தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 கொரிந்தியர் 4:20

தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் அபிஷேகம்பெற்று கர்த்தரின் வேலையை செய்ய வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு எல்லாவற்றிலும் உயர்ந்தவரும், சிறந்தவரும், புகழபடதக்கவருமாகிய கர்த்தராகிய கிறிஸ்து என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 9:14- 21

லேவியரில் மெராரியின் சந்ததியான அசபியாவின் குமாரனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,

பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் குமாரனாகிய சிக்ரிக்குப் பிறந்த மிகாவின் மகன் மத்தனியா,

எதுத்தூனின் குமாரனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியரின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் குமாரனாகிய ஆசாவின் மகன் பெரகியா,

வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரருமே; இவர்கள் தலைவன் சல்லூம்.

லேவிபுத்திரரின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல்காத்துவந்தார்கள்.

கோராகின் குமாரனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவன் பிதாவின் வம்சத்தாராகிய அவனுடைய சகோதரருமான கோராகியர் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் கர்த்தருடைய பாளயத்திலே வாசஸ்தலத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, வாசஸ்தலத்து வாசல்களைக் காத்துவந்தார்கள்.

எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான்.

மெசெல்மியாவின் குமாரனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாயிருந்தான்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் எழுதப்பட்ட லேவியரின் கோத்திரத்தின் சந்ததிகளில் வாசல் காக்கிறவர்களும், பணிவிடை வேலையை விசாரிக்கிறவர்களும், அல்லாமலும் ஆசரிப்புக்கூடார வாசல் காவல்காரர்களும் இருந்தார்கள். வாசல்களை காக்கிறதற்கு தெரிந்துக்கொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்று பன்னிரண்டு பேராயிருந்து, தங்கள் கிராமங்களின் படியே, தங்கள் வம்சத்து அட்டவணையில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், ஞானதிருஷ்டிகாரனாகிய சாமுவேலும், அவர்களை தங்கள் வேலைகளில் வைத்தார்கள். வாசலை காக்கிறவர்கள் நான்கு திசைகளிலும் இருந்தார்கள்.  அவர்கள் சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து ஏழு நாளுக்கு ஒருவிசை மாறிமாறி அவர்களோடிருக்க வருவார்கள்.  தேவாலயத்தின் பண்டகசாலைகள் மேலும், பொக்கிஷ சலைகள் மேலுமுள்ள விசாரணை உத்தியோகம் லேவியரான அந்த நாலு பிரதான காவலாளர் கரத்தில் ஒப்புவிக்கப்பட்டது.  அவ்விதம் ஒப்புவிக்கப்பட்டிருந்தபடியால் அவர்கள் தேவாலயத்தை சுற்றிலும் இராதங்கியிருந்து காலமே திறந்து விடுவார்கள்.  அல்லாமலும் சிலரிடம் ஆராதனை பணிமுட்டுகள் ஒப்புவித்திருந்தது.  அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டு போய்; பின்பு வெளியே கொண்டு வருவார்கள்.  மேலும் 

1 நாளாகமம் 9:29-44 

அவர்களில் சிலர் மற்றப் பணிமுட்டுகளின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மா, திராட்சரசம், எண்ணெய், சாம்பிராணி, சுகந்தவர்க்கங்களின்மேலும் விசாரணைக்காரராயிருந்தார்கள்.

ஆசாரியரின் குமாரரில் சிலர் சுகந்தவர்க்கத்தால் பரிமளதைலம் இறக்குவார்கள்.

லேவியரில் கோராகியனான சல்லூமின் மூத்த குமாரனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்புவித்திருந்தது.

அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.

இவர்களில் லேவியருடைய பிதாக்களின் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.

லேவியரில் பிதாக்களின் தலைவராகிய இவர்கள் தங்கள் சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள்.

கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.

அவன் மூத்த குமாரனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,

கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே.

மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலிருக்கிற தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.

நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

யோனத்தானின் குமாரன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.

மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.

ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலெமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.

மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பாயா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.

ஆத்சேலுக்கு ஆறு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் குமாரர்.

மேற்கூறப்பட்டவர்களில் சுகந்த வாசனைப்பொருட்களில் விசாரணைக்காரர்களும், பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்புவித்திருந்தது.  ஆனால் கோகாத் புத்திரரின் சிலருக்கு ஓய்வு நாள்தோறும் சமூகதப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது.  

இவ்விதமாக பிரியமானவர்களே, லேவிக் கோத்திரத்தாரும், அவர்களின் வம்சத்து குமாரருக்கும் ஆசரிப்பு கூடாரத்தின் முக்கியமான பணிகள் கொடுக்கப்பட்டிருந்தது,  ஆதலால் நம்முடைய ஆசாரியராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு  ஆசாரியத்துவமும் , அதின் சகல பணிகளும் அவரால் அபிஷேகம் பெற்றவர்களால் கர்த்தரின் வேலை செய்யப்படுகிறது. இவ்விதமாக நம்மையும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.