தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 19:24 

மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கற்பனைகளில் தவறாமல் நடக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை மட்டும் பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 25:3-7 

நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது.

அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.

கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,

சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்;  யூதாவை சிதேக்கியா அரசாண்டுக்கொண்டிருக்கையில் எருசலேம் நகரத்தை முற்றிகைப்போட்டதும், பின்பு நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் தேசத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனங்களுக்கு ஆகாரம் இல்லாமற் போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்புக் கண்டது.  அப்பொழுது கல்தேயர் நகரத்தை சூழ்ந்திருக்கையில், யுத்த மனுஷர் எல்லாரும் இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய்ச் சமனான பூமியை நோக்கி ஓடிப் போனார்கள்.  கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவை பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனை பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டு பிரிந்து போயிற்று.  அவர்கள் ராஜாவைப் பிடித்து ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டு போய் அவனை நியாயந்தீர்த்து, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களை குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனை பாபிலோனுக்குக் கொண்டு போனார்கள்.  பின்பு 

2 இராஜாக்கள் 25:8-12 

ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து,

கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.

காவல் சேனாபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடி வந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான்.

தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டிருந்தான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நாம் கருத்தில் கொள்ளும்போது பாபிலோன் ராஜாவின் ஊழியக்கரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து கர்த்தரின் ஆலயத்தையும், ராஜாவின் அரண்மனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து போட்டான்.  மேலும் அவனோடிருந்த கல்தேயரின் இராணுவத்தெல்லாரும் எருசலேமை சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள். நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாய் ஓடி வந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டு போனான்.  தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சதோட்டக்காரராகவும், பயிரிடுங் குடிகளாகவும் விட்டிருந்தான். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகள் நமக்கு திருஷ்டாந்தத்துக்கென்று விளக்கப்படுகிறது.  இதன் கருத்துக்கள் என்னவென்றால்  இரட்சிக்கப்பட்ட நம்முடைய  ஆத்துமா, பாபிலோனாகிய உலகத்தின் ஆவியினால் வஞ்சிக்கப்படும்போது, நம் ஆத்துமாவிற்கு ஏற்ற ஆகாரம் கிடைக்காது.  இப்படியாக நம் ஆத்துமா சோர்வடைந்ததாகில் நம் இரட்சிபாகிய மதிலில் திறப்புகள் விழும்.  அப்போது கல்தேயராகிய பாபிலோனியர்(உலகத்தின் கிரியைகள்) நம்மை சூழ்ந்துக்கொள்ளும்.  இவ்விதமாக சத்துருக்கள் நம்மை நெருக்குகையில் தேவகிருபையில்லா விட்டால் நாம் இடறி விழுவோம்.  பின்பு நாம் சத்துருவினால் பிடிக்கப்படுவோம்.  பின்பு நம் ஆத்துமாவின் சிந்தைகள் எல்லாம் சிதறடிக்கப்படும். இதற்கு காரணம் என்னவென்றால் கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்ளாமல் பொல்லாங்கானதை நடப்பிக்கிறபடியால் கர்த்தர் நம்மை பாபிலோன் ராஜாவாகிய உலகத்தின் அதிபதியின் கையில் ஒப்படைக்கிறார்.  அதன் பின்பு ஆத்மீக கண்கள் குருடாக்கப்பட்டு வெண்கல விலங்குகளால் கட்டப்படுகிறோம்.  பின்பு கர்த்தரின் ஆலயம்,  ராஜாவின் அரண்மனை, பெரிய வீடுகள் எல்லாம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுகிறது என்றால்; நாம் கர்த்தரின் ஆலயமாக விளங்கினபின்பு, நம்மை ராஜாவின் அரண்மனையாகவும், கர்த்தரின் வீடாகவும் ஆசீர்வதிக்கிறார்.  இதனை காண்கிற உலகத்தின் அதிபதியாகிய பிசாசானவன் எல்லாவற்றையும் சுட்டெரித்து, நம்மை சூழ அலங்கங்களையெல்லாம் இடித்து போடுகிறது.  அவ்விதமாக நம் உள்ளத்தை உலகத்தின் எண்ணங்கள் வஞ்சித்து சிறைப்படுத்தி விடும்.  அப்படியாக அந்த பாபிலோனண்டையில் போகிறவர்களையும், நகரத்தில் தப்பியிருந்த மீதியானவர்களையும் பாபிலோன் சிறைகளாக கொண்டுப்போகிறான்.  ஆனால் தேசத்தில் (கிறிஸ்துவின் சபையில் மீதியான ஏழை ஆத்துமாக்களில் சிலரை திராட்சதோட்டக்காரராகவும், பயிரிடும் குடிகளாகவும் விடுகிறான்.  ஆதலால் தான் பிரியமானவர்களே, நாம் இந்த நாட்களில் பார்க்கும்போது கொஞ்சம் ஐசுவரியம் உள்ளவர்கள் எல்லாம் தங்கள் மேன்மைகள், ஆடம்பரங்களை, மாம்சத்தை பேணுதல் இவைகளையெல்லாம் விட்டு விடாமல் தாங்கள் உலகத்திற்கேற்றபடி நடந்து  தங்களை தங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்.  ஆதலால் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்னார் ஐசுவரியவான் பரலோகத்தில் பிரவேசிப்பது, அரிதானது என்றார்.  ஆதலால் நாம் உலகத்தின் ஆவியோடு ஐக்கியபடாமல் ஜாக்கிரதையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.