தேவனுக்கே மகிமையுண்டாவதாக
உபாகமம் 33:19
ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரமாகிய கூடாரம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் பலவான்களின் நடுவே சிக்கறுக்கிறர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 நாளாகமம் 7:1-5
இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலுபேர்.
தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறுபேராயிருந்தது.
ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.
அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் இசக்காருடைய வம்சங்களிலும், அவர்களுக்கு சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம் பேராயிருந்தார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால், கர்த்தரால் தெரிந்துக் கொள்ளபட்ட நாமோ, கர்த்தரின் சத்திய வார்த்தைகளை கச்சையாக கட்டியிருப்போமானால், அவருடைய பெலன் தரிப்பிக்கப்பட்டு கர்த்தரின் கிருபைகளை காத்து நடப்போமானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பராக்கிரமசாலியாக நம்மில் வாசம்பண்ணுகிறார் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் கர்த்தர் இசக்கார் கோத்திரத்தின் வம்சத்தாரை குறித்து
ஆதியாகமம் 49:14-16
இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்.
தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் அவன் பலத்த கழுதை என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆதலால் இந்த ஜனங்கள் கிறிஸ்துவின் கூடாரத்தில் சந்தோஷமாய் தங்குவார்கள். இவ்விதமாக நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய கூடாரத்திற்குள் கிறிஸ்துவின் ஜீவன் பெற்று தங்கியிரும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.