால் சிறைப்படுத்தப்பட்டு, பின்பு சத்துருவினால் வஞ்சிக்கப்பட்டு, சத்திய வார்த்தைகளாகிய கர்த்தரின் வார்த்தைகளை விட்டு விட்டு மனம் போன போக்கில் நடந்து, நித்திய ஜீவனை இழந்துவிடுவோம்.  ஆதலால் நாம் எப்போதும் எல்லாவற்றிலும் கர்த்தரை மட்டும் பின்பற்றுகிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.