தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 18: 18
என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் சிறையிருப்புக்கு திரும்பக் கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கற்பனைகளில் தவறாமல் நடக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 25:13-17
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.
சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் காவல் சேனாபதி எடுத்துக்கொண்டான்.
சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை.
ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.
மேற்க்கூறிய வசனங்களில் பாபிலோன் காவல் சேனாபதியாகிய நெபுசாரதான் சில ஏழை ஆத்துமாக்களை எருசலேமில் விட்டுவிட்டு மீதியானவைகளை பாபிலோனுக்கு பிடித்து சிறைகளாக கொண்டு போனான். மேலும் கர்த்தரின் ஆலயத்திலிருந்த எல்லா முக்கியமான பொருட்களையும், பணிமுட்டுகளையும் சேனாபதி எடுத்துக்கொண்டு போனான். மேலும்
2 இராஜாக்கள் 25:18-21
காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.
நகரத்திலே அவன் யுத்தமனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.
அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.
அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
மேற்கூறிய வசனங்களில் கர்த்தரின் ஆலயத்திலும், அதிலுள்ள முக்கியமான ஜனங்களையும் பாபிலோன் ராஜாவின சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்தில் கொண்டு போனான். அவர்களை பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான எரிப்லாவிலே வெட்டிக்கொன்றுப்போட்டான். இப்படியே யூத ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுப் போகப்பட்டார்கள்.
பிரியமானவர்களே, மேற்க்கூறப்பட்ட வசனங்களில் நாம் கர்த்தரின் ஆலயம் ஆனதால் பாபிலோனாகிய உலகம் நம்மை விழ தள்ளும்படியாக சிறைப்படுத்தி, கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஆத்துமாவை கொலைசெய்வதும், இவ்விதமாக இரட்சிக்கப்பட்ட மக்கள் உலகத்தின் ஆவியால் வஞ்சிக்கப்பட்டு சிறைப்படுத்தபடுகிறார்கள். ஆதலால் பிரியமானவர்களே, இரட்சிக்கப்பட்டு கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்ட நம் ஆத்துமா சிறையிருப்பில் அகப்படாதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.