தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவேல் 2:27 

நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் யோர்தானை கடக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், கர்த்தருக்கு விரோதமான துர் உபதேசத்தை அழிக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம்தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 12:1-2 

தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில், சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து,

யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரரும், கவண்கல் எறிகிறதற்கும் வில்லினால் அம்பு எய்கிறதற்கும் வலது இடது கைவாட்டமான பராக்கிரமசாலிகளான மற்ற மனுஷருமாவன: சவுலின் சகோதரராகிய பென்யமீன் கோத்திரத்தில்,

தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில் சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரரும், கவண்கல் எறிகிறதற்கும்,  வில்லினால் அம்பு எய்கிறதற்கும் வலதுஇடது கைவாட்டமான பராக்கிரமசாலிகளான மற்ற மனுஷருமானவர்கள் சவுலின் சகோதரராகிய பென்யமீன் கோத்திரத்தில் 

1 நாளாகமம் 12: 3-7 

கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,

முப்பதுபேரில் பராக்கிரமனும் முப்பதுபேருக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத்,

எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா,

எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோரேகியரும்,

யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான எரோகாமின் குமாரருமே.

வசனங்களில் எழுதபட்டவர்கள், காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்க முகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம் போன்ற வேகமுள்ளவர்களாயிருந்து, யுத்த சேவகரான பராக்கிரமசாலிகளில் சிலரும் வனாந்திரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய் சேர்ந்தார்கள்.  அவர்களில் ஏத்சேர் என்னும் தலைவன், இரண்டாவது ஒபதியா, மூன்றாவது எலியாப், நாலாவது  மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா, ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல், எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சாபாத், பத்தாவது எரேமியா பதினொராவது மக்பன்னாயி, காத் புத்திரராகிய இவர்கள் இராணுவ தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும், பெரியவன் ஆயிரம் பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்..  யோர்தான் கரைபுரண்டு போகிற முதலாம் மாதத்தில் அதை கடந்து கிழக்கேயும், மேற்கேயும், பள்ளதாக்குகளில் இருக்கிற யாவரையும் இவர்கள் துரத்திவிட்டவர்கள்.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதன்னவென்றால் நாம் எந்த தரத்தாராயிருந்தாலும் கர்த்தரோடு சேர்வோமானால், அவர் நம்மை அவருக்காக ஆயத்தப்படுத்தி, சத்துருவோடு போரடி மேற்க்கொள்ளும் ஒரு ஆயுதமாக நம்மை மாற்றி, அவர் நம்மில் யுத்த வீரராக செயல்படுவார்.  அல்லாமலும் நாம் வாசிக்கும் போது கர்த்தர் தெரிந்தெடுத்தவர்கள் எப்படிபட்டவர்களாயிருந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  மேலும் தேவனுடைய பிள்ளைகளுக்கு வருகிற போராட்டத்தை எதிரகொள்ளுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்; இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் நம் தேவன்; அவரே எல்லாவற்றையும் நமக்கு முன்னின்று நடப்பித்து வெற்றியை தருகிறார்.  அப்படியானால் நம்  பந்த ஓட்டம் வெற்றியாகும், நம் வெட்கப்ட்டு போகமாட்டோம்.இப்படியாக நம்மையும் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.