தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 33:5

கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நாளுக்கு நாள் ஆவிக்குரிய வளர்ச்சியில் விருத்தியடைய வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சீயோனில் பிரவேசிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 11:6-9 

எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.

தாவீது அந்தக் கோட்டையில் வாசம்பண்ணினபடியினால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.

பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான்.

தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.

மேற்கூறப்பட்ட கர்த்தரின் வசனங்களில் எபூசின் குடிகள் தாவீது சீயோன் கோட்டைக்குள் பிரவேசிப்பதில்லை என்று சொன்னாலும், தாவீது சீயோன் கோட்டையை பிடித்தான்.  எபூசியரை முறியடிக்கிறதில் எவன் முந்திக்கொள்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறி தலைவனானான்.  தாவீது அந்த கோட்டையில் வாசம்பண்ணினபடியினால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது.  பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கி சுற்றிலும் கட்டினான்.யோவாப் நகரத்தின் மற்ற  இடங்களை பழுது பார்த்தான்.  தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.  

பிரியமானவர்களே எபூசிய கிரியைகள்  சீயோனில் பிரவேசிக்க முடியாது என்று சொல்லி நம்மை தடை செய்வதால் அவர்களை நாம் முதலில் முறியடிக்க வேண்டும்; அப்படியானால் தான் நாம் சீயோனாக கிறிஸ்துவினோடு வாழ முடியும். ஆதலால் எபூசிய கிரியைகள்(மாம்சீக சிந்தைகள்) நம்மைவிட்டு முதலில் மாற்ற வேண்டும். பின்பு நம்முடைய ஒவ்வொரு காரியங்களிலும் நாம் கர்த்தருடைய வசனங்கள் பிரகாரம் நம்மை சீர்படுத்த வேண்டும். அப்போது தான் நாம் ஆவிக்குரிய வளர்ச்சியில் விருத்தியடைவோம்.  கர்த்தர் நம்மோடுகூட இருப்பார்.  இப்படியாக நாம் நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.